ரெடி மிக்ஸ் கான்கிரீட்டில் தரமும், குறித்த நேரத்தில் டெலிவரியும் மிக முக்கியமானதாகும். கோவையைச் சேர்ந்த சிக்ஸ் சிக்மா என்னும் ஆர்.எம்.சி கான்கிரீட் தயாரிப்பு நிறுவனம் இந்த இரண்டிலும் தன்னிறைவு கொண்டதாக இருப்பதால் கொங்கு மண்டலத்தில் உள்ள கட்டுநர் காண்ட்ராக்டர்களுக்கு மிகச்சிறந்த கான்கிரீட் பங்களிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. சிக்ஸ் சிக்மா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.எம்.சி.சீனிவாசன் அவர்களிடம் பேசியபோது,
உங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கூறுங்கள்?
“”சிக்ஸ் சிக்மா நிறுவனம் 2016-ம் ஆண்டு கோவையில் தொடங்கப் பட்டது. மிகக்குறுகிய காலத்தில் கான்கிரீட் தயாரிப்பில் கோவை & சென்னை முன்னணி நிறுவனமாக உள்ளது. கான்கிரீட் தயாரிப்பில் ISO தரக்கொள்கையின் படி நன்றாக தயாரித்துக் கொடுக்கிறோம். முதலில் கோயம்புத்தூர் & சென்னை ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனியை L & T கம்பெனி மூலமாக அறிமுகப் படுத்தினோம். இப்போது சென்னை யில் ஐந்து இடத்திலும், கோவையில் மலுமிச்சம்பட்டியில் ஒரு கிளையும் , மேட்டுப்பாளையம் சிறுமுகையில் ஒரு கிளையும் உள்ளது. ISO 9001- 2015 தர அங்கீகாரம் பெற்றுள்ளோம்.’’
உங்கள் நிறுவனம் தயாரிக்கும் கான்கிரீட் மற்றும் உங்கள் சேவை பற்றிக் கூறுங்கள்?
“”எங்கள் நிறுவ னத்தில் தரமான ரெடி மிக்ஸ் கான்கிரீட் கலவையை தயாரிக்கின்றோம். மிகுந்த தரமாகவும் மற்றும் சரியான நேரத்திலும் & விலையிலும் கான்கிரீட்டை வாடிக்கையாளருக்கு அளிக்கிறோம். மிக உயர்தரமான உபகரணங்களை வைத்து கான்கிரீட் தயாரிக்கிறோம். அந்த உபகரணங்களை வைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை எடை அளவு சரிபார்த்து தரத்தை நிர்ணயம் செய்கிறோம். தரம், அளவு சரியான விகிதத்தில் மாற்றுக்கருத்து இல்லாமல் வாடிக்கையாளருக்கு கொடுக்கிறோம்’.
உங்கள் தொழிற்சாலையில் ஆர் எம் சி கான்கிரீட் தயாரிக்கப்படும் விதம் பற்றி ?
“”நாங்கள் தயாரிக்கும் கான்கிரீட், “பேட்சிங் பிளான்ட்’ என்னும் உபகரணத்தின் மூலம் கான்கிரீட்டுக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தும் சரியான எடை அளவில் எடுக்கப்பட்டு & சரிபார்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மேனுவல் கான்கிரீட் தயாரிக்கும் போது கனஅளவு விகிதம், கலவை தயாரிக்கப்படும் முறையை மாற்றி அமைத்து எடை அளவு முறைப்படி அனைத்து மூலப்பொருள்களும் சரியான விகிதத்தில் கலந்து அதனுடன் தண்ணீர் (litre) தேவையான அளவு எடுத்துக் கலவை தயாரிக்கப்படுகிறது.
இதன் மூலமாக தயாரிக்கப்படும் கான்கிரீட் - ன் தரம் நிர்ணயக்கப் படுகிறது. இவ்வாறு தயாரித்த கான்கிரீட்கலவையை Transt Mixer என்ற வண்டிகளின் மூலம் தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று கான்கிரீட் பம்பின் மூலம் கான்கிரீட்டை 5 மாடி முதல் 10 மாடி வரை கான்கிரீட் கொண்டு செல்லப்படுகிறது. மிக்சர் இயந்திரம் மூலம் பணியிடத்திற்குக் கொண்டு செல்வதால் வேலை ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்து செலவினத்தை குறைக்க வழிச் செய்கிறோம்’
உங்கள் நிறுவனத்தின் வெற்றிப்பயணம் குறித்து ?
“”ஆரம்பித்த 3 வருடத்தில் மாதம்தோறும் 12,000 உற் து கான்கிரீட் supply செய்யும் அளவிற்கு உயர்ந்து உள்ளோம். மாநில ரெயில்வே பணிகள், நெடுஞ்சாலை பணிகள், பொதுப்பணிதுறைப் பணிகள். தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கட்டுமானப்பணிகள் என அனைத்திற்கும் நாங்கள் தான் கான்கிரீட் சப்ளை செய்கிறோம். மேலும், தனியார் அடுக்குமாடி தனிவீடுகளுக்கும் நாங்கள்தான் ஆர் எம்சி சப்ளை செய்கிறோம். வேர் ஹவுசிங், என்சிசி லிமிடெட், எல் & டி, இன்டியா பில்டர்ஸ், CCCL, விஎஸ்கே ஹவுசிங், சக்தி லாக்கர், டயமன்ட் சிட்டி இவர்களெல்லாம் எங்களது பெருமைக்குரிய வாடிக்கையாளர்கள் ஆவர்.
2020-க்குள், தமிழகம் முழுக்க 25 பிளாண்டுகள் அமைத்து 1 லட்சம் கனஅடி கான்கிரீட்டை தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம்’’ என்றார் எம்.சி. சீனிவாசன்.
சிக்ஸ் சிக்மா ரெடிமிக்ஸ் கான்கிரீட் பிரைவேட் லிமிடட்,
52, பேஸ், பார்சன் பாம் லெஜண்ட்ஸ், ஓண்டிபுதூர்,
கோயம்புத்தூர்- 641016.
தொலைபேசி: 8973405000 / 9751395599 / 9698066577
இமெயில் : sixsigmarmc@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067584
|