உலகில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் துறைகழிளுள் சுரங்கம் தோண்டும் தொழில், கனிமங்கள் அள்ளும் தொழில், இரசாயனம் மற்றும் வெடிமருந்து தயாரிக்கும் தொழில், ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உயிரிழப்பு ஏற்படக்கூடிய ஆபத்துக் கள் நிறைந்த தொழிலாகவே கட்டுமானத்துறை கருதப்பட்டு வருகிறது.
உலகெங்கும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை விட இது போன்ற அபாயம் நிறைந்த தொழில்களில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம்.எனவேதான், கட்டுமானத் தொழிலும் பாதுகாப்பும் இணை பிரியாதவையாக கருதப்படுகிறது. உச்சகட்ட பாதுகாப்பின் அதிக பட்ச தேவை இருப்பதும் கட்டுமானத் தொழிலில் தான். அதனால் தான் இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் பாதுகாப்பு குறித்த பல்வேறு கொள்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வரையறைப்படுத்தி வருகிறார்கள்.
கட்டிடத் தொழில் உட்பட பல்வேறு துறைகளுக்கு பொதுவான 5s, Total Productive Maintainance (TPM), OSHAS போன்ற பாதுகாப்பு கொள்கை களை வடிவமைத்து உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான தொழிற் சாலைகளுக்கு அனுப்புகிறார்கள். 2000க்கு மேற்பட்ட காலகட்டத்தில் இது போன்ற பாதுகாப்பு கொள்கைகள் அனைத்து தொழில்களுக்கும் சொந்தமான பணியிடங்களில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டன. மேற்கண்ட பாதுகாப்பு கொள்கைகளை அமல்படுத்துகிற நிறுவனங்களிடம் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரத் தொடர்பை வைத்திருந்தனர்.
தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்கிற ஒருமித்த குரல் உலகெங்கும் எழுந்தது.பாதுகாப்பு கொள்கைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து மத்திய மாநில அரசுகள் தொழிற் சார்ந்த விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தின, ஊக்கப்படுத்தின.
ஆனால், இதெல்லாம் சேர்ந்து தொழிற்சாலைகளுக்கான பணியிடங்களின் பாதுகாப்பு மேம்படத்தான் வழிகாட்டியதே தவிர ,கட்டுமானத் தொழிலில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கோ, அதிலுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கோ பெரிதாக உதவவில்லை எனச் சொல்லலாம்.
ஏனெனில், அடிப்படையாகவே தொழிற் சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், கட்டிடத் தொழிலாளர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் அடிப்படை கல்வி முடித்தவர்களாகவோ, பட்டப்படிப்பு முடித்தவர்களா கவோ, பொறியியல் படிப்பு முடித்தவர்களாகவோ இருப்பர். இவர்களிடம் ஒரு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது எளிது. ஆனால், கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். கல்வி கற்காத இவர்களிடம் எந்த ஒரு புதிய கொள்கையும் கொண்டு போய் சேர்ப்பது என்பது சவாலாகவே இருக்கிறது.
உலகில் பல நகரங்களில் நடைபெறும் கட்டுமானங்களை எடுத்துக் கொண்டால் அங்கெல்லாம் பணிபுரியும் கட்டுமானத்தொழிலாளர்கள் பெரும்பாலும் வளர்ச்சியடையாத நாடுகளைச் சார்ந்தவர்களாகவே இருக் கிறார்கள். பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை போதிப்பதில் உலகெங்கும் உள்ள கட்டுமான நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இதனால், விபத்து மற்றும் இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. (உலகின் மிக முக்கியமான கட்டுமானமாக கருதப்படும் கத்தார் நாட்டின் கட்டுமானம் ஒன்றில் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்ததாக தகவல்கள் உலா வருகின்றன).
இந்த சூழ்நிலையில்தான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கென வேறு வகையில் நூதனமான பயிற்சியும், விழிப்புணர்வும் தர ஒரு புதுவகை வழியை உருவாக்கியிருக்கிறது நெதர்லாந்த் கிராண்ட் செக்யூரிட்டி அன்ட் சேஃப்டி நிறுவனம். அதுதான் வீடியோ கேம் மூலமாக பாதுகாப்பு பயிற்சியினை அளிப்பது.“படிக்காத மக்களுக்கு எப்படி வீடியோ கேம் சாத்தியமாகும்? அதில் என்ன விதமான விளையாட்டுகள் இருக்கும்? இருக்கும் நேரத்தில் அவர்கள் விளையாடுவார்களா? வேலை செய்வார்களா? இந்த வீடியோ கேம்களினால் என்ன பலன்கள் கிடைக்கும்?’ எனக் கேட்டால், அதற்கான பதில்கள் அந்த வீடியோ கேம்களை விட, சுவாரசியமாக இருக்கின்றன. முதலில் நம் எல்லோருக்கும் கணினி , வீடியோ விளையாட்டுகள் என்றால் உடனடியாக குழந்தை பருவத்துக்கும் மாறிவிடுவோம்.
ஆர்வமாகவும் கற்றுக் கொள்ளுவோம். அதனால்தான் தற்போது பள்ளிப்பாடங்களைக் கூட, அனிமேrன் வடிவில் கதையைப் போல் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் இந்த வீடியோ கேம்களும் செயல்படுகின்றன.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு...8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067749
|