பல வீட்டு உரிமையாளர்கள் (சொந்தமாக வீடு கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாகிய) “தங்கள் வீட்டுச் சுவர்களில் குறிப்பாக வெளிப்புறச் சுவர்களில் ஜன்னல் மேல்மட்டம் வரை கரையான் புற்று (அரிப்பு) ஏற்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் போது அடித்தளத்தைச் சுற்றிக் கரையான் மருந்து Pest control அடித்ததாகத் தெரிவிக்கின்றனர். இதில் அவர்கள் செய்த பெரிய தவறு, அடிமண்ணான களி மண்ணை (வண்டலோடு கலந்தது) (வெட்டு மண்ணையே) கட்டடத்தைச் சுற்றிக் கொட்டி நிரப்பியதுதான். கட்டுமானச் செலவை சிறிது குறைத்ததாகவும் பெருமைப்பட்டு கொண்டனர். ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை - அந்த வெட்டிய களிமண்ணே இன்றைய கரையான் புற்றுக்குக் காரணம் என்று.
இதிலிருந்து கற்கும் பாடம் என்ன?
களிமண் கலந்த அடிமனை வெட்டு மண்ணைக் கொண்டு அடித்தளத்தையும் வெளிப்புறச் சுவர்களையும் நிரப்பக் கூடாது. நீர் உலர்ந்த களிமண்ணில் கரையான்கள் எளிதாகப் புற்று வைக்கும். இதுவே பெரிய வில்லன் என்பது பலருக்கும் (கட்டட மேஸ்திரி உட்பட) தெரிவது இல்லை.
கரையான் மருந்து கட்டடம் கட்டும்போது மிகச் சரியாக அடித்தாலும் அதன் வீரியம் நான்கைந்து மழைக்குப் பின் (5 ஆண்டுகளுக்குப் பிறகு) பெரிதும் குறைந்து விடவே, உலர் களிமண்ணில் மீண்டும் கரையான் உற்பத்தியாகிறது.
முன்பே கட்டிய வீட்டில் இப்போது கரையான் வந்துள்ளதைத் தடுப்பது / ஒழிப்பது எப்படி?
வீட்டின் வெளிப்புறச் சுவர்களை ஒட்டி சுற்றி 2 அடி அகலத்தில் 3 அடி ஆழத்திற்கு (upto Grade Beam level) தோண்டி களிமண் முழுவதையும் வெட்டி எடுத்து வெளியே கொண்டு கொட்டவும். தோண்டிய பள்ளத்தில் (2’0’ x 3’0’)-கருங்கல் உடைதூள் (Stone crusher dust - Quarry dust) கொட்டி முழுமையும் நிரப்பவும். அதற்கு மேலும் சுவர்களை அணைத்து 1’0” உயரத்திற்குக் கொட்டவும். இதன் வாயிலாக மீண்டும் கரையான் உற்பத்தியாவதை முழுமையாகத் தடுக்கலாம். எளிதாக-விரைவாகச் செய்யலாம்; செலவும் குறைவு. - பொறி.அ. வீரப்பன்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067724
|