கட்டுமானங்கள் எந்த வகையாக இருந்தாலும், அதற்கு தரைகள் தான் கூடுதல் அழகைத் தருகின்றன. தரை போடுவதில் உள்ள அடிப்படை சூட்சமங்களை பொறியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தரை போடுதல் என்பது 1:4:8 கான்கிரீட் கலவை
யால் அடித்தளம் 115 மி.மீ பருமனுக்கு அமைத்து அதன் மீது தேவையான தரைப்போடுதலாகும்.
சிமெண்ட் கான்கிரீட் தரை ((Cement Concrete Flooring):
தரை கான்கிரீட் போடுவதற்கு முன்னர் மண் தரை மீது சாதா கான்கிரீட் போடப்பட்டு அதன்மீது சீமைக்காரை செய்வதற்கான நீர்மப் பொருட்கலவை (slurry) கொடுக்கப்பட வேண்டும். மேற்பரப்பின் மீது பூசப்படும் கான்கிரீட் லேசானதாகவும் சட்டுவக் கரண்டி கொண்டு நன்றாக சிமெண்ட், மேல் பூச்சு வருமாறு பூச வேண்டும். கான்கிரீட்டின் மீது தனிக்காரை ஏதும் பூசக் கூடாது. இணைப்புக்கள் நீள அகலவாக்கில் நேராக இருக்க வேண்டும். சீமைக்காரை சார்ந்த (granolithic)
தரையினை 10 மி.மீ முதல் 12 மி.மீ அளவுள்ள கருங்கற்கள் கொண்டு 1:2:4 விகித கான்க்ரீட் கலவையால் அமைக்கலாம். இவ்வாறு போடப்படும் தரைகளின் கனம் எல்லா அறைகளுக்கும் 20 முதல் 25 மி.மீ அளவிலும், கிடங்குகள், வண்டிக் கொட்டில்கள் (garage)
மற்றும் புகுமுக மண்டபங்களுக்கு (portion) 40 மி.மீ அளவிலும் இருக்க வேண்டும்.
மொஸைக் தரைகள் என்று கூறப்படும் டெர் ரெஸோ தரைகள்
(Terrazo Flooring - commonly called on mosaic)
டெர்ரெஸ்ப்ப் தரைகள், 140 கிலோ/ ச.மீ. அழுத்தத்தில் தயாரிக்கப்படும் ஒடுகளை கொண்டதாகும். நிறைவூட்டு செய்த மேற்பகுதி 6 மி.மீ கனத்திற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். ஒடுகள் சுவர் ஓரங்களில் பதிக்கும் போது சுவரோரப்பட்டியின் (spirting) உள்ளே 12 மி.மீ குறையாமல் பதிந்திருக்க வேண்டும். ஒடுகள் சமதளத்திலும் (flatness), செங்குத்து நிலையிலும் (perpendicularity), நேர்நிலையிலும் (straightness) இருக்கின்றதா என சோதிக்க வேண்டும்.
நீர் உறிஞ்சும் தன்மை 10% மிகக்கூடாது. ஈரமான நிலையில் பக்கவாட்ட வலிமை 30 கிலோ/செ.மீ குறையாமல் இருக்க வேண்டும். தேய்மான ஈடு கொடுத்தல் 4 மி.மீ க்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஓடுகளைத் தேய்த்து முடித்திட இயந்திரங்களைப் பயன்படுத்திட வேண்டும். நிறைவு தேய்ப்புக்கு ரூ320 “கிரிட் ப்ளாக்’ (GridBlock)) பயன்படுத்துவர். நன்கு முடித்துவிட்ட தரையின் மீது மரச்சுத்தியால் லேசாக தட்டும்போது வெறுமையான ஒலி எழும்பக் கூடாது.
சுவரோரப்பட்டிகள் (spirting) அல்லது டாடுயின் (Dadoing)) இவைகள் அமைக்கும்போது அவற்றின் பிடிமானங்களாக அமையும் காரைப்பூச்சு 3 மி.மீ கனம் இருத்தல் போதுமானது (சாதரணமாக காரைப்பூச்சு 12 மி.மீ கனமாக இருப்பது, இங்கு தேவையில்லை).
மொஸைக் தரைகளில் ஒடுகளின் இணைப்புகள் 3.75 மி.மீக்கு மிகக்கூடாது. சாம்பல் வண்ண (grey colour) மொஸைக் தரை போடும் போது, வெண்சாம்பல் வண்ணமுள்ளதையே போடுதல் நன்று. கருசாம்பல் வர்ணமுள்ளதை தவிர்க்கலாம்.
சில்லுகள் (clips) சாக்லேட் (chocolate)), பழுப்பு (Brown), பச்சை (Green) போன்ற எடுப்பான வண்ணங்களில் அமையலாம். வெள்ளை நிற சில்லுகளுக்கு குண்ட்டூர் (guntur) வகையே பயன்படுத்த வேண்டும்.
சேலம் மாக்னெஸைட் (Salem Magnetic) வகையை பயன்படுத்தக் கூடாது. 1 மீ. அகலத்திற்கு கூடுதலான களப்பணிகளுக்கு (work)) இணைப்புகளுக்கு கண்ணாடி அல்லது அலுமினியம் பயன் செய்யலாம். இவ்வகை பணிகளுக்கு எண் 2 மற்றும் 3 வகை சில்லுகள் பயன்படுத்தலாம்.
மொஸைக் ஓடுகள் தயாரிக்க, எண் 4 அல்லது அதற்கும் உயர்வான சில்லுகள் குறைந்தபட்சம் 80% ஆவது இருக்க வேண்டும். மீதமுள்ள 20% க்கு எண் 2 மற்றும் 3 வகை சில்லுகளையும் பயன்படுத்தலாம். எண் 1 மற்றும் 0 வகை சில்லுகளை பயன்படுத்தக்கூடாது. சில்லுகள் ஒரே சீராகப் பரவியிருக்க வேண்டும்.
சுருங்கல் தோற்றப் பணிகளுக்கு கருநிற மொஸைக் ஓடுகள் பதித்து செய்யலாம். ஆனால், இத்தகைய பணிகள் அதிக தூசுகள் வரக்கூடிய இடங்களில் மட்டுமே பதிக்கலாம். தயாரிக்கப் பெற்ற மொஸைக் ஓடுகளின் மேல் படிவத்தின் கனம் 10 மி.மீக்கு இருத்தல் வேண்டும். 20 மி.மீ மொத்த கனம் கொண்ட மொஸைக் ஒடுகளை, 1:3 விகித சிமெண்ட் கலவை காரைக் கொண்டு 20 மி.மீக்கு பரப்பிய பின்னர் அதன் மேல் பதிக்க வேண்டும்.
பளிங்குக்கல் (Marble)):
பளிங்குக்கற்களால் பதிக்கப்பட்ட தரையினை அடிக்கடி கூட்டி, மெழுகி சுத்தம் செய்ய வேண்டும். இத்தரைகளில் மெழுகு (wax), தேய்ப்பு மாவுகள் (Abrasive powders) சலவைத்தூள்கள் (Detergents), அமிலங்கள் (Acids) மற்றும் சோப்புகள் (றீலிழிஸ்ரீவி), போன்றவை பயன்படுத்தக் கூடாது.
ஸராமிக் ஓடுகள் -( ceramic tiles)):
இவ்வகை ஓடுகள், குளியலறை மற்றும் சமையலறைகளுக்கு மிகவும் உகந்ததாகும். இவைகள் மீது அமிலங்கள் பட்டாலும் பரவாயில்லை. கீறல்களும் விழுவதில்லை.
கோட்டா கற்கள் (Kota Stones):
இவைகளை தேய்த்து பளபளப்பாக்கிட முடியாது. ஆனால், இவைகள் சமையலறையின் தரைகளுக்கு மிகவும் ஏற்புடையனவையாகும். தேய்மானங்களுக்கு அதிக ஈடு கொடுக்க வல்லது கறை படிவதில்லை.
சமையலறைக்கான தரைகள் சிமெண்ட் தரைகள் மற்றும் மொஸைக் தரைகளில் பாத்திரங்கள் வைத்து புழுங்குவதால் ஏற்படும் தேய்மானங்களைத் தாங்கிட இவ்வகை தரைகளால் முடிவதில்லை. எனவே, இதற்கான மாற்றாக கடப்பா தரைகள் போடலாம். இருப்பினும் அமிலங்கள், காரப் பொருட்கள் (Alkali)
இவைகளின் பாதிப்பு தரையின் மீது ஏற்படாதிருக்க ஷாஹாபாத் ( (Shahabad) அல்லது கோட்டா கல் பாளங்கள்(Kota Stone Slabs) பயன்படுத்தலாம். பீட கான்கிரீட் (Base concrete) அமைக்கும்போது அவைகள் 100 மி.மீ களத்திற்கு செய்து அதன் மீது கடப்பா பாளங்களை பதிக்க வேண்டும். இப்பாளங்களின் பருமன் 38 மி.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும். பக்கங்களை உளியால்
செதுக்கி விட்டு இணைப்புகள் 6 மி.மீ பருமன் கொண்டு ஒரே சீரான இணைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
உலர வைக்கும் முற்றங்களுக்கான தரைகள்
(Flooring in Drying yards):
இவ்வகை தரைகள் போடுவதற்கு முன்னர் பீடக்கான்கிரீட் 10 செ.மீ கனத்திற்கு அமைக்க வேண்டும். 38 மி.மீ அளவுடைய கருங்கற்கள் கொண்டு 1:4:8 விகித கான்கிரீட் பயன்படுத்த வேண்டும்.
இதன் மீது 2.5 செ.மீ. கனத்திற்கு, 20 மி.மீ அளவுடைய கருங்கற்கள் கொண்டு 1:2:4 விகித கான்கிரீட் கலவை பயன்படுத்த வேண்டும். பீடக்கான்கிரீட் போடும்போது 3 மீ மு 3 மீ சதுர அளவுள்ளவையாக ஒன்று விட்டு ஒன்றாக அமைத்து நிரப்ப வேண்டும். இதன் மீது போடப்படும் நிறைவூட்டு கான்கிரீட் (Finishing concrete) உடனேயே
(தாமதிக்காமல்) போட வேண்டும்.
இவ்வாறு போடப்படும் பீடத்திற்கு கீழே மணல்தான் நிரப்ப வேண்டும். வெட்டி எடுத்த மண்ணை போடக்கூடாது.
From Builders line Monthly
www.buildersline.in
For Subscribe : 98417 43850
Tags:
#Builder, #Builder in Chennai, #Builder in Tamilnadu, #Architechts, #Architechts in chennai, #Architechts in Tamil nadu, #Home, #Home Construction, #Building Materials, #Construction, #Construction, #Real Estate, #வீடு, #கட்டுமானம், #வீட்டு கட்டுமானம், #ரியல் எஸ்டேட், #பில்டர், #கட்டடக்கலை, #கட்டடம், #இண்டிரியர்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067310
|