வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்றார். உலகிலுள்ள எல்லாத் தொழில்களுக்குமே நீர் மிகவும் அத்தியாவசியமானது. அதுவும் கட்டுமானத் தொழிலில் தண்ணீரின் தேவை மிகவும் தேவை. இந்தியாவைப் பொறுத்தவரை தென் மாநிலங்களில் கூட ஓரளவு தண்ணீர் கிடைத்துவிடும். ஆனால், வட மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அதிகம்.
புனே, குஜராத் போன்ற இடங்களில் தண்ணீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. உலகின் பிரபல நகரங்களின் ஒன்றான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நபர் ஒன்றிற்கு நாள் ஒன்று 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஜோர்டானில் கட்டுமானங்களுக்கென தண்ணீரைப் பயன்படுத்துவது சென்ற ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுவிட்டது.
ஹாலந்தில் விவசாயம் மற்றும் பால் பண்ணைகளுக்கு மட்டும் தான் தண்ணீர் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஸ்பெயினில் உள்ள நகராட்சி நிர்வாகம் தன்னிடம் விண்ணப்பித்திருக்கும் கட்டட விண்ணப்பத்திற்கு அதிகபட்சமாக எவ்வளவு லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதை கட்டட அனுமதியின் போதே அறிவுறுத்திவிடுகிறது. இவை மட்டுமல்ல தண்ணீர் பற்றாக்குறை உள்ள பல்வேறு நாடுகளில் கட்டுமானங்களுக்கென தண்ணீரைப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகவே கருதப்படுகிறது.
உலகில் நிலத்தில் உள்ள தண்ணீரை மிக அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய துறைகளுள் நான்காம் இடத்தில் இருப்பது கட்டுமானத் துறை தான். டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு கட்டுமான கருத்தரங்கில் தண்ணீரும் ஒரு கட்டுமானப் பொருளே. அவற்றை அளவாக பயன்படுத்த வேண்டும் என அண்மையில் விவாதிக்கப் பட்டிருக்கிறது.
ஜெர்மனில் நடந்த உலகப் புகழ் பெற்ற பாவ்மா 2016 கட்டிடப் பொருள் கண்காட்சியில் ‘தண்ணீர் இல்லாத கட்டுமானங்களை உருவாக்குவது தான் அறிவியலாளர்களின் வேலை’ என கோஷம் முழங்கப்பட்டது. ஆக இத்தனை புள்ளி விவரங்கள் மற்றும் செய்திகள் தண்ணீரின் தேவை மற்றும் பயன்பாட்டினை மிக விவரமாக எடுத்துரைக்கிறது.
கட்டுமானங்களுக்கு ஏன் தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது?
செங்கற்கள் நனைக்க, அடிமணலை நொதிக்க, பேஸ்மட்டம் செறிவுபடுத்த, கலவை கலக்க, சுவர் கட்டு வேலை செய்ய, கான்கிரீட் தயாரிக்க எல்லாவற்றிற்கும் மேலாக கான்கிரீட் நீராற்றுதல் வேலைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் நமக்கு தேவைப்படுகிறது.
ஏனெனில், சிமெண்ட் என்கிற வேதியியல் பொருள் மணல் என்கிற அக்ரிகேட்டுடன் இணைந்து வினையாற்றி, செட்டிங் ஆகி, வலிமைமிக்கதாக மாறுவதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது நாம் சிமெண்டை பயன்படுத்தும் வரை தண்ணீரை தவிர்க்க முடியாது என்பது தெளிவு.
இந்த உலகில் ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது கட்டடங்களின் பெருக்கமே என கற்பிக்கப்படுகிறது. ஆனால், ஒரு கட்டடம் எழுப்பப்படும் போது பல ஆயிரக் கணக்கான கியூபிக் மணலும், பல ஆயிரக் கணக்கான லிட்டர் தண்ணீரும் பூமியிலிருந்து சுரண்டப்பட்டு தான் கட்டடங்கள் வளர்கின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களுக்கு இலை, தழை, குச்சி, கம்புகள், மரங்கள், கற்கள், போன்றவை கட்டுமானங்களுக்குத் தேவையாக இருந்தன. அப்போதெல்லாம் இந்த அளவிற்கு கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீர் தேவையாக இருந்ததில்லை. ஆனால், இந்த நூற்றாண்டில் சிமெண்ட், கான்கிரீட் என வந்த பிறகு தண்ணீரின் அளவும் மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. கான்கிரீட் கலக்க மட்டுமல்ல, நீராற்ற மட்டுமல்ல, சிமெண்ட் தயாரிக்கப்படுவதற்கே பல கோடி லிட்டர் தண்ணீர் தேவையாகியிருக்கிறது.
அது மட்டுமல்ல, சிமெண்ட் தயாரிக்கப்படுவதால் எழுகிற கார்பன் - டை -ஆக்ஸைடு உற்பத்தியால் சுற்றுப்புறச் சூழல் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. சிமெண்ட் உபயோகம் குறைந்தால் தான் கார்பன் -டை-ஆக்ஸைடு கட்டுப்படும், தண்ணீரின் உபயோகம் குறையும். ஆற்று மணல் அள்ளப்படாமல் பாதுகாக்கப்படும்.
சிமெண்ட் இல்லாமல், கான்கிரீட் இல்லாமல் ‘அட’ தண்ணீர் இல்லாமல் ஒரு கட்டுமானம் எழுப்ப முடியுமா? என நீங்கள் கேள்வி எழுப்பினால் பதில் ‘முடியும்’.தண்ணீரே பயன்படுத்தாமல் கட்டுமானங்களை கட்டும் தொழிற்நுட்பம் வட மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது.
புனேவைச் சேர்ந்த கிரீன் பில்ட் ப்ராடெக்ட்ஸ் என்கிற நிறுவனம் ‘சிமெண்ட், மணல், தண்ணீர் போன்ற வழக்கமான கட்டுமானப் பொருட்கள் இன்றி நீங்கள் வீடு கட்டலாம், கட்டுமானங்களை எழுப்பலாம்’ என்கிறது.
சிமெண்டிற்கு பதிலாக இவர்கள் தயாரிக்கும் மாற்றுப் பொருட்களை நாம் ரெடிமேட்டாக வாங்கிப் பயன்படுத்தலாம் தண்ணீர் கலக்காமல்.முழுக்க முழுக்க மறுசுழற்சி பொருட்களையும் பிரீ பாலிமரைஸ்ட் பொருட்களையும் கலந்து சிமெண்ட்டை விட உறுதியான கலவையை இவர்கள் தயாரித்து சந்தைக்கு அளிக்கிறார்கள்.
பயன்படுத்த தோதாக இருக்கும் இந்த கலவையை அப்படியே வாங்கி சுவர் கட்டுவேலை செய்ய மேற்பூச்சு பணிகள் செய்ய நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால் தண்ணீர் தேவை நமக்கு அதிகமாககுறைகிறது. மேலும் க்யூரிங் என்கிற ‘தண்ணீர் செலவாகும் தொல்லை’ இந்த தொழிற்நுட்பத்தில் இல்லை என்பதால் நமக்கு தண்ணீரின் தேவை குறைந்தபட்சம் 50 விழுக்காடு குறைகிறது. இவர்கள் 6 விதமான பொருட்களை சிமெண்ட் + மணலுக்கு பதிலாக தயாரிக்கிறார்கள்.
1. பில்ட் - ஃபாஸ்ட் ப்ளஸ் (Build Fast Plus ) அனைத்து சுவர் கட்டுமான வேலை செய்ய இது உகந்தது. பிரிக்ஸ் மற்றும் ப்ளாக்குகளின் வலுவான இணைப்பிற்கு இது உதவும்.
2. இகோ - ரென்டர் ப்ளஸ் (Eco Render Plus )
இது சுவர் மேற்பூச்சுக்கானது. இந்த கலவைக் கொண்டு மேற்பூச்சு பூசும் போதும், ஜிப்சம் ப்ளாஸ்டர், பட்டி பார்த்தல் போன்ற வேலைகள் நமக்கு இல்லை.
3. கிரீன் சீல் (Green Seal )
தானாகவே உலரும் தன்மையுடைய பசைப்பொருள் இது. கட்டடங்களின் முகப்பு தோற்றத்தில் வடிவமைப்பு மற்றும் மேற்பூச்சுக்கு உகந்தது. இது தவிர சிறு சிறு விரிசல்கள், இணைப்புகள், வெடிப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென கிரீன் க்ரெளட் மற்றும் கிரீன் ரிப்பேர் ஆகிய பசைப் பொருட்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இவர்கள் தயாரிக்கும், ஜோ டெக்ஸ் ப்ராடெக்ட்ஸ் என்கிற அக்ரிலிக் கலந்த பசைப் பொருள் சுவர் மேற்பூச்சு மற்றும் இன்டிரியர் பணிகளுக்கு மிகவும் ஏற்றது.
இதில் என்ன பயன்கள்: 1. பயன்படுத்த ஏதுவானது, 2. சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. 3. தண்ணீர், சிமெண்ட், மணல் ஆகியவற்றின் தேவை அற்றது. 4.நேரத்தை மிச்சப்படுத்துவது.
இதை பயன்படுத்துவதற்கென எந்த ஒரு தனித் திறனும் நமக்குத் தேவையில்லை. கிரீன் பில்டிங் ப்ராடெக்ட்ஸ் தயாரித்தளிக்கும் சிமெண்ட்டிற்கு மாற்றான பசைகளை கொண்டு உருவாகும், சுவர் மற்றும் சீலிங்களில் விரிசல்கள் மற்றும் வெடிப்புகள் வராது.
புனே போன்ற மாநிலங்களில் 100% கிரீன் பில்டிங் ப்ராடெக்ட்டுகள் கொண்டு ஒரு கட்டடத்தை உருவாக்குகிறார்கள்.
ஆனால், நமது தமிழகத்தில் முழுக்க முழுக்க அவற்றை பயன்படுத்த முடியாமல் போனாலும் ( அஸ்திவாரம், காலம் மற்றும் தளம் அமைத்தல் ஆகிய பணிகளை தவிர்த்து) சுவர் கட்டுவேலை, மேற்பூச்சு சீலிங் பூச்சு, வெளிப்புறச் சுவர் பூச்சு, இன்டிரியர் ஆகிய பணிகளுக்காவது இவற்றை நாம் பயன்படுத்த முன்வரலாம்.
பில்டர்கள் பெரியளவில் கிரீன் பில்டிங் புராடெக்ட்ஸ் தயாரிப்புகளை வாங்க வேண்டுமெனில் கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067614
|