ஸ்மகா கிரியேட்டிவ் பில்டர்ஸ்

24 ஜனவரி 2024   05:30 AM 08 ஏப்ரல் 2019   03:12 PM


தேனி மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கத் (TDCEA) தலைவராக  இருக்கும்  பொறி. ரா. நந்தகுமார் BE., FIE., அவர்கள் விரைவில் மண்டலம் 8- இன் தலைவராகவும் பதவி வகிக்க  இருக்கிறார். ஸ்மகா கிரியேட்டிவ் பில்டர்ஸ் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநரான ரா. நந்தகுமார் அவர்களிடம் அவரைப் பற்றியும், அவர் நிறுவனத்தைப் பற்றியும் கேட்ட போது, 

‘‘நான் பெரியகுளத்தை பூர்வமாக கொண்டவன். என் அப்பா ஓர் நிர்வாக பொறியாளர். தேனி முனிசிபாலிட்டியாக மாறியதிலிருந்து இளநிலை பொறியாளராக பணிசெய்து வந்தார்,  அப்பாவுடன் தேனிக்கு வந்துவிட்டோம். எனக்கு ஆசையிருந்தது சிறந்த பொறியாளராக வேண்டும் என்று அதற்கு என் தந்தையையே (Role Model) வழிகாட்டியாக தேர்வு செய்தேன். படித்தபின் இரண் டாண்டு காலம் ஓரிரண்டு பொறியாளர்களிடம் ஊதியமில்லா உதவியாளராக பணியாற்றினேன். 

சென்னையில் நான் வேலை செய்தபோது அங்கிருந்த வோல்ட்டாஸ் இண்டர்நேஷனல் புராஜக்ட் மேனேஜர் AJC .போஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி தனியாக இரண்டு கட்டடங்களை கட்ட ஒப்பந்தம் பெற்று வெற்றிகரமாக கட்டி முடித்தேன்.  பின் தொழில்முறைக் கட்டுநராக ஆக தீர்மானித்தேன். 1990 வாக்கில் ஸ்மகா கிரியேட்டிவ் பில்டர்ஸ் என்னும்   கட்டுமான நிறுவனத் தைத் தொடங்கினேன்.  இன்றுதேனியில் ஸ்மகா கிரியேட்டிவ் பில்டர்ஸின் இயக்குநராகவும், தேனி கட்டடப் பொறியாளர் சங்கத் தலைவராகவும், அரசின் அங்கீகரிக் கப்பட்ட பட்டய (Registered and Charactered Engineer) பொறியாளராகவும் உயர்ந்துள்ளேன்’’.

ஸ்மகா கட்டுமான நிறுவனத்தைப் பற்றிக் கூறுங்களேன்..

‘‘எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் அனுபவம் வாய்ந்த ஆர்கிடெக்ட்கள் மூலம் வடிவமைப்பு செய்து ஸ்டெரக்சுரல் கன்சல்டன்டுகள் மூலம் Structural Design பெற்று அதன் அடிப்படையில் தரம் உறுதி செய்யப்படுகிறது.

எங்கள் புராஜெக்டில் தரம் மற்றும் கட்டிட வடிவமைப்புகள் உரிய அரசு அனுமதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.எந்த வித சட்டச்சிக்கல்களும் இல்லாமல், இடங்களை தேர்வு செய்து, தரமான நிறுவனங்களின் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டுமானங்களை குறித்த காலத்திற்குள், வாடிக்கை யாளர்களோடு நேரடி தொடர்பில் தேவையான முழு வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, வங்கி மூலம் உடனடி கடன் வசதி செய்து கொடுத்தும், மிகவும் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தருகிறோம்’’ என்றவர் தனது நிறுவனத்தின் வெற்றிக்குக்  காரணமாகக் குறிப்பிடும் போது,

 ‘‘எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணம் நிறுவனத்தின் நேர்மையான அணுகுமுறை, எளிய எதார்த்தமான நடைமுறைகள், உறுதியான செயல்பாடுகள், நம்பகத் தன்மை, விற்பனைக்கு பின்னும் பராமரிப்பு, விரைவாகவும் குறித்த காலத்திற்குள்ளும் வீடுகளை கட்டி குடியமர்த்துவது,இவையயல்லாம் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம்’’ என்றார்.

தற்போது ஸ்மகா நிறுவனம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகம், தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை (காங்கேயம்- கருந்தோட்டம்- வடமலைப் பகுதி), ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் தனிவீடு ( தேனி- கே.ஆர்.ஆர் நகர்) ஆகிய புராஜெக்டுகளை செய்து வருகிறது.

தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் புரா ஜெக்டுகளை செய்து வரும் ஸ்மகா கிரியேட்டிவ் பில்டர்ஸின் லேட்டஸ்ட் புராஜெக்டுகள் பற்றிய விவரம் அறிய.. தொடர்பு கொள்க:

ஸ்மகா கிரியேட்டிவ் பில்டர்ஸ்

1544/2 - நரசிம்மா காம்ப்ளக்ஸ்

(தேனி யுனியன் ஆபிஸ் தெரு எதிரில்)
பெரியக்குளம் ரோடு, 
தேனி - 625531

தொலைபேசி: 9344611011

இமெயில் : smakabuilder@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067826