அபார்ட்மென்ட்டில், வீடு வாங்கும் நிலையில் பல்வேறு ஆலோசனைகள் வரும். வகுறிப்பாகதரை தளத்தில் வாங்காதீர்கள், கழிவு நீர் குழாய் அடைப்பு எனறாலும், வெள்ளம் வந்தாலும் முதல் பாதிப்பு உங்களுக்கு தான் என, பலரும் அறிவுரை கூறுவர்.
இதை நம்பி மூன்றாவது, நான்காவது போன்ற மேல் தளங்களில் வீடு வாங்க முனைந்தால், அப்போதும் சில பிரச்னைகலை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக, மின் தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ, லிஃப்ட், செயல்படாத சமயங்களில் வீட்டில் இருப்பவர்கள் வெளியில் செல்வது சிரமம். குறிப்பாக உடல் நிலை சரி இல்லாதவர்கள், வயதானாவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மோட்டார் பழுது போன்ற காரணங்களால் தண்ணீர் வராவிட்டாலும், மேல் தளத்தில் இருப்பவர்கள் பொரும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற யோசனை வரும். இது போன்ற யோசனைகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது அல்லது அப்ப டியே ஏற்றுக்கொள்வது என, இரண்டு நிலைகளில், எதை நீங்கள் எடுத்தாலும், அது வீடு வாங்கும் எண்ணத்துக்கு பாதகமாக முடியும்.தரை தளத்தில் சில பாதகங்கள் இருக்கும் என்றால், மேல் தளத்துக்கு கிடைக்காத சில சாதகமான விrயங்களும் இருக்கும்.
இதே பொன்று தான் மேல் தளத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும், தரை தளத்தில் கிடைக்காத சில சாதக மான அம்சங்களும் கிடைக்கும்.எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் எந்த தளத்தில் வேண்குமானாலும், வீடு வாங்கலாம். இதில், வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலை, பழக்க வழக்கத்துக்கு எது சரியாக இருக்கும் என்பதை மட்டும் பார்த்தால் போதும்.
எந்த தளத்தில் வீடு வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல, எத்தகைய சூழலில் வீடு அமைந்து உள்ளது என்பது தான் மிக முக்கியம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வசிப்பதே, அபார்ட் மென்ட்களில் அமைதியான சூழல் நிலவ உதவும்.
கவனிக்க வேண்டியவை..
1. தனி வீட்டில் இருப்பது போன்று அடுக்குமாடி குடியிருப்பில் இருக்க முடியாது. பஜனையோ அல்லது பாடு பாடினாலோ இயன்றவரை பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு தொல்லையாக இருக்க கூடாது.
2. மின்சார பழுது வேலை, புதிதாக மின் சாதனங்கள் அமைப்பது, சரி செய்வது போன்ற பணிகளில், அந்த குடியிருப்பு குறித்த விபரம் தெரிந்தவர்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது. அவர்களுக்கு தான் எந்த இடத்தில் ஒயரிங் செல்கிறது என்பது தெரியும்.
4. கார் நிறுத்து, இடத்தை சரியாக கவனித்து கொள்ளுங்கள், ஒவ்வொரு தள வரிசை எண்ணுக்கும் தனி நிறூத்தம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது காலியாக இருந்தால்கூட, வேறு வாகனங்கள் நிறுத்தக் கூடாது.
5. கட்டத்தின் வெளிப்புற பகுதிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வண்ணம் பூச வேண்டும். இதற்கான பணிகள் நடந்தால், அங்கு வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அபார்ட்மென்ட்களில் பொது இடங்களை பராமரிப்பதில்..
தனி வீடு என்றால் காம்பவுன்ட் சுவர் வரை உங்களுக்கே சொந்தம் என்பதால், எந்த இடத்தையும் எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில், அப்படி இருக்க முடியாது.
அபார்ட்மென்ட்களில், வீட்டு வாசலை தாண்டி உள்ள பகுதிகள் அனைத்து பொது பயன்பாட்டு இடங்கள் என வரையறுக்கபட்டு விடும். இந்த இடங்களை பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அந்த கட்டடத்தில் உள்ள அனைத்து உரிமையாளர்களுக்கும், பொது இடங்களை பயன்படுத்துவதற்கான உரிமை, சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கும். அதைவொரு, பொதுவான வழிமுறை அடிப்படையில் பயன்பௌத்தினால் யாருக்கும் பிரச்னை இல்லை.
குறிப்பாக, நடையாதை, பால்கனி, லிப்ட், மாடிப்படி, தோட்டம், மொட்டை மாடி ஆகிய இடங்கள் பொது பயன்பாட்டு இடங்களான வரையறுக் கப்பட்டு இருக்கும். இந்த பகுதிகளை பராமரிக்கும் பொறுப்பு, அனைவருக்கும் உண்டு.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பராமரிக்க முடியாது என்பதாலேயே, இதற்கு சங்கம் அமைத்து செயல்படுத்தும் நடை முறைகள் வந்தன. இவ்வாறு அமைக்கப்பட்ட சங்கங்கள், அனைவரின் சார்பில் பொது பயன் பாட்டு இடங்களை பராமரிக்கும்.
வீட்டு உரிமையாளர்கள், நிதி நிலை மற்றும் சங்கத்தின் நிதி நிலை ஆகியவற்றின் அடிப்படியில், பொது பயன்பாட்டு இடங்களை பராமரிக்கும் நடைமுறைகள் வகுக்கப்படும். இது அடிப்படை பராமரிப்பு சார்ந்த விrயம் என்ற அடிப்படியில், வீட்டு உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்து டன் செயல்பட வேண்டும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067712
|