கற்பனை வடிவங்களை காட்சிப்படுத்தும் 'வாட்டர் ஜெட் கட்டிங்க்'!

24 ஜனவரி 2024   05:30 AM 20 ஏப்ரல் 2019   02:29 PM


கட்டுமான பணிகளில் உடைத்தல், வெட்டுதல், துளைத்தல் போன்ற பணிகள், மிக முக்கியமானதாகும். இந்த பணிக்கு, இரும்பு பிளேட்டுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் வெட்டும் கருவிகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இதில் தெளிவான வடிவங்களை வெட்டும் பணிகளை எளிதாக செய்ய முடியும். ஆனால், கற்பனையில் உருவாகும் ஒவியங்கள், உருவங்களை உலோகங்களில் கொண்டு வர, அதற்கு ஏற்ற வகையில் வெட்டுதல், துளைத்தல் பணியில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன.

சிக்கல்
குறிப்பாக, அதிக வளைவுகள் கொண்ட உருவங்களை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகட்டில் கொண்டு வர வேண்டுமானால், மிக நுணுக்கமாக வெட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வழக்கமான வெட்டும் இயந்திரங்களை கொண்டு இப்பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக, தண்ணீரை பயன்படுத்தி வெட்டும், ‘வாட்டர் ஜெட் கட்டிங்’  இயந்திரங்கள் அறிமுகமாகி உள்ளன.

பயன்பாடு
இரும்பு பிளெட்டுகளை தவிர்த்து, தண்ணீரை அதிக விசையுடன் பீய்ச்சி அடித்து, தகடுகளை வெட்டும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்படு உள்ளது.

குறிப்பாக, கற்பனையில் தோன்றும், வடிவங்களை மிக துல்லியமாக வெட்டி எடுக்கலாம். கண்ணாடிகள், இரும்பு தகடுகளையும் விரும்பிய வடிவங்களில் எளிதாக வெட்ட, இந்த கருவி உதவும். வெட்டும்போது, ஏற்படும் மாசுக்களை வெகுவாக கட்டுப் படுத்தும் தன்மை இதன் கூடுதல் பிளஸ்.இருந்தாலும், இதற்கான தண்ணீர் தேவை தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது .

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067752