ஆர்.சி.சி கூரை தள அமைப்பு முறையில் வெவ்வேறு வழி முறைகள்

24 ஜனவரி 2024   05:30 AM 29 ஏப்ரல் 2019   05:41 PM


சாதரணமாக ஆர்.சி.சி கூரை பீம் அமைத்து கூரை போடுவது என்பது வழக்கமான ஒன்று.  ஆனால் பீம் இல்லாமல் பெரிய ஹால், கல்யாண மஹால், பெரிய டைனிங் ஹால், பெரிய பெட் ரூம், ஹாஸ்டல், மினி ஆடிட்டோரியம், பெரிய ஆடிட்டோரியம் அமைக்க ஆசைப்படுவார்கள், பீம் அமைத்தால் அதை மறைக்க பொய் கூரை (False Ceiling) போட வேண்டும். அதற்கு சிறிது செலவாகும்.  எனவே பீம் இல்லாமல் ஆர்.சி.சி கூரை அமைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

சதுர கட்ட தளங்கள் (Grid or Coffered Floor) 

மேற்கூரையை கீலேயிருந்து நோக்கினால் சதுர கட்டங்களுடன் கூடிய கூரைகள் அமைப்பு முறைக்கு கிரிட் ஃப்ளோர் (Grid Floor) என பெயரிடப்பட்டுள்ளது.  தளத்திலிருந்து மேற்கூரையை பார்த்தால் பெட்டிகளின் மூடி அல்லது பகுதிகளை இணைத்து ஒட்டியவாறு தோற்ற மளிப்பதால்  Coffered Floor எனவும் அழைக்கலாம்.  இடையில் தூண்கள் இல்லாமல் அகன்ற நீள அகலங்களுடன் கூடிய திரை அரங்குகள், கல்யாண மண்டபங்கள், உள் விளையாட்டு அரங்குகள், கண் காட்சி கூடங்கள், மிகப் பெரிய சொற்பொழிவு அரங்குகள், உலக வியாபார மையங்கள், மெகா மார்ட் சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற கட்டட எழிலுடன் கூடிய கட்டடங்கட்கு இந்த Grid Floor  மிகவும் உகந்தவை.  குறிப்பிட்டுள்ளன.  

60 அடி அல்லது 100 அடி போன்ற அகலமுள்ள அரங்குகளில் இடையில் தூண்களின் அமைப்பு இல்லாமல் இது போன்ற கூரைதளங்கள் அமைப்பது கட்டட கலைத் துறையில் சாத்தியமாகும்.  ஒரே சீரான 4 அல்லது 5 அடி இடைவெளிகளில் 6 அங்குல அகலமுள்ள பீம்களையும் அதன் மேல் கூரை தளத்தையும் ஒரே நேரத்தில் முழுமையாக (Integrated / monocithic) ஆர்.சி.சி. கான்கிரீட் போட வேண்டும்.  அரங்குளின் நீள அகலத்திற்கு ஏற்றவாறு சதுர வடிவில் அல்லது செவ்வக வடிவில் செங்குத்தாகவும், இணையாகவும் இந்த பீம்கள் (Perpendicluar Beams) அமைக்கலாம்.  

இதை தவிர 45 டிகிரி வடிவில் சாய்வாக சதுர கட்ட தள அமைப்பும் (Diagonal Grid) காட்சியளிக்கும்.  கவிழ்ந்த பெட்டி போன்ற பகுதியில் Conceaced / Diffused வெளிச்சம் தரும் அமைப்புகளின் மூலம் அரங்குகளின் உள் அலங்காரம் (Interior Decoration) மற்றும் வெளிச்ச அமைப்புகளை (Lighting Arrangement) அழகுற அமைக்கலாம்.

இம்மாதிரியான Grid Floor அமைப்பதற்கு நான்கு புறங்களிலும் உறுதியான சுவர் அல்லது தூண்களோடு அமையப்பெற்ற பீம்கள் இருக்க வேண்டும்.  இடையிலுள்ள Gird Beams அதிக அகலமில்லாமல் மெல்லியதாக இருப்பது நன்று.

இதே Grid Floor அமைப்பில் பெரிய வீடுகளின் அறைகள், லாபி, மற்றும் போர்டிகோ தளங்களையும் அமைக்கலாம். வித்தியாசமாக சிறிது சாய்வுடன் கூடிய Grid Beam-களையும் அமைக்கலாம். இம்மாதிரியான சதுர கட்டடதளங்கள் திறமை வாய்ந்த கட்டட பொறியாளரின் வடிவமைப்பு மற்றும் மேற்பார்வையில் (Design & Supervision) அமைக்கப்பட வேண்டும்.

மேலும், Flat Slab (தட்டை தளங்கள்) மூலமும் கூரை தளத்தினை உறுதியாக கம்பி இணைப்புகளின் மூலம் அமைக்கப்படும் தள அமைப்புகட்கு தட்டை தளங்கள் (Flat Slab) எனப்படும் ஆர்.சி.சி தளங்கட்கு இருவழி முறையில் வலுவூட்டப்பட்ட கம்பி-கான்கிரீட் இணைப்புகளின் மூலம் தளங்களிலிருந்து வரும் பாரங்களை நேரடியாக தூண்கட்கு கொண்டு செல்வதும், பீம்கள் இல்லாமல் இருப்பதும் இதன் சிறப்பு அம்சமாகும்.

இது போன்ற புதிய வடிவங்களில் கூரை தளம் அமைக்க அனைவரும் ஆலோசிக்க வேண்டும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067717