பத்து மாடி கட்ட ரெண்டு நாள் போதும்

24 ஜனவரி 2024   05:30 AM 21 ஜூன் 2019   01:25 PM


பதினைந்து நாள்களில் 30 மாடி கட்டடம், 50 நாள்களில் 100 மாடிகள் கட்டுவதெல்லாம் சீனாவில் தான் சாத்தியம்.  ஆனால், அந்த ஃபாஸ்ட் மேக்கிங் டெக்னாலஜி மெல்ல இந்தியாவிலும் நுழைய ஆரம்பித் திருக்கிறது.  பாரம்பரிய முறையில் செங்கல், கலவை, மேற்பூச்சு பார்ட்டிஷியனில் கனமான சுவர்கள் போன்றவற்றைத் தவிர்த்தால் நம்ம ஊரிலும் இது சாத்தியம் என்கிறது இன்ஸ்டாகான் என்னும் வடிவமைப்பு நிறுவனம். ஹைதராபாத்தில் ஐடி வணிக பன்னடுக்குக் கட்டுமானம் ஒன்றை இந்த ஆண்டு இறுதியில் நிறுவ இருக்கிறது இன்ஸ்டாகான். சான்ட்விச் PUF வால்பேனல் என்கிற தொழிற்நுட்பம் மூலமாக இந்த சவாலை சாத்தியமாக்கி இருக்கிறது இன்ஸ்டாகான்.

  
வழக்கமான கான்கிரீட் அஸ்திவார பில்லர்களுடன் ஸ்டீல் பில்லர்களை பொருத்தி முன்கூட்டியே தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட கச்சிதமான அளவுகளை உடைய PUF வால் பேனல்கள் கிரேன்கள் மூலம் பொருத்தி இந்த மின்னல் வேக கட்டுமானங்களை உருவாக்குகிறது இன்ஸ்டாகான். இதனால் சென்ட்ரிங், தளம் போடுதல், கட்டு வேலை,  கியூரிங், மேற்பூச்சு, பட்டி பார்த்தல், தளம் போடுதல், நீராற்றுதல் போன்ற வழக்கமான கட்டுமானப் பணிகள் தவிர்க்கப்படுகிறது. 

இந்த நிறுவனம் இதற்கு முன்பே பஞ்சாபில் இது போன்ற ஒரு மின்னல் வேக கட்டுமானத்தை 2012 டிசம்பரில் செய்து முடித்திருக்கிறது.  48 மணி நேரத்தில் 10 அடுக்குகளை 200 தொழிற்நுட்பவியலாளர்கள்  மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள் கொண்டு 2553 கொண்ட ச.மீ பரப்பில் அந்தப் புராஜக்டை உருவாக்கியது. 

அஸ்திவாரம் தவிர வேறெங்கும் கான்கிரீட் பயன்படுத்தபடாத இக் கட்டிடத்தின் வலிமை ஒரு ச.மீக்கு 320 - 380 kg ஆகும். (லைவ் லோட்), டெட் லோட் (1200 kg - 1500 kg) ஆகும். 

இன்ஸ்டாகான் அந்தக் கட்டுமானத்திற்கு தேவையான பேனல்களை, தளங்களை, கூரைகளை தொழிலகத்திலேயே இரு மாதங்களாக 80% தயார் செய்து விடுகிறது.  அதிக பட்சம் 9 கோடியில் இந்த புராஜெக்டை செய்திருக்கிறது.  கிட்டத்தட்ட 200 டன்கள் இரும்பு பொருட்கள் மற்றும் 90% கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்பட்டு, அவற்றை கட்டுமான பணியிடத்தில் சரியாக பொருத்தினால் போதும் என்ற நிலையில் தயார் செய்து கொண்டு வரப்பட்டது. 

அதன் காரணத்தால், கட்டுமான பணிகளின் போது ஏற்படும் பல்வேறு பொருள் விரயங்கள் தவிர்க்கப்பட்டன.
மேலும், தரை, தண்ணீர் இணைப்புகள், ஏசி இணைப்புகள், இயற்கைக்கு பாதிப்பில்லாத நவீன மின் சாதனங்கள் ஆகியவை உபயோகிக்கப்பட்டு விரைவாக கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் மாசு, தூசு பாதிப்பு போன்றவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது போன்று உடனடியான 10 மாடி உயரம் கட்டிடம் இரண்டு நாட்களில் கட்டி முடித்து விடும் பட்சத்தில் அதன் பாதுகாப்பு பற்றி அனைவருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயற்கை. ஆனால், சென்னையில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கழகம் (Council of Scientific and industrial Research) (CSIR)  அமைப்பு இந்த கட்டுமானத்திற்கு தரச்சான்றிதழ் வழங்கி உள்ளதோடு, நிலநடுக்கம் (Zone V) ஏற்படும் சமயத்தில் நிலைத்து நிற்க ஏதுவாக கட்டுமானம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடம்பர அலுவல கங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை இவ்வாறு 48 மணி நேரத்தில் அமைக்ககூடிய தொழில் நுட்பத்தைத் தலைமையேற்று கட்டி முடித்தவர் இன்ஸ்டாகானின்  ஹர்பால் சிங் என்ற பொறியாளர் ஆவார்.

தற்போது வணிகவளாகங்கள், ஐடி பார்க்குகள், தொழிற் கூடங் களுக்கு மட்டுமே புராஜெக்டு களை செய்து வரும் இன்ஸ்டாகான் விரைவில் குடியிருப் புகளையும் PUF Wall panel  (Pudf galvalune coated sheet) கொண்டு உருவாக்க இருக்கிறதாம். 

PUF தொழிற்நுட்பம் இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்து  மெல்ல தென்னிந்தியாவின் எல்லையைத் தொட்டிருக்கிறது.. இது கூடிய சீக்கிரம் தமிழகத்திற்கும் பரவினால் ச.அடி வெறும் 1000 ரூபாய் செலவில் தரமான கட்டடம் கிடைக்கும்..

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067564