1. உட்புற சுவர்களில் பொதுவான இடங்களில் தரையில் இருந்து, மூன்று அடி வரை டைல்ஸ் ஒட்டினால் போதும். ஆனால், சிலர் குளியலறை, கழிப்பறைகளில் முழு சுவரிலும் டைல்ஸ் ஒட்டுகின்றனர்.
2. பூச்சு வேலை செய்யப்பட்ட சுவரில் டைல்ஸ் ஒட்டும் முன், அதன் மேல் பகுதியை சொரசொரப்பாக செய்ய வேண்டும்.
3. கற்களை பதிக்கும் முன், சுவரை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. சுவரில் மட்டும் கலவை பூசினால் போதாது, கற்களின் பின்புறத்திலும், அரை அங்குலம் அளவுக்கு சிமென்ட் கலவையை பூச வேண்டும்.
5. பதிகற்களின் வண்ணத்துக்கு ஏற்ற வண்ண தூளையும், வெள்ளை சிமென்ட்டையும் சேர்த்து இனைப்பு பகுதிகளில் பயன்படுத்த வேண்டும்.
6. டைல்ஸ் நன்றாக ஒட்டி உள்ளதா என்பதை உறுதி செய்தபின், அதன் மேல்புறத்தை துடைக்க வேண்டும்.
7. தரையில் இருந்து மேல் நோக்கிய முறையிலேயே டைல்ஸ் ஒட்டுவது நல்லது. மேலிருந்து கீழாக ஒட்டினால், கடைசியில் ஏற்படும் இடை வெளியை அட்ஜஸ்ட் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067548
|