கான்கிரீட் தயாரிப்பில் தண்ணீர் ஓர் அத்தியாவசிய பொருளாகும். இது ஓரளவு சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கும் தண்ணீரால் கான்கிரீட்டிற்கு பல வித உபத்திரவங்கள் நேரும். ஆனால்,ஈரோடு போன்ற இடங்களில் வெயில் காலத்தில் தண்ணீர் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இந்நிலையில் கான்கிரீட் தயாரிக்க தண்ணீர் எப்படி கிடைக்கும்?. ஆனாலும், ஓர் ஆறுதலான விஷயம் என்னவென்றால், இங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து அதிகமான கழிவு நீர் வெளியேறுகிறது. எனவே இவ்வாறு வீணாகும் கழிவு நீரை கான்கிரீட் தயாரிக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனால், உண்டாகும் பலன் என்னவென்றால்,தண்ணீர் பற்றாகுறை ஓரளவு தீர்க்கப்படுகிறது. இவ்வாறு வீணாகும் நீரை சுற்றுப்புற சூழலுக்கு பாதகமில்லாமல் பக்குவமாக அப்புறப்படுத்தப் படுகிறது. தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத, சுத்திகரிக்கப்பட்ட, கழிவு நீரை சோதனை செய்ததில் அவைகளின் குணாதிசயங்கள் கட்டுமான வேலைகளுக்கு ஏற்புடையதாக இருப்பது தெரியவந்தது. ஆகவே ,அதைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டின் வலிமை மற்றும் நெடுநாள் உழைக்கும் தன்மை ஆகியன விவரங்கள் சேகரிக்க முடிவெடுக்கப்பட்டன.
ஆசிட் அரிப்பு : நம் மக்கள் தரை, கழிப்பிடங்களிலுள்ள பீங்கான் கோப்பை, ஆகியவைகளை சுத்தம் செய்ய சந்தையில் கிடைக்கும் பலவித திரவ பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றன. இதில் கலந்துள்ள ஆசிட் பொருட்கள் சிமெண்ட்டிலுள்ள கால்சியம் ஹைட்ராக்சைடை கடுமையாகத் தாக்குகிறது. மேலும், அவற்றின் வழவழப்பான தன்மை மாறி சொர சொரப்படைகிறது. பளிச்சிடும் தன்மை குறைகிறது. சில நேரங்களில் நிறமும் மாறுகிறது. ஆகவே, ஆசிட் மிக வீரியமுள்ள பொருளாகும்.
தாதுவிலிருந்து கிடைக்கும் ஆசிட் திரவங்களான ஸல்ப்யூரிக் ஆசிட், ஹைட்ரோகுளோரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் மற்றும்பாஸ்போரிக் ஆசிட் ஆகியவை களாகட்டும், லாக்டிக், அசிடிக், ஃபார்மிக், டான்னிக், மற்றைய ஆசிட்களாகட்டும் கான்கிரீட்டை பொறுத்தமட்டும் மிக்க உக்கிரமமான அமிலங்களாகும். ஆசிட்டின் தன்மையைப் பொறுத்து அரிப்பு என்பது ஆசிட்டால் ஏற்படலாம் அல்லது உப்புடன் சேர்ந்து உண்டாகலாம்.ஆனாலும், மேற்பரப்பிலுள்ள சிமெண்ட் பேஸ்டை முழுவதுமாக குலைக்காமல் கான்கிரீட் உட்புறம் இந்த ஆசிட் திரவங்கள் சீர்குலைவை ஏற்படுத்தாது. பொதுவாக, ஆசிட் தன்மை அதிகரிக்க ஆசிட் அரிப்பும் அதிகமாகிறது. ஸ்ரீக்ஷி எண் 6.5க்கு கீழே இருக்கும் பட்சத்தில் அரிப்பு தன்மை ஆரம்பிக்கிறது. இதுவே 4.5க்கு கீழே இருக்கும் பட்சத்தில் அரிப்பு உக்கிரமடைகிறது.
பரிசோதனை:
சோதனைக்கு தேவையான உடைந்த கற்கள், மணல் முதலான பொருட்கள் இந்திய கோட்பாடுநூல் படி பரிசோதனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கான்கிரீட் தயாரிக்க 53 கிரேடு சாதா போர்ட்லாண்டு சிமெண்ட் உபயோகப்படுத்தப்பட்டது. கான்கிரீட் கிரேட் னி20 வடிவமைக்கப்பட்டது. தோல் பதனிடப்பட்டு வெளியேறும் கழிவு நீரை கான்கிரீட் தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்டது. கான்கேர் என்கிற அட்மிக்ஸர் 2.5 சதவீதமும் கால்சியம் நைட்ரேட் 2 சதவீதம் கூடவே சேர்க்கப்பட்டன. இவைகள் சிமெண்டின் எடையில் சேர்க்கப்பட்டன.இவ்வாறு தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டை கொண்டு 150மி.மீ க்யூப்கள் மற்றும் 300மி.மீ உயரமுள்ள உருளைகள் தயாரிக்கப்பட்டு 28 நாட்கள் க்யூரிங் செய்யப்பட்டன.
சோதனைக்கான மேற்குஷீத்த க்யூப்கள், உருளைகள் ஆகியவற்றை 2 விகிதாசாரம் கொண்ட ஸல்ப்யூரிக் ஆசிட் திரவத்தில் 180 நாட்கள், ஒரு வருடம், இரண்டு வருடங்கள், 2.5 வருடங்கள் வரையில் மூழ்க வைக்கப்பட்டன. கூடவே சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட க்யூப், உருளைகளும் ஒத்து பார்ப்பதற்காக ஆசிட்டில் மூழ்கி வைக்கப்பட்டன.
சோதனையின் பலன்கள் எவ்வித அட்மிக்சரும் சேர்க்கப்படாத சுத்த நீரால் தயாரிக்கப்பட்ட M20 கான்கிரீட்டின் பலம் 28 நாட்களுக்கு பிறகு 17.21 Mpa களாகவும் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு 20.10 Mpa களாகவும் இருப்பது சோதனை மூலம் தெரிய வந்தது. இதுவே தோல் பதனிடப்பட்ட கழிவிலிருந்து கிடைத்த நீரால் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டின் வலிமை 17.93 Mpa 28 நாட்களுக்குப் பிறகும் 20.48 Mpa 2.5 ஆண்டுகளுக்குப் பிறகும் இருந்தது. இதே கால கட்டங்களில் இவ் வலிமை முறையே 17.59 Mpa 28 நாட்கள் பிறகும் மற்றும் 20.48 Mpa 2.5 ஆண்டுகளுக்கு பிறகும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கொண்டு தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கிடைக்கப்பெற்றது. ஆகவே மூன்று வகை கான்கிரீட் வலிமைகளில் பெரியதொரு வித்தியாசம் காணப்படவில்லை.
சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட M20 கான்கிரிட்டின் எடை 28 நாட்களுக்குப் பிறகு 2.27 விழுக்காடு குறைவுற்றது தெரிய வந்தது. இதுவே 2.5 ஆண்டுகளுக்கு பிறகு 1.75 விழுக்காடு குறைவிற்றிருந்தது. சுத்திகரிக்காத தோல் கழிவு நீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டின் எடை 28 நாட்களுக்குப் பிறகு 3.30 விழுக்காடுகள் குறைந்திருந்தது. இதுவே 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு 2.80 விழுக்காடு குறைந்திருந்தது.
சுத்திகரிக்கப்பட்ட தோல் கழிவுநீரால் உருவாக்கப்பட்ட கான்கிரீட் 28 நாட்களுக்கு பிறகு 3.28 விழுக்காடுகளும் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு 2.77 விழுக்காடுகள் குறைந்திருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் தோல் கழிவுநீரால் உருவான கான்கிரீட்டிற்கு சுத்த நீரால் செய்யப்பட்ட கான்கிரீட்டோடு ஒப்பிடுகையில் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றுமில்லை.
இதேபோல் கான்கேர் மற்றும் கால்சியம் நைட்ரேட் ஆகிய அட்மிக்சர்கள் சேர்க்கப்பட்ட கான்கிரீட்களை சோதனை செய்ததில் ஏறத்தாழ இதே பலன்கள் கிடைத்தன.ஆகவே தோல் கழிவு நீரை, சுத்திகரிக்கப்படாத அல்லது சுத்திகரிக்கப்பட்ட ஆகிய இரு வகை நீர்களையும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 88256 77291.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067760
|