அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் 186 ஆவது கிளை தாம்பரத்தில் துவக்கம் தலைவராக ரூபி. மனோகரன் பதவியேற்பு

24 ஜனவரி 2024   05:30 AM 08 மே 2019   10:27 AM


அகில இந்திய அளவில்  185 கிளைகள் உடைய பிஏஐ  அகில இந்திய கட்டுநர் சங்கம் (பில்டர் அசோசியேrன் ஆஃப் இந்தியா) அமைப்பின்  186 ஆவது கிளையாக, தமிழக அளவில் 39 ஆவது கிளையாக தாம்பரத்தில் புத்தம் புதிய பிஏஐ கிளை துவங்கப்பட்டது. ரூபி. பில்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ரூபி.ஆர். மனோகரன்  13.4.2019 அன்று தலைவராக பதவியேற்றார்.

 

பிஏஐ முன்னாள் தலைவரும், பொருளாளருமான “கட்டுமான உலகின் பிதாமகர் பீஷ்மர்’ எனப் போற்றப்படும் திரு.ஆர். ராதாகிருஷ்ணன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கி கிளையை துவக்கி வைத்தார். தாம்பரம் புதிய கிளை குறித்து திரு.ஆர். ராதா கிருஷ்ணன் அவர்களிடம் பேசியபோது,

 

“”கட்டுநர் சங்கத்தின் பலன்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போய் சேர வேண்டும், கட்டுநர் சமுதாயம் மேம்பட வேண்டும், அதன் மூலம் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில், மாநகராட்சிகளில், நகராட்சிகளில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் கிளைகளை துவக்க வேண்டும் என்பது எங்களின் இலக்கு ஆகும்.அதன்படி தற்போது வரை 38 கிளைகள் தமிழகத்தில் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  தற்போது 51 உறுப்பினர்களோடு தாம்பரத்தில் 39 ஆவது கிளை துவங்கப்பட்டிருக்கிறது. 

 

இதன் தலைவராக டாக்டர். ரூபி. ஆர். மனோகரன் தேர்ந்தெடுக்கப்படிருக்கிறார். தமிழக கட்டுமான உலகு நன்கறிந்த, தாம்பரத்தின்தந்தை, கட்டுநர் சமுதாயத்தின் மணிவிளக்காம் ரூபி.ஆர்.மனோகரன் சாசனத் தலைவர் என்னும் இப்பதவிக்கு மிகப் பொருத்தமானவர். இவரது சமூக சேவையும் லாப நோக்கில்லாத கட்டுமானத்துறை பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. இவரது தன்னலமற்ற சேவையின் புதிய பரிமாணத்தை இப்பொறுப்பில் அவர் வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்‘’ என்றார் திரு ஆர்.ராதா கிருஷ்ணன்.

 

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் உடனடி தலைவர் (தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபர்) திரு.எஸ்.அய்ய நாதன் அவர்கள் பேசிய போது,””இதன் சாசனத் தலைவர் டாக்டர். ரூபி. ஆர். மனோகரன் தலைமைக்குணம் நிரம்பியவர். பல்வேறு தலைமைப் பதவிகளை ஏற்று செயல்படக் கூடியவர், பழகுவதற்கும் அணுகுவதற்கும் எளிமையானவர். இவரது வழிகாட்டலில் தென் தென்னை கட்டுமானத் துறை இன்னும் செழிக்கும் என நம்பலாம்’’ என்றார்.

 

 தாம்பரம் கிளையின் தலைவராக பொறுப்பேற்கும் டாக்டர். ரூபி. ஆர். மனோகரன் அவர்களிடம் பேசிய போது, “”அகில இந்திய அளவில் உள்ள கட்டுமானத்துறையினரை ஒருங்கிணைத்து அவர்கள் தோளோடு தோளாக அரவணைத்து வழிகாட்டும் அகில இந்திய கட்டுநர் சங்கத்தில் நானும் உறுப்பினர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

 

தமிழகம் முழுக்க 38 கிளைகள் உடைய அகில இந்திய கட்டுநர் சங்கத்திற்கு தென்சென்னை பகுதியில் ஒரு கிளை துவங்க வேண்டும் என்கிற எனது தணியாத ஆசை கட்டுமானத்துறையின் பீஷ்மரான திரு. ஆர்.ராதா கிருஷ்ணன், அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் உடனடி மாநிலத் தலைவர் திரு. எஸ். அய்யநாதன் ஆகியோரின் முயற்சியால் நிறைவேறியது.  அவர்களுக்கு என் நன்றிகள்.

 

இச்சங்கத்தின் சாசனத் தலைவராக நானும்,  துணைத்தலைவராக திரு.வி. லவகுமாரும், செயலாளராக திரு. எஸ். வில்சன்ராஜும், பொருளாளராக திரு. திலகரும் பொறுப்பு வகிக்க அன்புடன் இசைந்துள்ளார்கள்.இவர்களின் துணையோடும். உறுப்பினர்களின் பேராதரவுடனும் நான் என்னால் இயன்றவரை இந்த சங்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை ஆற்றுவேன் என உளமாரக் கூறுகிறேன்‘’ என்றார்.

 

இவ்விழாவின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு,பிஏஐ சதர்ன் சென்டர், தலைவர். திரு.ரமாபிரபு வரவேற்புரை ஆற்ற, மாநில தலைவர், திரு. ஆர். முத்துக்குமர் பதவியேற்பு செய்விக்க., பிஏஐ முன்னாள் தலைவர் திரு.ஆர். ராதாகிருஷ்ணன், உடனடி மாநிலத் தலைவர் திரு.எஸ்.அய்யநாதன், பிஏஐ சதர்ன் சென்டர், செயலாளர்   திரு.ஆர்.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

 

முன்னாள் அகில இந்திய துணைத்தலைவைர் மு.மோகன்,  உடனடி முன்னாள் அகில இந்தியதுணைத்தலைவைர் திரு. திருசங்கு, உடனடி தலைவர் (தென்னிந்திய கிளை) திரு. எல்.வெங்கடேசன்,  அடுக்கு மாடி கட்டுநர் சங்கம் (தென்சென்னை)  உடனடி முன்னாள் தலைவைர் திரு. ஆர்.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்., பிஏஐ, தாம்பரம் கிளையின் செயலாளர்  திரு. எஸ்.வில்சன்ராஜ் நன்றியுரை வழங்கி விழாவைச் சிறப்பித்தார்கள்.

 

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தாம்பரம் கிளை மிகச் சிறப்பான முறையில் இயங்கி செயலாற்ற நாம் வாழ்த்துகிறோம். 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067607