NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வைப் போலவே மிகவும் முக்கியமான நுழைவுத் தேர்வாக கருதப்படுவது NATA வாகும்.
நாடா என்பது தேசிய அளவில் நடப்படும் இளங்கலை வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை நுழைவுத்தேர்வாகும். இது 5 வருடகாலம் படிக்கக் கூடிய படிப்பாகும். B.Arch பட்டப்படிப்பில் நுழைய இந்த நாடா நுழைவுத் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்நுழைவுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களை கொண்டு அரசு கட்டிடக்கலை கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் கவுன்சிலிங் அடிப்படையில் B.Arch பட்டப்படிப்பில் சேர முடியும். இந்நுழைவுத் தேர்விற்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீட் மற்றும் JEE பயிற்சி வகுப்புகளை போல் வருடக்கணக்கில் இந்த நுழைவுத்தேர்விற்கு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. வெறும் மாதக்கணக்கில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றாலே நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
இந்நுழைவுத் தேர்வானது இந்த வருடம் (2019) முதல் ஒரே வருடத்தில் மாணவ, மாணவிகள் இரண்டு முறை எழுதும் வாய்ப்பை கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் வழங்கி உள்ளது.
இந்நுழைவு தேர்வில் ஜெனரல் ஆப்டிடியூட் என்ற ஒரு பகுதியும், ட்ராயிங் டெஸ்ட் என்ற மற்றொரு பகுதியும் உள்ளது.
3 மணி நேரங்கள் தேர்விற்காக ஒதுக்கப்பட்ட நேரமாகும். இத்தேர்வு இரண்டு கட்டாயப் பகுதிகளை உள்ளடக்குகிறது. பார்ட் ஏ-60 கேள்விகளையும், பார்ட் - பி- 2 கேள்விகளையும் உள்ளடக்கியதாகும்.
பகுதி- ஏ என்பது ஆப்டிடியூட் தேர்வாகும். இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. பார்ட்-பி என்பது டிராயிங் டெஸ்ட் ஆகும். இதை ஏ4 அளவுள்ள காகிகத்தில் வரைய வேண்டும்.
பார்ட் ஏ என்பது கணிதம் மற்றும் ஜெனரல் ஆப்டிடியூட் கேள்விகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்நுழைவுத் தேர்வில் நெகடிவ் மார்க்ஸ் வழங்கப்படுவதில்லை. இந்நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றவர்களுக்கே B.Arch படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். B.Arch என்பது இளங்கலை கட்டிடக்கலை பட்டப்படிப்பு ஆகும்.
அதேபோல் ஆப்டிடியூட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பார்ட் - பி பகுதியில் தேர்ச்சி அடையவில்லை என்றாலோ அல்லது பார்ட்-பி பகுதியில் தேர்ச்சி அடைந்து பார்ட்- ஏ பகுதியில் தேர்ச்சி அடையவில்லை என்றாலோ இந்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாது.
பார்ட்- ஏ பகுதிக்கு 60 நிமிடங்களும் , பார்ட்- பி பகுதிக்கு 120 நிமிடங்களும் வழங்கப் படுகின்றன. மேலும் 12-ம் வகுப்பு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் நுழைவுத் தேர்விலும் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்நுழைவுத் தேர்விற்கான மொத்த முடிவுகளையும் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் (COA) முடிவு செய்கின்றது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067764
|