உலகின் பல்வேறு நாடுகளில், குறைந்த விலையில் வீடு கட்டுவதற்கான வழிகுறைகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.இதில், நம் நாட்டு சூழலுக்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.எனவே, நமது உள்ளுர் சூழலுக்கேற்ப குறைந்த விலை கட்டுமான வழிமுறைகளை கண்டுபிடுக்க வேண்டியது அவசியமகிறது.
இவ்வகையில், டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், மிகக் குறைந்த விலையில், ரெடிமேட் வீடுகளை தயாரிக்கும் எளிய வழிமுறையை அறிமுகப் படுத்தி உள்ளது. டி.எம்.டி., கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் கொண்டு தொட்டிகள் தயாரிப்பது போன்று குறைந்த பரப்பளவு கொண்ட வீடுகளை இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த வீடுகள், கதவு, ஜன்னல், அலமாரிகள், மின் இணைப்பு வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில், தொலை தூர பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தேவையான வீடுகளை உருவாக்கப்பட்டன.முதற்கட்டமாக, ஒடிசா மாநில அரசுடன் இணைந்து பழங்குடி மக்களுக்கான வீடுகளை இந்நிறுவனம் தாயர் செய்து கொடுத்துள்ளது.
இத்தொழிநுட்பத்தில், குறைந்தபட்ச அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு வீடு கட்ட, 75 ஆயிரம் ரூபாய் மட்மே செலவாகும் என்று கூறப்படுகிறது. நிதி நிலை மற்றும் தேவைக்கேற்ப வீட்டின் பரப்பளவை அதிகரித்து கொள்ளலாம்.இவ்வகையில், தனி வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகளை குறைந்த செலவில் உருவாக்கலாம் என்பதை இந்நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.ஒடிசாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் குறைந்த விலை வீடுகள் கட்டுவதற்காக, இந்நிறுவன்த்திடம் ஆலோசனை கேட்க முன்வந்துள்ளன. இதனால், குறைந்த விலை வீடுகள் கட்டுவதில் விரைவில் புதிய மாற்றம் ஏற்படும் என்பது தெரிகிறது.