பள்ளி அல்லது கல்லூரிக்கான கட்டிடத்தைக் கட்டும்போது சிவில் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. கட்டிடம், அதன் பயன்பாட்டுக் காலத்தில் அதன்மீது சுமரக்கூடிய அதிக பட்ச பளுவை பாதுகாப்பாகத் தாங்க வேண்டும்.
அத்துடன் எதிர்பாராமல் ஏற்படக் கூடிய தீ விபத்து, வெள்ளம், நில அதிர்வு விசை ஆகியவற்றையும் தாங்கக் கூடியதாயிருக்க வேண்டும்.ம்;
2. கட்டிடமும், அதன் பகுதிகளும் அவற்றின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது உறுப்புகளின் வளைவு, உருவ மாற்றம், அதிர்வு, அடித்தள அமிழ்வு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
3. கட்டிடம் அதிக காலம் உழைக்கக் கூடியதாய் (ஆயுள் உள்ளதாய் ) இருக்க வேண்டும். இந்திய தர நிர்ணய குழுமம் (Bureau of Indian Standards) இவற்றிற்காக பல்வேறு விதிகளை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு தேவைகளுக்குI.S 456, I.S.875, I.S 144435, I.S 1893, 4326, 13828, 13920 மற்றும் National Building Code போன்றவற்றைத் திருப்தி செய்யும் வகையில் கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
இவை தவிர, குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களின் அடிப்படைதேவைகள் குறித்து I.S.8827 பல பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. பள்ளிக் கட்டிடங்களின் வெளிச்சம், காற்றோட்டம், அதற்கான திசையமைப்பு, குறித்து I.S.2440, I.S.7662, I.S.1089 போன்றவையும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளிக் கட்டிடங்களில் அமைக்க வேண்டிய சிறப்பு அமைப்புகள் குறித்து IS 4963 யும், மாணவர்களின் வயதுக்கேற்ற உடல் அளவுகள் மற்றும் அவர்களுக்கான இருக்கை வசதிகள், வகுப்பறை அளவுகள் (நீள, அகல, உயரம்) குறித்து IS 4837, 4838, 8827 ஆகியவை பல விவரங்களை அளிக்கின்றன.
இவையன்றி மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளின் கல்வித்துறைகளும் பல சிறப்பு தேவைகள் குறித்து விதிகள் வகுத்துத் தந்துள்ளன. ஒரு பள்ளி மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டுமாயின், அவை வரையறுத்திருக்கும் விதிகளுக்கேற்ப கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.
மேற்கூறப்பட்டுள்ள விதிகளில் சில முக்கியமான
வற்றை கீழே பார்க்கலாம்.
ஒரு பள்ளியில் அமைய வேண்டிய பகுதிகள்:
1. பயிலகப் பகுதிகள் (வகுப்பறைகள், சோதனைக்கூடங்கள், நூலகம்)
2. பொதுப்பகுதிகள் (கலையரங்கு, கூடுகை அறை, தொழுகை மண்டபம், உள்விளையாட்டு அரங்கு).
3. நிர்வாகப் பிரிவு (முதல்வர் அறை, அலுவலக அறை, பதிவேடுகள் பாதுகாப்பு அறை, மருத்துவர் அறை, ஆசிரியர் அறை).
4. சேமிப்புப் பிரிவு (பொருட்கள், எழுது பொருள், தளவாடங்கள் அறை).
5. தனிப்பட்ட தேவைப் பிரிவுகள் (கேன்டின்,
மாணவர் பொது அறை, சாப்பாட்டு அறை, கழிவறை, குளியல் அறை).
6. இதர சேவைப் பகுதிகள் (நடைபாதை, படிக்கட்டுகள், மின் தூக்கி)
இவை ஒவ்வொன்றும் பள்ளிகளின் நிலைகளுக்கேற்ப வேறுபட்ட அளவுகளில் தேவைப் படுகின்றன. இவற்றை பெயரளவில் அளிப்பது மட்டும் பொறியாளரின் வேலையல்ல; தேவையான அளவில், தேவைப்படும் இடங்களில், அனைவராலும் முழுமையாய் பயன்படுத்தப்படும் வகையில் திட்ட மிட்டு அமைப்பதே நல்ல பொறியாளரின் திறமையாகும்.
மத்திய அரசின் மனித மேம்பாடுத்துறையின் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி (SSA- Sarva
Shiksha Abiyan) திட்டத்தின் பள்ளி அபிவிருத்தி திட்டக்குழுவின் அறிக்கையில் (2010), ஒரு மாணவன் தவறாமல் தினமும் பள்ளிக்கூடம் செல்வதற்கு, சகல வசதிகளோடும், அழகாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடமும், பள்ளிக்கூடம் செல்வதற்கு, சகல வசதிகளோடும், அழகாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடமும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
கட்டிட வரைபடம் தயாரித்தல்:
சிவில் பொறியாளர் அல்லது ஆர்கிடெக்ட், ஒரு பள்ளிக்கூடத்துக்கான வரைபடம் தயாரிக்க, அப்பள்ளியின் வகை அல்லது நிலைக்கேற்ப அப் பள்ளியின் தேவைகளை முதலில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமாக அப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை, ஒவ்வொரு வகுப்பிலும் அனுமதிக்கப்படும் அதிக பட்ச மாணவர் எண்ணிக்கை, வகுப்புக்கள் மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கை, ஒவ்வொரு வகுப்பறையின் குறைந்தபட்ச பரப்பளவு, கழிவறைத்தேவைகள் போன்று பல விசயங்கள் தெரிய வேண்டும். கட்டிடத்தின் உருவ வடிவம் நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும்.
இதற்கு, கட்டிடத்தின் நீளம் கீழ் மேலாக இருக்க வேண்டுமெனவும், வட பக்கச் சுவரில் கூடுதல் திறப்புக்கள் அமைக்க வேண்டுமெனவும் IS 7662 இல் கூறப்பட்டுள்ளது. இது போன்ற பல விஷயங்கள் பொறியாளர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுள்ளது.
பொதுப் பாதைகள்:
ஒரு வகுப்பை அடுத்த வகுப்பு மாணவர் பார்க்கும் வகையில் வகுப்பறைகள் எதிர் எதிரே அமைக்கப் படக் கூடாது. மாணவர் வகுப்பிற்குச் செல்ல தேவையில்லாமல் சுற்றிச் சுற்றிச் செல்வது அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்கள் செல்லும் பாதையிலுள்ள மற்ற வகுப்புகளுக்கும் இடையூறாயிருக்கும். ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியரின் இலகுவான கண்காணிப்புக்கேற்ற வகையில் வகுப்பறைகள் அமைய வேண்டும். ஆகவே, பள்ளிக்கட்டிடம்
திட்டமிடுதல் என்பது ஒரு இலகுவான பணியல்ல.
வகுப்பு அறைகள்:
ஆரம்பப்பள்ளியில் 40 மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பறை, குறைந்தது மாணவர் ஒருவருக்கு 1.111 ச.மீட்டர் வீதத்தில் 44.4 ச.மீ (480 ச.அடி) அளவிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் ஒருவருக்கு 1.26 ச.மீட்டர் வீதத்தில் 50.4 ச.மீ(540 ச.அடி) அளவிலும் கட்டப்பட வேண்டும். அறையின் நீள - அகலம் விகிதம் 1.5 ஐ விட அதிகமாகாமல் இருக்க வேண்டும். வகுப்பறையின் உயரம் 3 மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
அத்துடன், தரை மட்டத்திலிருந்து உத்திரத்தின் கீழ்ப்பகுதி மற்றும் மின் விசிறிஅமைந்துள்ள உயரம் 2.6 மீட்டருக்கு குறையக்கூடாது. ஜன்னல்களின் கீழ் மட்டம் தரை மட்டத்திலிருந்து 800 மி.மீ உயரத்தில் இருக்க வேண்டும்.
நல்ல காற்று மற்றும் வெளிச்சம் கிடைக்க, வெளிப்புற அல்லது தாழ்வார பக்கச் சுவரில் ஒன்று அல்லது இரண்டு ஜன்னல்கள் அமைக்கப்பட வேண்டும்.
(To be Continued in next post)
From Builders line Monthly
Article written by Arul Manikkam
www.buildersline.in
For Subscribe : 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067246
|