கால் நூற்றாண்டைக் கடந்த பொள்ளாச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கம்

24 ஜனவரி 2024   05:30 AM 13 ஏப்ரல் 2019   03:25 PM


பொள்ளாச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் 25 -ஆவது ஆண்டு வெள்ளிவிழா சென்ற மாதம் 15 ஆம் தேதி   பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள ரோட்டரி ஹாலில்  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் தலைவர் Er.  சிங்காரவேலு வரவேற்புரை நிகழ்த்தினார். வெள்ளி விழா குழு தலைவர் Er. சம்சுதீன் சங்கத்தின் வரலாறு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த 25 ஆண்டுகளின் செயல் அறிக்கையை சங்கத்தின் செயலாளர் Er. . ராம்மோகன் சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக மூத்த கட்டிடக்கலை நிபுணர் திரு.ரமணி சங்கர் அவர்கள் தன்னுடைய உரையில் நேர்த்தியான கட்டிடங்களை உருவாக்கும் பொறுப்புகள் கட்டுமானப் பொறியாளர்களை சாரும் என்றும், கட்டிடத்திற்கு உயிர் உள்ளது என்றும், கட்டிடத்தினை நேசித்து பொறியாளர்கள் கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.எதிர்வரும் காலத்திற்கேற்ப, மாறி வரும் சூழ்நிலைக் கேற்ப, தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு அதற்கேற்ப பொறியாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். 

சிறப்பு அழைப்பாளராக கோவை நன்நெறி கழகத்தின் தலைவர் இயாககோ. சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய உரையில் குடும்ப வாழ்வில் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும், குடும்ப ஒற்றுமையுடன் பாதுகாப்பை பேணிக் காக்க வேண்டும் என்றும் கூறினார். பொள்ளாச்சி  P.பு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர். அப்புக்குட்டி அவர்களின் வாழ்த்துரையில் இச்சங்கமானது சிறந்த சேவை மனப்பான்மையுடன் இயங்கி வருகிறது என்றும், இச்சங்கத்தின்   பொறியாளர்கள் திறமையுடன் பொள்ளாச்சி பகுதியில் பணியாற்றி வருகிறார்கள் என்றும் இவர்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் என்றும் கூறி நிறைவு செய்தார். சங்கத்தின் பொருளாளர் சிr. ராஜ்குமார் நன்றியுரை யாற்றினார். 

இவ்விழாவில் சிறந்த கட்டிட பொறியாளர் மற்றும் கட்டிடம் சம்பந்தப்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள முன்னனி கட்டிட பொறியாளர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஹைலைட்ஸ் :
அசோசியேசன் ஆப் ACE சிவில் இன்ஜினியர்ஸ், பொள்ளாச்சி வெள்ளி விழா ஆண்டு மலரினை முதன்மை கட்டிட கலை நிபுணர் ரமணி சங்கர் அவர்கள் வெளியிட, கோவை நன்நெறி கழகத்தின் தலைவர் இயாககோ சுப்பிரமணியம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். அருகில் P.பு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர். அப்புகுட்டி, சங்கத் தலைவர் Er.  சிங்காரவேலு, வெள்ளிவிழா குழு தலைவர் 
Er. சம்சுதீன், மலர் வெளியீட்டு குழுத் தலைவர் Er.  வெங்கடாசலம், சங்கத்தின் செயலாளர் Er.  ராம்
மோகன், சங்க பொருளாளர் சிr. ராஜ் குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067744