அன்று 30 ரூபாய் வாடகை கட்டமுடியவில்லை இன்று 30 கோடியில் பிசினஸ்

24 ஜனவரி 2024   05:30 AM 15 ஏப்ரல் 2019   12:23 PM


ஸ்டெப் ஸ்டோன் அதிபர் மோதீஷ் குமார் பேச்சு.

பலதரப்பட்ட தொழில்முனைவோர்களை ஒரே இடத்தில் சந்திக்க வைத்து அவர்களுக்கிடையே வர்த்தக நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு வித்தியாசமான கான்யஸப்ட் உடைய அமைப்புதான் பிஎன்ஐ என்கிற சர்வதேச அமைப்பாகும். ஆங்கிலத்தில் இதை ரெஃபரன்ஸ் மார்கெட்டிங் என்கிறார்கள். உதாரணமாக டைல் விற்போரும், அதை வாங்கக்கூடிய கட்டுநரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு அறிமுகமாகி அதன் மூலம் நெட்வர்க்கை உருவாக்கிக் கொண்டு வியாபாரத்தை அதிகரித்துக் கொள்ளும்  சிஸ்டம் இது. 

இந்தியாவில் எல்லா நகரத்திலும் இது கிளைகளை துவங்கியுள்ளது. சென்னையில் 180 உறுப்பினர்களுடன் (தொழில் முனைவோர்) துவங்கப்பட்ட பிஎன்ஐ தற்போது 400 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் பல தனித்தனி பிஎன்ஐ குழுக்கள் உள்ளன. அதில் ஒரு குழு கிரவுன் சேப்டர் ஆகும். 

பிஎன்ஐ சேப்டர் ஆண்டுதோறும் கான்கொய்ர் என்கிற “கெட் டூ கெதர்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதில் கான்கொய்ர் 2019 என்னும் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி தி.நகர் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிரவுன் சேப்டர் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க அவர்களுக்கு வர்த்தக ரீதியிலான தொழில் ஆலோசனைகள் மற்றும் தன்னூக்கத்தை தருகிற  சிறப்புப் பேச்சாளர்கள் கலந்து கொண்டார்கள். அந்த சிறப்பு பேச்சாளார்கள் தொழில்முறை பேச்சாளர்களாக அல்லாமல் தத்தம், துறைகளில் வெற்றிபெற்ற  தொழில் அதிபர்களையே கலந்து கொள்ளச் செய்தது அற்புதமான நிகழ்வாக இருந்தது. 

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய எம்.ஜி.ஆர். யுனிவர்சிடி தாளாளர் திரு. ஏ.சி.சண்முகம், “”தொழில் அதிபதிகளிடையே உள்ள வியாபார இணைப்பு சங்கிலி பெரிதும் போற்றத்தக்கது. இதன் மூலம் பெரிய அளவில் விளம்பர செலவில்லாமல் உங்கள் தொழில்கள் வளரும். தற்போது 400 ஆக இருக்கக்கூடிய பிஎன்ஐ உறுப்பினரின் எண்ணிக்கை விரைவில் 4 ஆயிரம் ஆக 10 ஆயிரமாக உயர வேண்டும். உங்களது எண்ணிக்கை 10 ஆயிரமாக மாறும்போது உங்கள் கோரிக்கைகளை அரசாங்கமே நின்று கேட்கும்’’ என உற்சாகப்படுத்திப் பேசினார். 

அதன் பின்பு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று பேசினார்கள்.

உமா மெய்யப்பன் - ஐயப்பன் இன்ஜினீயரிங்.
”என்னைப் போன்ற பெண்கள் தொழில் முனைவர்களாக ஆகும் போது பெரும்பாலும் குடும்பத் தொழிலாகத் தான் இருக்கும். எனவே, அதில் குடும்பத்தின் ஆதிக்கமும் இருக்கும். ஆனால் நாம் தனித்தன்மையுடன் செயல் படாவிட்டால் நம்மால் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. எனது மாமனாரின் தொழில் நிறுவனம் இன்ஜினீரியங் சார்ந்தது. நான் படித்ததோ ஐ.டி. கம்யுனிகேrன். ஒரு சமயத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நான் மாற்றி அமைக்க முன் வந்த போது மிகவும் சிரமப்பட்டேன். .ஆனாலும் நான் விடாது முயன்றேன். எனது நிர்வாக திறன் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறுவனத்தை மறு உருவாக்கம் செய்து இன்னும் சிறப்பாக கொண்டு வந்தேன்.

அதே போல அலுவலகத்தில் தான் எனது மாமனார் அவர்கள், நிறுவனத் தலைவர். ஆனால், வீட்டில் அவர் எனது மாமனார். அந்த வேறுபாட்டுடன் தான் நான் பழகுவேன். வீட்டையும் தொழிலையும் ஒருபோது மிக்ஸ் செய்யாதீர்கள்’’.

திரு.மோதீஷ் குமார், நிறுவனத் தலைவர், ஸ்டெப் ஸ்டோன் 

“”ஒவ்வொரு மனிதருக்கும் தான் ஒரு தொழிலாளியாக அல்லாமல் முதலாளியாக  வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படுவதே மிகவும் போற்றத்தக்கதாகும். நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது வீடு மிகவும் வறுமையில் இருந்தது. எங்களால் வீட்டு வாடகையைக் கூட உரிய தேதியில் கொடுக்க முடியவில்லை. வாடகை பாக்கி சேர்ந்து விடவே வீட்டு உரிமையாளர் வந்து எங்களை சத்தம் போட்டு விட்டு சென்றார். அவர் போன பின்பு எனது அம்மா, தன் தாலி கொடியில் இருந்த தங்கத்தை தந்து அடகு வைத்து பணம் வாங்கி வரச் சொன்னார். அந்த பணத்தை வீட்டு உரிமையாளருக்குத் தந்து வாடைகையைக் கட்டினோம். அப்போது தான் எனக்கு எங்கள் வீட்டின் வறுமை முழுவதுமாகப் புரிந்தது. நான் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது சிறந்த மாணவன் கிடையாது. 35 , 40 மார்க்குகள் தான் வாங்குவேன்.  ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் படிப்பின் அருமையைப் புரிந்துக்கொண்டேன். நான் படித்தால் தான் இந்த குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கமுடியும் என்பதை உணர்ந்தேன். நான் கடுமையாக படித்ததன் விளைவு பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதலாவதாக வந்தேன். 

அதன் பின் உயர்நிலை படிப்பு ,கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பு முடித்து  வெளியே வந்தேன். சென்னை பாரிமுனை ஒரு கடிகாரக் கடையில் 300 ரூ சம்பளத்தில் வேலைச் செய்தேன். சில ஆண்டுகள் கழித்து கட்டடத் துறையில் நுழைந்தேன். 21 வயதில் சொந்தமாக வேலை எடுத்து செய்தேன் . 22 வயதில் ஸ்டெப் ஸ்டோன் நிறுவனத்தை 2004- ல் துவங்கினேன். இப்போது 150 ஊழியர்கள் என்னிடம் பணிபுரிகிறார்கள். 85 புராஜெக்டுகளை கட்டி முடித்து 1500 வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை ஒப்படைத்திருக்கிறேன்.

500 ரூபாய் வாடகை கொடுக்க முடியாத என்னால் தற்போது 30 கோடியில் வியாபாரம் செய்யும் தொழில் முனைவோராக வளர்ந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் தொழில் முனைவோராக இருந்தால் நீங்கள் வறுமையை மட்டுமல்ல உலகையே வெல்லலாம்’’ என தனது வெற்றி வரலாற்றுக் கதையைச் சொல்லி பார்வையாளர்களிடையே பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார்  திரு.மோதீஷ் குமார். 

டாக்டர் பழனியப்பன், நிறுவனர் மிட்வே ஹாஸ்பிட்டல்ஸ்

“முதலில் நீங்கள் இலக்கை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை அடிக்கடி மாற்றக்கூடாது. அதாவது நீங்கள் வெள்ளை முயல் அல்லது சாம்பல் நிற முயல் எதை பிடிக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்து துரத்தவேண்டும். இரண்டையுமே நீங்கள் துரத்தினால் எதுவுமே உங்களுக்கு சிக்காது. அடுத்து தேவையற்ற ரிஸ்கை எடுக்காதீர்கள். வலிமையான மன உறுதியை எப்போதும் வளர்த்து கொள்ளுங்கள். சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். ஏனெனில், கழிவிறக்கம் உங்களை கொன்றுவிடும். அதிகமாக வளைந்து கொடுத்து போகாதீர்கள். மூங்கில் நன்றாக வளையும் தான்  ஆனால் ஓரளவுக்கு மேல் வளைத்தால் அது உடைந்தே போகும். எல்லாவற்றிற்கும் மேலாக சமூக வலைதளங்களை நீங்கள் சாதிக்க தடை என எண்ணாதீர்கள். தெளிவான நேர மேலாண்மை இருந்தால் உங்களுக்கு எதுவுமே தடையாக இருக்காது’’ என மாறுபட்ட சிந்தனையை  வழங்கினார் டாக்டர். பழனியப்பன்.

பிஎன்ஐ கிரவுன் சேப்டர் நடத்திய இந்த தொழில் முனைவோர் கூட்டம் ஆலோசனைக்கூட்டமாக அல்லாமல் உண்மையிலேயே தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டும் கூட்டமாக இருந்தது. பிஎன்ஐ அமைப்பு மற்றும்  கூட்டங்கள் பற்றிய விவரங்கள் அறிய,  நீங்களும்  ஒரு தொழில்முனைவோராக இருந்தால்  பிஎன்ஐ அமைப்பில் சேர தொடர்பு கொள்க :

திரு. பாஸ்கர் கேசவன் - 720 068 2919

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067741