வீடற்ற ஏழைகள் உலகெங்கும் இருக்கிறார்கள். அங்கெல்லாம் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒன்றினைந்து ஏழைகளுக்கான வீடுகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் இம்முயற்சியில் பெரிதும் வெற்றியடையாமல் இருப்பதற்கு காரணம் பொருளாதாரம்.
வலிமையான பாதுகாப்பான வீடு கட்ட குறைந்த பட்சம் 10 லட்சம் ஆகும் போது ஏழைகளுக்கான வீடு பற்றி சிந்திக்க எங்ஙனம் இயலும்? ஆனால் இதில் உள்ள நிதி நெருக்கடி சவாலை உடைத்து மூன்று லட்சம் இருந்தால் போதும் 74ச.மீ (666ச.அடி வீட்டை நாங்கள் கட்டித்தருகிறோம் என களத்தில் குதித்திருக்கிறது டெக்சான் கன்ஸ்ட்ரக் ஷன் என்னும் நிறுவனம்.
வழக்கமாக 600ச.அடி வீட்டை இந்தியாவில் கட்டினால் 12 லட்சம் ஆகும். ஆனால் இந்த சிம்பிளான வீட்டைக் கட்ட 4000 டாலர்கள் ஆகும். அதாவது 2.8 லட்சம்.. அதுவும் ஒரு வீட்டைக் கட்ட ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் போதும்.
எப்படி சாத்தியம்? குயிக் பில்ட் கான்சப்டா? பிரிகேஸ்டா, பில்டிங்கா, மாடுலர் வீடா? என்றால் மூன்றுமே இல்லை. பிரிண்டட் ஹவுஸ் கான்சப்ட் 3டி பிரிண்டிங் டெக்னாலஜியை பயன்படுத்தி தான் அசுர வேகத்தில் ஒரே ஒரு தளம் கொண்ட வீட்டை கட்டமைக்கிறார்கள்.
3டி பிரிண்டிங் டெக்னாலஜி பற்றி பில்டர்ஸ்லைன் முந்தைய இதழ்களில் விரிவாக விளக்கியிருந்தோம். (சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானக் கலவையை ஒரு டேங்கில் நிரப்பிவிட்டு பிரம்மாண்டமான குழாய்கள் வழியே ஒரு முழு வீட்டை டிசைன் படி தெளித்து கட்டமைக்கும் டெக்னாலஜி. விரிவாக அறிய பில்டர்ஸ்லைன் மே 2016 இதழைப் படிக்கவும்.
சான் ஃபிரான்சிஸ் கோவில் எல் சால்வதன் என்கிற பகுதியில் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் இலவச வீடு கட்டித்தர நகர நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தேடியது. இறுதியாக டெக்சான் நிறுவனம், கலிஃபோர்னியன் சாரிட்டி என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நூறு 3டி பிரிண்டிங் வீடுகளை கட்டித்தர திட்டமிட்டுள்ளது. குறைவான வேலையாட்கள், கட்டுமானச்செலவு இதோடு மின்னல் வேகம் ஆகிய காரணிகளால் இந்த 3டி பிரிண்டிங் வீடு கட்டப்படுவதால் கட்டுமானச் செலவு 5 மடங்காக குறைகிறது.
வழக்கமான வீடுகள் போலவே மழை, வெயில், பனி, குளிர், புயல், ஆகியவற்றிற்கு ஈடு கொடுக்கும் 3டி பிரிண்டிங் வீடுகள் எல். சால்வதன் என்கிற பகுதியில் தொடர் வீடுகளாக (Row Houses) கட்ட இருக்கிறார்கள்.
இந்த புராஜெக்ட் வெற்றிகரமாக அமைந்து விட்டால் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் பாதுகாப்பாக கட்டப்பட்டு ஏழைகளுக்கான வீடுகள் 3டி பிரிண்டிங் வீடுகள்தான் இருக்கும்.
சான் ஃபிரான்சிஸ் கோவைத் தொடர்ந்து, ஆசியாவின் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனிஷியா போன்ற பல நாடுகளிலும் 3டி பிரிண்டிங் வீடுகளுக்கு ஆர்டர்கள் டெக்சான் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திற்கு குவிகின்றன.கட்டுமான கற்கள், ஸ்டீல் போன்றவை தேவைப்படாத செலவு குறைந்த 3டி பிரிண்டிங் வீடுகள் இந்தியாவில் வருவதற்கு இன்னும் 3 ஆண்டுகளாவது ஆகும் எனலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067591
|