இன்றைய காலகட்டத்தில் அனைத்து கட்டடங்களும், தூண்கள் மற்றும் பீம்களை அடிப்படையாகக் கொண்டு தான் கட்டப்படுகின்றன. இதனால், அஸ்திவாரம் முதல் மேல்தளம் வரையிலான பல் வேறு நிலைகளில் இதற்கான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியை ஒப்பந்த தாரரிடம் விட்டுருந்தாலும். தூண்கள், பீம்கள் அமைப்பதில் பின்பற்றப்படும் நடை முறை குறித்து நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதில் பெரும்பாலும், கட்டுமான ஒப்பந்தங்களில் எத்தனை தூண்கள், எத்தனை பீம்கள் அமைக்கப்படும்; அவற்றின் அளவுகள் என்ன என்பதை கூட, சில நிறுவனங்கள் தெரி வித்து விடுகின்றன.
ஆனால், இந்த தூண்கள், பீம்கள் அமைக்க பின்பற்றப் படும் வழிமுறை குறித்து எந்த நிர்வகமும் கட்டுமான ஒப்பந்தத்தில் உறுதியளிக்க முன்வருவது இல்லை.
சட்டங்கள்
பொதுவாக, தூண்கள், பீம்கள் அமைக்கும் போது கம்பி கூடு கட்டும் பணிகள் வரை பலரும் கண்காணிக் கின்றனர். அதில், கான்கிரீட் கலவை கொட்டும் பணியில் தலையிடுவது இல்லை.
இதில் கம்பி கூடு கட்டி முடித்த பின், அதை சுற்றி ஷட்டரிங் செய்ய வேண்டும். இதற்கு, மரச் சட்டங்கள் அல்லது இரும்புச் சட்டங்களும் பயன்படுத்தப்படும். இந்த ஷட்டரிங் தான் எல்லையாக இருந்து தூண்கள், பீம்களில் வெளிப்புற வடிவத்தை உறுதி செய்யும். பெட்டி போன்ற வடி வத்தில் இருக்கும் இந்த ஷட்டரிங் உள்ளே கான்கிரீட்டை கொட்டும் போது அது எல்லா பகுதிகளிலும் பரவுவதை பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்கான பணிகள் துல்லியாமாக நடக்கிறதா என்பதை மேஸ்திரியும், கள மேற்பார்வையாளரும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவசரம்
இதன் பின், 48 மணி நேரத்துக்கு பிறகே ஷட்டரிங் சட்டங்களை பிரிக்க வேண்டும். கோடை
காலமாயிற்றே கான்கிரீட் விறைவில் கெட்டியாகி இருக்கும் என்று நினைத்து ஷட்டரிங் சட்டங்களை அவசரப்பட்டு பிரித்தால், ஒரங்கள், முனைகள் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை பூச்சு வேலையில் சரி செய்தாலும் இதன் பாதிப்பு குறைந்து விடாது.
எனவே, தூண்கள், பீம்கள் அமைக்கும் போது ஷட்டரிங் சட்டங்களை பிரிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067550
|