மின்னியல் மின்னணுவியல் துறைச் சார்ந்தவர்கள் தவிர மற்ற பேருக்கு எலக்ட்ரிகல் எர்த்திங் என்பது பற்றி சரிவரத் தெரியாமல் இருக்கிறது. ஒரு கட்டடத்தையும் அதில் உள்ள மின்சாதனங்களையும் பாதுகாப் பாக வைப்பதற்கு முறையான எலக்ட்ரிக்கல் எர்த்திங் அவசியமாகும். இதில், பல்லாண்டுக் காலம் அனுபவம் உடைய கோவையைச் சேர்ந்த ஹை - டெக் எர்த்திங் நிறுவனத்தின்உரிமையாளர் திரு. பிரகாஷ் நாயர் அவர்களிடம் கட்டட எர்த்திங் பற்றிக் கேட்டபோது,
“”ஒரு மின் பொருள் இயங்கும் பொழுது அதிலிருந்து ஒரு fault Current உற்பத்தியாகும். அது அந்த Machine - ல் உள்ள உலோக பாகங்களில் கடந்து சென்று அந்த Machine - யையும் , மனித உயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும். அதை தடுப்பதற்காகவே கசியும் மின்சாரத்தை எடுத்து செல்ல தனியாக ஒரு ஒயர் அமைத்து அதை பாதுகாப்பாக பூமியில் கடத்தி விடுவதே எர்த்திங் செய்வதன் அவசியமாகும்’’ என்றார்.
எந்தெந்த மின் பொருட்களுக்கு எர்த்திங் அவசியமாகிறது?
“”மின்சாரத்தினால் இயங்கும் அனைத்து பொருட்களுக்கும் எர்த்திங் அவசியமானதாகும். முக்கியமாக வீடு, ஆபிஸ், தொழிற்சாலைகள், Lift, ஜெனரேட்டர், Transformer Solar Plant ,Lightning Arrester, etc.. க்களுக்கு எர்த்திங் செய்வதினால் அந்த உபகரணங்களுக்கும் மனித உயிர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யலாம்’
சோலார் பேனல்களுக்கு எர்த்திங் அவசியமா? ஏன்?
“”சோலார் பேனல்களில் உற்பத்தியாகும் மின்சாரம் D.C (Direct Current) ஆகும். அதை ஒரு மின்மாற்றியில் A/C (Alternative Current) ஆக மாற்றி நம் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றுகிறோம். மழைக்காலங்களில் இடி மின்னல்களின் தாக்குதல்களிலிருந்து Solar Panel களை பாதுகாக்க Lightning Arrester அமைத்து அதை Earthing உடன் Connect செய்கிறோம்.
ஆக மொத்தம் 4 உபயோகங்களுக்கு எர்த்திங் செய்யப்படுகிறது (D.C Earthing, A/C Earthing, Invertor equipment eaqrthing & Lightning Arrester Earthing)’’
Hi Tech எர்த்திங் நிறுவனத்தைப் பற்றியும் அதன் சேவையைப் பற்றியும் கூறுங்கள்?
“”கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரக் கட்டமைப்புச் சேவைகளை செய்து வந்த நாங்கள் பெரும்பாலான மின்பழுதுகளும் விபத்துகளும் எர்த்திங் சரிவர செய்யாததினாலும் அதை சரியாக பராமரிக்காததினாலும் தான் என்பதை புரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் கடந்த 2009 ம் ஆண்டு எர்த்திங் மற்றும் Lightning Arrester சேவைகளை மட்டும் செய்வதற்காக துவங்கப்பட்ட நிறுவனம் தான் Hi Tech Earthing. நாங்கள் இந்த துறையில் பல விதமான மின் பழுதுகளுக்கு சரியான தீர்வையும் அளித்து வருகிறோம்’’.
சாதாரண வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உங்கள் சேவை எவ்வாறு மாறுபடுகிறது?
“”தனிவீடுகளுக்கு மின் இணைப்பு பலகை (Service panel) என 3 எர்த்கள் போதுமானதாகும். அடுக்குமாடி குடியிருப்புகளில் Service panel- 2 Nos, Common Service - 1 No, Lift- 2 Nos, Generator- 3 Nos, இடிதாங்கி 3 Nos மற்றும் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக ஒரு எர்த்திங் தேவைப்படும்’’.
உங்கள் தயாரிப்புக்கு கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி.
“”Bangalore - ல் உள்ள மத்திய அரசின் Central Power Research Institute CPRI- ல் எங்களது Earth rod சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளோம்’’ எனத் தெரிவித்தார் பிரகாஷ் நாயர்.
Hi Tech Earthings
பிரகாஷ் நாயர், 29, எஸ் எஸ் மில் ரோடு,
காட்டூர்,
கோவை - 641009
பேசி : 0422- 2387322 / 98422 23662 / 94896 23557
இமெயில் : info@electricalearthing.com
Web : www.electricalearthing.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067585
|