சிவில் பொறியாளர்களை ஸ்மார்ட்டாக மாற்றுவோம்!

24 ஜனவரி 2024   05:30 AM 07 மே 2019   04:09 PM


அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் திருநெல்வேலி கிளையின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்று இருக்கிறார் பொறி.சிதம்பரம் கார்த்திகேயன். 

 

“”பாரம்பரியமிக்க அகில இந்திய கட்டுநர் சங்கத்தில்  தலைவராக பொருப்பேற்றிருக்கிறீர்கள். உங்கள் பணிக் காலத்தில் நீங்கள் மேற்கொள்ள இருக்கும் செயல்பாடுகள் என்ன?’’ என்று அவரிடம் கேட்டோம்.

 

“”எங்கள் சங்கத்தில் காண்ட்ராக்டர்கள், பொறியாளர்கள், கட்டுநர்கள் என பல பிரிவினர் இருக்கிறார்கள். காண்ட்ராக்டர்களை எடுத்துக் கொண்டால் அதிலேயே ரெயில்வே, போஸ்டல், பிஎஸ்என்எல்.சாலை, பொதுப்பணி என ஒவ்வொரு துறையிலும் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். ஆக எல்லா உறுப்பினர்களுக்கும் தற்போதைய சந்தைச்சூழல், லேட்டஸ்ட் தொழில் நுட்பம், அதிநவீன கட்டுமான முறைகள், சாதனங்கள், இயந்திரங்கள் இதைப் பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். 

 

அதற்கான கண்காட்சிகள், கருத்தரங்குகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் சென்று பார்வையிட வைப்பதன் மூலம் உறுப்பினர்களுக்கு அனுபவ முதிர்ச்சி நிச்சயம் கிடைக்கும். அதனால் தான் வெளிநாட்டு சுற்றுலாக் களுக்கு முக்கியத்துவம் தந்து அங்கு நடைபெறும் கட்டுமானத் தொழிற்நுட்பக் கண்காட்சிகளை சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறோம்.

 

மேலும், உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறோம். உறுப்பினர்களின் திடீர் மருத்துவச் செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்ஸுரன்ஸ், உறுப்பினர்களின் குடும்பத்திற்கு ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் போன்றவற்றை சங்கத்தின் சார்பாக அதிகம் நடத்த வேண்டுமென திட்டமிட்டு இருக்கிறோம்.

 

…இவை மட்டுமல்ல, எங்களுக்கு சொந்தமான சங்கக் கட்டிடத்தில் “ஸ்மார்ட்  சிவில் இன்ஜினீயர்’  என்கிற பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறோம். பல்வகைக் கட்டடங்களின் வரைப்படத்தின் ஆட்டோகேட், ப்ரைம்வீரா போன்ற மென்பொருட்கள் உதவியுடன் வரைவதற்கும், ப்ளான் அப்ரூவல் பெறுவது, கட்டுமானங்களை உருவாக்குவது, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவது, பாதுகாப்பாக பணிபுரிவது என பலவகையான அம்சங்களை இந்தப் பயிற்சி வகுப்பில் குறைந்த கட்டணத்தில் சொல்லித்  தருகிறோம். படித்து முடித்த பொறியாளர்கள் மட்டுமன்றி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இது மிகவும் பயன் உள்ளதாகும். …இதை பெரிய அளவில் கொண்டுச் செல்ல வேண்டுமென நினைக்கிறேன். நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலுள்ள கல்லூரி களில் படித்த & படிக்கும் மாணவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் ஸ்மார்ட் சிவில் இன்ஜினீயர் பயிற்சியைப் பற்றி விளக்கிக்கூறுவோம்.

 

மாலைநேர வகுப்புகள் மற்றும் வார இறுதி வகுப்புகள் உள்ளதால் கல்லூரி மாணவர்களுக்கும் சரி, வேலைக்குச் செல்லும் பொறியாளர்களுக்கும் சரி, இப்பயிற்சியில் எளிதாகச் சேர இயலும்’’  என்கிறார் திரு. சிதம்பரம் கார்த்திகேயன். அவர்தம் நல்ல நோக்கங்கள் தடையற நிறைவேறட்டும்.

 

பிஏஐ திருநெல்வேலி சங்கத்தைப் பற்றி:

40 உறுப்பினர்களுடன் 2000-ல் துவங்கப்பட்ட பிஏஐ நெல்லை கிளையின் சாசனத் தலைவர் பொறியாளர் கேசவன்.

இச்சங்கத்தின் இந்த ஆண்டு செயலாளராக  திரு.கே. வெங்கடேசனும் பொருளாளராக திரு. செல்வகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போது இச்சங்கத்தில் 222 உறுப்பினர் அங்கம் வகிக்கிறார்கள். நெல்லையில் உள்ள பிற கட்டுமானத் துறைச் சங்கங்களுக்கு இச்சங்கம் தாய்ச் சங்கம் ஆகும்.

பிஏஐ திருநெல்வேலி கிளை &  இரண்டாண்டுக்கு ஒருமுறை  பில்ட் எக்ஸ்போ கண்காட்சியும் நடத்தி வருகிறது. 

தொடர்புக்கு:  93442 20037.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067644