கட்டட உறுதிக்கு கியூரிங் ஏன் முக்கியம்?

24 ஜனவரி 2024   05:30 AM 29 ஏப்ரல் 2019   10:47 AM


ஒரு கட்டடத்தில் கான்கிரீட் தளம் போட்டு முடித்த பின்பு அந்த தளமானது சில நாட்களுக்கு குறிப்பிட்ட அளவு ஈரப் பதத்தோடும் குறிப்பிட்ட அளவு உஷ்ண நிலையோடும் ( 50 டிகிரி பாரன்ஹீட் முதல் 70 டிகிரி பாரன்ஹீட் வரை ) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஈரப்பராமரிப்பிற்கு பெயர்தான் “நீராற்றுதல்’ என்பதாகும். கான்கிரீட்டின் தரத்திற்கு மிக முக்கியமான தேவை இந்த நீராற்றும் நடைமுறை.

கான்கிரீட் கெட்டிப்பட்டபின் அதன் நீடித்த உழைப்பிற்கு பலத்திற்கும் நீர் உட்புகா தன்மைக்கும் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கும் நிலைத்து நிற்பதற்கும் மிகுதியான குளிர்ச்சியையும் வெப்பத்தையும் தாங்குவதற்கும் செய்ய வேண்டிய செயல்பாடு இந்த நீராற்றுதல்.

நீராற்றுதலில் குறைபாடு ஏற்படின் அதனால் கான்கிரீட் பரப்பின் பலம் பாதிக்கப்படும். கான்கிரீட்டில் “ஹைட்ரேrன்‘ என்னும் இரசாயன கிரியை நடக்க நீங்கள் எப்போதெல்லாம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்களோ அப்போதெல்லாம் கான்கிரீட்டை ஈரம் தாக்காமலும் அது நீடித்து உழைப்பதற்கு ஏற்பவும் அதனை உறையிட்டு மூடி வைக்க வேண்டும். கான்கிரீட்டை முதல் முதலில் இடும்போது அதில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கான்கிரீட் சரியான பக்குவத்தை அடைந்தவுடன் அதிலிருந்து ஈரத்தை எடுத்துவிட வேண்டும். குறிப்பாக கடற்கரை போன்ற பகுதிகளிலோ குளிர் பிரதேசங்களிலோ கட்டப்படும் கட்டடங்களில் கான்கிரீட்டில் அரிமானம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த நடைமுறையானது மிகவும் அவசியமாகும்.

சிமெண்டில் முற்றிலுமாக ஹைட்ரேrன் நடைபெறுவதற்கு புதிதாக உருவாக்கப்பட்ட கான்கீரிட் கலவையில் பெரும்பாலும் போதுமான அளவிற்கும் மேலாகவே தண்ணீர் இருக்கும். ஆயினும், ஆவியாவதன் மூலமோ வேறு காரணங்களாலோ இந்த நீர் இருப்பு குறைந்தால் அதன் காரணமாக ஹைட்ரேrன் பாதிக்கப்படும் அல்லது தாமதமாகும்.


சாதகமான வெப்பச் சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கான்கிரீட் தளம் போட்ட பின்பு சில நாட்களுக்கு ஹைட்ரேrன் ஒரளவு விரைவாகவே நடைபெறும். இந்த காலகட்டத்தில் தண்ணீரை தக்க வைப்பது மிகவும் முக்கியம். நன்றாக நீராற்றுவதன் மூலம் நீர் ஆவியாவதை தடுக்க முடியும் அல்லது பெருமளவு குறைக்க முடியும்.

ஈர நீராற்றுதல்

கான்கிரீட் தளம் போட்டபின்பு முதல் வாரத்தில் கான்கிரீட் தளத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பதுதான் சிறந்த நீராற்றுதல் ஆகும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் இதை செயல்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும், கான்கிரீட் காய்ந்துபோய் விடாமல் தடுப்பது மிக மிக முக்கியம். 
கான்கிரீட் மீது தொடர்ச்சியாக தண்ணீரை தெளிக்காமல் இடையிடையே விட்டு விட்டு தண்ணீரை தெளித்தால் நடுநடுவே கான்கிரீட் உலர்ந்து விடும். இதன் காரணமாக கான்கிரீட்டில் சேதம் ஏற்படும். தண்ணீரைவைத்து நீங்கள் நீராற்றுதல் செய்வதாக இருந்தால் நீர்த் தெளிப்பானை ஒரு வார காலத்திற்காவது தொடர்ந்து இயக்க வேண்டும்.

ஜவ்வு நீராற்றுதல்

திரவ ஜவ்வு எனப்படும் நீராற்றும் கூட்டுப் பொருளை ( நீராற்றி மூடுதல் ) பயன்படுத்துவதன்மூலம் புதிதாக இடப்பட்ட கான்கிரீட்டை நீராற்றுதல் செய்யலாம்.
இந்த ஜவ்வானது வழக்கமாக தெளிப்பான் மூலம் தெளிக்கப்படும் அல்லது கான்கிரீட் பரப்பின் மீது விரிக்கப்படும். கான்கிரீட் உலர்ந்தவுடன் அதன் மீது மெல்லிதான உறையாக இது படிகிறது. கான்கிரீட் பரப்பிலிருந்து ஈரம் ஆவியாவதை இது தடுக்கிறது.


ஒரு நீராற்றும் கூட்டுப்பொருளை பயன்படுத்தும்போது காலக்கட்டுப்பாடு மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல்பாடாகும். இறுதியாக கான்கிரீட் தளம் போடப்பட்ட உடனேயே இந்த பொருட்களை கான்கிரீட் பரப்பின்மீது பரப்பிவிட வேண்டும். இல்லாவிடில் இதுவே கான்கிரீட்டின் பரப்பை பாதிக்கும்.
இதற்கடுத்த முக்கியமான செயல்பாடு, இந்த ஜவ்வை எவ்வளவு வேகமாக இடுகிறோம் என்பதாகும். இதற்கு அந்தந்த தயாரிப்பாளர் கொடுத்துள்ள ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067718