மதுரை கட்டுநர் சங்கம் மிகவும் பாரம்பரியம் வாய்ந்தது. நீலகண்டன் பிரதர்ஸ் கன்ஸ்ட்ரக்சன் என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சீரிய முயற்சியால் இச்சங்கம் உருவாக்கப் பட்டது. பாம்பன் பாலத்தைக் கட்டமைத்த பிரபலமானகான்ட்ராக்டர் இவர்.
திருநெல்வேலியில் பிரபல “டபுள் டெக்’ பாலத்தைக் கட்டமைத்ததும் இந்த நிறுவனமே என்பது குறிப்பிடத்தக்கது. இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி மகன் திரு. கே. ரமேஷ் தற்போது இச்சங்கத்திற்கு தலைவராக இருந்து வருகிறார் என்பது பெருமைக்குரியது.
துவக்கத்தில் 20 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்ட மதுரை கட்டுநர் சங்கம் தற்போது 150 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகரம் மட்டுமல்ல தென் மாவட்டங்கள் பலவற்றிலும் அரசு புராஜெக்டுகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் எங்கள் சங்கத்தில் 60 விழுக்காடு உள்ளனர். மீதி இருப்பவர்கள் தனியாருக்கான கட்டுமானங்களை உருவாக்கும் பொறியாளர்கள். ஆகவே தென் மாநில கட்டுமானத்துறை வளர்ச்சியில் எங்கள் பங்கு முக்கியமானது ஆகும்’’.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067775
|