கான்கிரீட்டை அதற்கு தகுந்த இடத்தில் முறையாக ஊற்றுவது என்பது ஓர் முக்கியமான வேலையாகும். இதற்கு முறையாக பயிற்சி பெற்ற வேலையாட்கள் தேவைப்படுவர்உலகத்திலுள்ள அனைத்து கோட்பாடு நூல்கள் இவ்வேலைக்கான சில வரைமுறைகள் வகுத்துள்ளன. இதனால் ஒழுங்கான முறையான கான்கிரீட்டை ஊற்றுவதுடன் அது சிதைவுறாமல் இருக்க உதவுகிறது. இந்த கட்டுரையில் ACI 304 R-00 கோட்பாடுபிகாசம் கான்கிரீட் ஊற்றுவது பற்றி சரியான விவரம் அளிக்கப்பட்டுள்ளது.கான்கிரிட் ஊற்றுவதில் முன்னெச்சரிக்கை
ACI கோட்பாடுநூல் கான்கிரிட்
கான்கிரிட் ஊற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகளை கீழே அளித்துள்ளது. வெப்பநிலை 30ஏ க்கு மிகைப்படாமல் இருக்கும்பட்சத்தில் உலர்ந்த கலவையுடன் தண்ணீரை சேர்க்கும் நேரம் 30 நிமிடங்கள் பொதுவான சூழ்நிலையில் கடைபிடிக்க வேண்டும். ஆனால் இந்த நேரமானது மிகுந்த வெப்பநிலை இருக்கும் போது 20 நிமிடங்களுக்கு குறைக்கலாம். தேவைப்பட்டால் இந்த நேரத்தை கூட்ட கான்கிரீட்டோடு அட் மிக்சர்ரை சேர்க்கலாம். கான்கிரீட்டை தேவைப் பட்ட இடத்தில் சேர்க்க நேர் செங்குத்தாக சேர்க்க தேவைப்படும் தளவாடங்களும் முறைகளும் உபயோகப்படுத்தலாம்.
கான்கிரிட் தானாகவே விழக்கூடிய முறையானது தொடர்ந்து செயல்பட வேண்டும்.
கான்கிரீட் இதனால் சிதைவுறுவதை தடுக்க வேண்டும். மேலும் ஏற்கனவே பதிந்துள்ள பொருள்கள் நகராவதவாறு பார்த்து கொள்ள வேண்டும். கான்கிரீட் தானாகவே விழும் உயரம் 0.9 மீ முதல் 1.5மீ வரையில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இதனை 0.6 மீக்கு வரையறுக்கலாம். கான்கிரீட்டின் கடைசி நிலைமையை தீர்மானித்து சிதறாதவாறு கான்கிரீட்டை உற்ற வேண்டும்.
பொதுவாக கான்கிரீட்டை கூடுமான வரை அதனுடைய ஃபாம்வொக்கிலேயே நேரடியாக செலுத்த வேண்டும். கட்டுமானவரை ஆட் இல்லது ஹப்பர் ஆகிய உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஃபாம்மானது அகலமாகவும் திறந்த முறையில் இருக்கையில் இது சாத்தியமாகும்.
பல்வேறு வகையான உறுப்புகளில் கான்கிரீட்டை ஊற்றுவதற்கான சிபாரிசுகள்
இந்த பிரிவில் பல்வேறு வகையான கான்கிரீட் உறுப்புகளில் கான்கிரீட்டை ஊற்றுவதைப் பற்றி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வகையான உறுப்புகளாவன: காலம்கள் மற்றும் சுவர்கள், ஸ்வாப்கள், சாய்மான வடிவில்வுள்ள ஸ்லாப்கள் மற்றும் வளைவு உறுப்புகள் சரியான மற்றும் தகுந்த முறைகள் பயன்படுத்தினால் கான்கிரீட் பிரிதல் மற்றும் தேன்கூடு வடிவு உருவாதல் முதலான தடுக்கப்படுகின்றன.
காலம் மற்றும் சுவர்களில் ஊற்றுதல்
இவ்வகை உறுப்புகளில் உயரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கான்கிரீட்டை படுகை படுகையாக அமைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படுகையின் களம் 300மிமீ லிருந்து 500 மிமீட்டர் வரை இருக்கலாம். மேலும் இருபடுகைகளுக்குமிடையே 30 நிமிடங்கள் சாதாரண நிலைக்கும் வெப்ப சூழ்நிலை யில் 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இரண்டு படுகைகளை வைபரேட்டர் கொண்டு நல்ல அடர்த்தியாக்க வேண்டும்.
எவ்வாறு ஊற்ற வேண்டுமென படம் 2 ல் காண்பிக்கப்பட்டுள்ளது. ஃபாம்மின் உயரம் அதிக உயரம் இல்லாத பட்சத்தில் கான்கிரிட்டை மேலேயிருந்து ஊற்ற வேண்டும். கடைசியாக ஒழுங்கான கான்கிரிட்டை ஊற்றுவது சாத்தியமில்லை யயன்றால் கான்கிரீட் ஃபாம்மின் பக்கவாட்டில் இறங்கி தனிதனியாக தேன்கூடு போல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஸ்லப்பிங் கான்கிரீட்டை ஊற்றுதல்
ACI கோட்பிரகாரம் படம் 5ல் காட்டியுள்ளவாறு கான்கிரீட்டை ஊற்றவேண்டும். படம் 6ல் கான்பித்ததை தவிர்க்கவேண்டும்.
சாய்மான ஸ்லாப்பில் ஊற்றுதல்
பொதுவாக கான்கிரீட்டை படுக்கை வாகையில் ஊற்றுவதை விட சாய்மான வாட்டத்தில் ஊறுவது மிகக் கடினம். ஆகவே, ACI கோட்பாடு நூல் சிபாரிசின்படி ஆட் உபயோகித்து படத்தில் காட்டியுள்ளது போல் செய்யவேண்டும். இல்லையயன்றால் பெருங்கற்கல் அடியில் தங்குவதற்கு ஏதுவாகும்.
வளைவான உறுப்புகளைக் இடுதல்
இதற்காக ACI கோட்பாடு நூல் பிரகாரம் கான்கிரீட்டை படுகை படுகையாக இட வேண்டும்.
பம்பை கொண்டு கான்கிரீட்டை ஊற்ற வேண்டும்.
தற்காலத்தில் பம்புகளை கொண்டு தேவையான இடத்திற்கு கான்கிரீட்டை செலுத்துவதற்கு படங்களில் கான்பித்துள்ளது போல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2070391
|