பணியிடத்தின் பாதுகாவலன் செயற்கை நுண்ணறிவாளன்

24 ஜனவரி 2024   05:30 AM 20 ஏப்ரல் 2019   03:38 PM


எல்லாத் தொழில்களிலுமே ரோபோக்கள், தானியங்கி கருவிகள் நுழைந்துவிட்டன.  கட்டுமானத் தளங்களில் பள்ளம் தோண்டுவது முதல், பாரம் கையாள்வது பெரிய தூண்கள், பலகங்களைப் பொருத்துவது, சுவர் கட்டுவது கட்டட இடிப்பு வேலை செய்வது என பல பணிகளுக்கும் ரோபோக்கள் நுழைந்து விட்டன.

ஆபத்தானப் பணிகள், சுரங்கப் பணிகள், வேதியியல் தொழிற்சாலைகளில் இது போன்ற ரோபோக்கள் தானாகவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கட்டுமானத் தொழிலில் பணியிடங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இத்தாலியில் முழுக்க முழுக்க ரோபோக்கள் கொண்டே ஒரு கட்டடம் கட்டப்பட ஆரம்பிக்க உள்ளார்கள்.  2020-ல் துவங்கப்பட உள்ள அந்த புராஜெக்ட் மொத்தம் 11 மாதங்களில் அந்த 5 மாடிக் கட்டடத்தைக் கட்டி முடிக்க இருக்கிறது. இதெல்லாம் கட்டுமானத் துறையில் ரோபோ பற்றிய செய்திகள்.  ஆனால், முழுக்க முழுக்க ரோபோக்கள் மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டு சிஸ்டம் ஒரு பிரம்மாண்ட பணியிடத்தை பார்வையிட்டு அதன் பல்வேறு பரிமானங்களை மானிட்டர் செய்து நமக்கு அறிக்கைக் கொடுக்கிறது.

முழுக்க முழுக்க கணினி மற்றும் பிஎல்சி இணைக்கப்பட்ட இந்தத் தொகுப்பின் பெயர் தன்னாட்சி நுண்ணறிவு இயந்திரங்களின் தொகுப்பு ஆகும் (Artificial Intelligence Control)

AI என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சேஃப்டி கணினி தொகுப்பினை ஃபிரான்சைச் சேர்ந்த NVIDIA என்கிற மின்னணு நிறுவனம் முதன் முதலாக Komatsu என்கிற சர்வதேச கட்டுமான இயந்திரங்களை தயாரித்தளிக்கும் நிறுவனத்திற்கு (தொழிற்சாலை கட்டுமான புராஜெக்டிற்கு) வெற்றிகரமாகச் செய்து தந்திருக்கிறது. AI  (Artificial Intelligence Control) எனப்படும் இந்த மின்னணு தொகுப்பு என்பது என்ன என்பதை சுருக்கமாக விளக்குவோம்.

ஒரு கட்டுமானப் பணியின் போது அதன் சகல மூலை முடுக்குகளையும் பார்வையிட்டு பாதுகாப்புக்கு எதிரான விஷயங்கள் நடைபெறும் போது, அதனை புராஜெக்டின் மேலாளருக்கு அது பற்றிய விவரத்தை அறிக்கையாக குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அலாரம் மூலம் இது தெரிவித்து விடுகிறது.

இது எப்படி சாத்தியம்? என்பதை அறிந்துக்கொள்ளும் முன் ஆர்ட்டிபி´யல் இன்டலிஜென்ஸ் எப்படி நிறுவப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.கட்டுமானப் பணியிடத்தில் மூலை முடுக்கெல்லாம் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, ஆங்காங்கே புகை உணரிகள் பொருத்தப்பட்டு, ஸ்பீக்கர்கள் வழியே உத்தரவுகள் ஒலிக்கப்படவும், மைக்குகள் வழியே சத்தங்கள், குரல்கள் உள் வாங்கி கன்ட்ரோல் ரூமுக்கு அனுப்புவதும் ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடங்கியது தான் இந்த AI தொகுப்பு.

அட இது ஒரு பேசிக்கான வேலை தானே. இதற்கென ஏற்கெனவே தனித்தனி கருவிகள் சந்தையில் உள்ளனவே? என நீங்கள் நினைக்கலாம்.ஆனால் AI-ல் உள்ள சிறப்பு ஒரு கட்டுமானப் புராஜெக்டின் பிளான் வடிவத்தை பதிவேற்றி விட்டால் ஃபிளான்படி வேலை நடக்கிறதா? அல்லது பிளானை ஓவர் ரூட் செய்து வேலை நடக்கிறதா? என்பதையும் கண்டுபிடித்துச் சொல்லிவிடும்.  

இதனுடன் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா ஆட்கள் நடமாட்டம் மட்டுமல்ல, விதிகளை மீறும் பணிகளை துவக்கத்திலேயே கண்டு பிடித்துவிட்டு ஒலி பெருக்கிகளின் வழியே தானியங்கி சிஸ்டம் மூலம் உத்தரவு பிறப்பித்து விடும்.

AI பொதுவான பயன்கள்.

1. ஒரு கட்டுமானப் புராஜெக்டின் அனைத்து பணிநிலைகளையும், அதன் தன்மையையும் இது கண்காணிக்க வல்லது.  உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் கான்கிரீட் ஊற்றிய பிறகு நீராற்றுதல் பணிகள் நடைபெறவில்லையயன்றால் இதனுடன் இணைக்கப்பட்ட வெப்பமானிகள் மூலம் குளிர்நிலையை உணர்ந்து கொண்டு கியூரிங் வேலை நடந்ததா? இல்லையா என்பதை AI சிஸ்டம் புரிந்து கொள்கிறது.

2. புகை, தீப்பிடித்தல் போன்ற அசம்பாவிதங்கள் மூலம் வெளிப்படும் வெப்பநிலை மூலமாகவும் (டெம்ப்ரேச்சர் இன்டிகேட்டர்) பணியிடம் தீப்பற்றியிருக்கும் ஆபத்னை கண்ட்ரோல் ரூமுக்கு உணர்த்திவிடும்.

3. இது மட்டுமல்ல புராஜெக்ட் பிளான் படியும், ஒர்க் பிளான் படியும் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட பணிகள் நடந்து முடிய வேண்டுமென முன்கூட்டியே ஃபீட் செய்தால் பணிகள் சுணக்கம் ஏற்படும் போது கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கும்.  

மேலும், ஒலி பெருக்கியின் மூலமும், அது தொடர்ந்து அறிவிக்கும்.

4. குறிப்பிட்ட பணியிடத்தில் வெல்டின் மி´ன், வைப்ரேட்டர், எலக்ட்ரிக் சமாச்சரங்களின் பாதுகாப்பு விதிகள்படி இருத்தல் கூடாது என ஃபீட் செய்தால் அது போன்ற இயந்திரங்கள் குறிப்பிட்ட இடத்தில் வந்தாலும் அக்காட்சிகள் கேமரா மூலம் பதியப்பட்டு அதன் நினைவகத்தோடு தொடர்பு கொண்டு எச்சரிக்கை உணர்வு தூண்டப்பட்டு உடனே அபாய அறிவிப்பினை வெளியிடும்.

5. மேலும் வெளியாட்கள் வருகையையும் இது அறவே தவிர்க்கும்.  உதாரணத்திற்கு குறிப்பிட்ட இடத்தில் பணியாற்றக் கூடிய பணியாளர்களின் கண்கள் ஸ்கேனிங் செய்யப்பட்டு அதனை அதன் நினைவகங்களில் சேமிக்கப் பட்டு அவருக்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அப் பணியாளர்களை பணியாற்ற அனுமதிக்கும்.  இதனால் மூன்றாம் தளத்தில் பணியாற்றும் ஒரு எலக்டிரிஷன், சரியான பணி அனுமதி இன்றி இரண்டம் தளத்திற்கு வந்தால் அங்கு உள்ள ஒலிபெருக்கி குறிப் பிட்ட நபரின் பெயர்ச் சொல்லி உங்கள் இடம் இதுவல்ல என அறிவிக்கும்.  கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொல்லும்.

6. அது மட்டுமல்ல, கட்டுமானப் புராஜெக்டில் தொடர்பே இல்லாத அந்நிய ஆட்கள் பணியிடத்தில் நடமாடினால் கூட புணூ சிஸ்டம் உடனுக்குடன் சுட்டிகாட்டும் அப்படி பணியிடத்தில் உள்ளே நுழையும் வெளி ஆட்கள் முன்கூட்டியே செக்யூரிட்டியில் முறையான பதிவினை செய்து கொள்ள வேண்டும்.

7. ஆட்கள் மட்டுமல்ல குறிப்பிட்ட பணியிடத்தில் தளத்தில் அனுமதிக்கப்படாத கருவிகள் எந்திரங்கள் வருவதையும் இது தவிர்க்கிறது. ரெட் அலர்ட் தருகிறது.

8. இன்று முழுக்க எவ்வளவு சதுர அடி வேலை நடந்திருக்கிறது? எத்தனை ஆட்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்தார்கள்? எவ்வளவு மின்சாரம் என்னென்ன பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது? எத்தனை கிலோ/லிட்டர் கட்டடப்பொருள்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. போன்ற விவரங்களை நாள் முடிவில் அறிக்கையாக கன்ட்ரோல் ரூமில் அனுப்பிவைத்து விடும் இந்த ஏ.ஐ சிஸ்டம் 

9. விபத்துக்கள் அவை எத்தகைய தன்மையை உடயனவாக இருந்தாலும்  ஏ.ஐ அரிந்துவிடும். கவனிப்பாரின்றி தரையில் விழுந்து கிடக்கும் ஒரு பணியாளரை கேமராக்கள் ஸ்கேன் செய்து அதை ஒரு அப்நார்மல் செய்கையாக பதிவு செய்து தலைமை செய்தியகத்திற்கு அலற ஆரம்பிக்கும்.

10. ஏஐ சிஸ்டம் மூலம் ஒரு பணித்தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சென்ஸ்சார்கள் கேமராக்கள் தானகவே ஒருங்கினைக்கப்பட்டு தன் தலைமையகத்திற்கு கூட்டாக தகவல் அறிக்கை சொல்லிவிடும்.

11. பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கத் தவறினாலும் இது உடனடியாக ஒவ்வொருவருக்கும் அறிவித்து விடும். உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட பணித்தளத்தில் பணியில் கையுறை, காலணி, கண்ணாடி, தலைகவசம் போன்றவற்றை ஒரு பணியில் அணிந்திருக்க வேண்டியது அவசியம் என பதிவுசெய்து விட்டால் போதும். அந்த பணியில் குறிப்பிட்ட பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்றை அணியாதபோதும் அதைப் பதிவு செய்து தலைமைசெயலகத்திற்கு முறையிடும்.

எல்லா இடங்களிலும் தான் ஒருவரே இருக்க முடியாது என்பது தான் ஒரு திட்ட மேலாளரின் மைனஸ் பாயின்ட்.. ஆனால் சைட்டுக்குச் செல்லாமலேயே ஒரு பிரம்மாண்டமான பணியிடத்தின்
அனைத்துத் தளங்களிலும் மூலை முடுக்குகளில் நடைபெறக்கூடிய அல்லது நடைபெறாத பணிகளை மானிட்டர் செய்து பதியவைப்பதில் ஏ.ஐ சிஸ்டம் ஒரு நவீன காலத்து கணினி புரட்சி. 

ஒரு திட்ட மேலாளராக, சைட் சூப்பர்வைசராக பணித்தளத்தின் அதிகரியாக பாதுகாப்பு அதிகாரியாக தவறுகளே செய்யாத ஒரு நடுநிலை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றுகிறது. ஏஐ சிஸ்டம் என்பது வெறும் பணித்தளத்தின் பணிகண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தல் என்பது மட்டும் அல்ல. தொழிற்சாலைகளிலும் சுரங்கப்பணிகளில் கூட தேவைக்கேற்றாற்போல் மாற்றம் செய்தால், நமது தேவைகளை ஏ.ஐ சிஸ்டம் நிறைவேற்றிவிடும்.

கட்டுமான இயந்திரங்களை தயாரித்து அளிக்கும் காமட்சு நிறுவனம் கூட தன் தொழிற்சாலையில் அனைத்து செயல் திட்டங்களையும்,  தினப் பணிகளையும் பதிவேற்றி கண்காணிக்க இந்த நிதி ஆண்டில் ஏ.ஐ சிஸ்டத்தை நிறுவியுள்ளது. 

இந்தியவில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட மெகா மின்னணு கண்காணிப்பு தொகுப்பு இதற்கு முன் ஏதும் இல்லை.

2019 ன் துவக்கத்தில் இது இந்தியாவில் நடைமுறைக்கு வரலாம் என்பதும் வணிக வளாகம் அதி உயரக்கட்டிடம் அகியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு இது மிகவும் ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067714