பிளைவுட் ஸ்டீல் ஒரு சூப்பர் டெக்னாலஜி

24 ஜனவரி 2024   05:30 AM 27 மார்ச் 2019   11:34 AM


தொழிற்நுட்ப வளர்ச்சி பலவகை தொழில்களிலும் அதன் பல்வேறு பிரிவுகளிலும் நுழைந்து மேம்பட்டு வருகிறது.  அதன் ஒரு படிதான் பிளைவுட் உருவாக்கம்.  1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இன்றளவும் பிளைவுட் என்பது கட்டுமானத்துறையில் ஒரு தவிர்க்க முடியாத கட்டுமானப் பொருளாகிவிட்டது.  அதன் பின் எம்.டி.எஃப், ஜிப்சம் போன்ற வகைகள் வந்துவிட்டாலும் அவை பார்டியன்கள் தற்காலிக சுவர்கள் அமைத்தல் போன்ற நோக்கங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர பிளைவுட் செய்யும் எல்லா வேலைகளையும் அவை செய்வதில்லை.

இந்நிலையில் பிளைவுட்டின் தரத்தை இன்னும் மேம்பட்டதாக்க உறுதியைக் கூட்டிட உலகம் முழுதும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

கிரீன்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் பிளைவுட்டை நவீன காலகட்டத்தில் இன்றைய கட்டுமானத்துறையின் தேவைக்கேற்ப அச்சு அசலாக ஒரு ஸ்டீல் போன்ற உறுதியுடன் தயாரித்து கட்டுமான உலகை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

கிரீன்லாந்தின் யூனிவர்சிட்டி ஆஃப் மேரிலேண்ட் என்கிற பல்கலைகழகத்தில் ஆராய்ச்சிக் குழு இச்சாதனையைச் செய்துள்ளது.  இது எந்த அளவுக்கு உறுதி என்றால் ஸ்டீலைப் போன்றே இறுக்கமாகவும், சமச்சீராவும், வளையாத தன்மையும் உடையது.  இன்னும் சொல்லப்போனால் துப்பாக்கி தோட்டாக்கள் கூட இந்த பிளைவுட்டை பொத்தல் இட முடியாது.  ஸ்டீலை விட ஆறுமடங்கு லேசான இந்த மெட்டீரியல் சாதாரண பிளைவுட்டை விட 12 மடங்கு உறுதி அதிகம் கொண்டதாகும்.

இந்த அதிசய பிளைவுட் பற்றி ஆராய்ச்சிக்குழு தலைவர், லியான்பிங் ஹூ  (Lianbing hu) கூறும்போது, இந்த ஸ்டீல் பிளைவுட் வழக்கமான ஸ்டீலுக்கும், டைட்டானியம் அல்லாய்ஸுக்கும் கூட கடும் போட்டியைத் தரும்.  மெட்டிரியல் சயின்சில் இது ஒரு அதிசயப் பொருளாகவே கருதப்படும்.  கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்படும் பலவகைகள் விட இது சிறந்தது.  அதே சமயம் இதன் தயாரிப்புச் செலவு மிகவும் குறைவானது.  இயற்கை முறையில் மிகச் சாதாரணமாக இதைத் தயாரிக்க முடியும் என்கிறார் லியான்பிங்.

இந்த ஆராய்ச்சிக்குழு நீண்ட நாளாகவே குண்டு துளைக்காத பிளைவுட் ஒன்றைக் கண்டுபிடிக்க நினைத்து பின் இறுதியில் அப்படி ஒரு பிளைவுட்டை உருவாக்கி பாராட்டினை பெற்றிருக்கிறார்கள்.
சரி ஸ்டீல் பிளைவுட் எப்படி தயாரிப்படுகிறது? அறிவியலாளர்கள் பிளைவுட்டின் அடர்த்தியை அதிகரிக்க வெகு நாட்களாகவே முயன்று வருகிறார்கள்.  ஏனெனில், ஒரு திட பொருளின் அடர்த்தி அதிகமாகும் போது தான் அது கடினமானதாக மாறுகிறது. எனவே, பிளைவுட்டின் அடர்த்திசெயற்கை முறையில் அதிகரிக்கப்படுகிறது.

வழக்கமான பிளைவுட்டை சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் சோடியம் சல்ஃபைட்டில் குறிப்பிட்ட விகிதத்தில் முக்கி, ஊற வைத்து, தேவையான வெப்பநிலையில் கொதிக்க வைத்து பிளைவுட்டீன் அடர்த்தியை அதிகரித்து உறுதி ஆக்குகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல், மரக் கூழில் செல்லுலோஸ் மைக்ரோ ஃபைபர் மற்றும் பாலிமர் இழைகள் சேர்த்து பல அடுக்குகளாக பிளைவுட்டில் சப்ளை செய்யப்படுகிறது.

உயர் வெப்பநிலை, உயர் அழுத்தம் ஆகியவற்றினைப் பிளைவுட்டின் மூலக்கூறுகள் இன்னும் நெருக்கப்பட்டு இறுதியில் தகடு போல உறுதியான பிளைவுட் கிடைக்கிறது.
இந்தத் தொழிற் நுட்பம் கட்டுமானத் துறைக்கு மிகவும் தேவையான தொழிற் நுட்பமாக பார்க்கப் படுகிறது..

ஒரு நாளிதழில் படித்த செய்தி இது. பதினெட்டாம் நூற்றாண்டில் நவீன உலகம் கட்டமைக்கப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட எத்தனையோ கட்டுமானப் பொருட்கள் இன்று புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன.  அதில் ஒன்று, லேட்ரைட் (laterite) கற்கள்.  செம்பாறாங்கல், சிவப்பு கப்பிக்கல் எனத் தமிழில் இதற்கு வேறு சில பெயர்கள் இருக்கின்றன.  உலகம் நவீனமயமாக்கலை நோக்கிய வேளையில், இந்தக் கட்டுமானக் கல், புதிய கட்டுமானப் பொருட்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது.  லேட்ரைட் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட எத்தனையோ பழமையான கட்டிடங்கள் இன்றும் கம்பீரமாக இருக்கவே செய்கின்றன.

லேட்ரைட் கல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவலாக உள்ளன.  குறிப்பாக, மலைவாழ் பகுதிகளில் இந்தக் கற்கள் அதிகம் காணப்படுகின்றன.  தமிழகத்தில் நீலகிரி, பழநி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை என மலைப் பிரதேசங்களில் இந்தக் கல்லைப் பார்க்கலாம்.  சமவெளிப் பகுதியான தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியிலும் இந்தக் கல் உள்ளது.  இந்தக் கல் பல சிறப்புகள் பெற்றது.

இது மிகவும் கடினமான கல். பாறைகளைப் பிளந்து கிரானைட் கற்களை உருவாக்குவதுபோல இந்தக் கல்லை எளிதாகப் பிளக்க முடியாது.  ஈரத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே இந்தக் கல்லை வெட்டி எடுக்க முடியும்.  கல்லை உடைக்க வேண்டுமானால், ஈரத்தன்மையுடனே உடைத்துவிட வேண்டும்.  கல் உலர்ந்துவிட்டால், பிறகு உடைப்பது பெரும் சிரமமாகிவிடும்.  சுத்தியைக் கொண்டு அடித்தால்கூட, கல் உடையாது.  இந்தக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பழைய கட்டுமானங்களில் துளை போடவோ ஆணி அடிக்கவோ முடியாது.  அந்த அளவுக்குக் கடினமானது.

அந்தக் காலத்தில் இந்தக் கல்லைக் கொண்டு எராளமான கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  வீட்டுக்குள் குளிர்ச்சியான தன்மையைத் தரவல்லது இது.  இந்தக் கல்லில் நுண் துளைகள் ஏராளமாக இருக்கும்.  எனவே, இந்தக் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.  வீட்டுக்குள் குளுமையாக இருப்பதுபோலவே இருக்கும்.  வெளியில் வீசும் வெப்பக் காற்றை இந்தக் கல் ஊடுருவ விடாது.  உள்ளே உள்ள குளுமையான காற்றையும் வெளியே செல்லவிடாது.  அந்த அளவுக்கு இந்தக் கல் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் அப்படியயன்றால், மழை, குளிர் காலங்களில் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாம். மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் வெளியே குளிர் இருந்தாலும். இந்தக் கட்டிடத்துக்குள் கதகதப்பான தன்மையே நிலவும்.

இந்தக் கல்லுக்கு இப்படிப் பல சிறப்புகள் இருக்க என்ன காரணம்? பாறைகள் உடைந்து, சிதைந்து அதில் உள்ள வேதிப்பொருட்கள் வெளியேறிய பிறகு மிச்சமுள்ள பொருள்களால் உருவானவைதான் லேட்ரைட் கற்கள். இது சிவப்பு வண்ணத்தில் சிறு சிறு உருண்டைகளாக இருக்கும்.  இதில், இரும்புத் தன்மை 48 சதவீதம் அளவுக்கு இருக்கும்.  மழை பெய்யும்போது அந்தக் கல்லில் உள்ள இரும்பு கரைந்து நிலத்துக்குள் செல்கின்றன.  தேவையில்லாத மூலப்பொருட்கள் தண்ணீரில் கரைந்துபோய்விடுகின்றன.  மழை நீர் சென்ற பிறகு, சிறு சிறு துவாரம் வழியாக மேல் நோக்கி வரும்போது சிறு சிறு உருண்டைகளாக உருவாகின்றன.

இது இயற்கையான கட்டுமானக் கல்.  இந்தக் கல்லின் தன்மையை அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் நன்றாகவே உணர்ந்ததால், அதைக் கட்டுமானக் கல்லாகப் பயன்படுத்தினர்.  இந்தியாவில் கோட்டைகள் உட்படப் பழமையான கட்டிடங்கள் இந்தக் கல்லைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.  பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் இந்தக் கல்லைப் பயன்படுத்திக் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  நீலகிரி, கொல்லிமலை போன்ற மலைவாழ் பகுதிகளில் இந்தக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகள் ஏராளமாக உள்ளன.  கேரளாவில் இன்றளவும் இந்தக் கற்களைக் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இத்தனை சிறப்புடைய இந்தக் கல்லின் பயன்பாடு பரவலாகக் குறைந்துவிட்டது.  கட்டுமான கான்கிரீட் கற்கள் சுலபமாகக் கிடைப்பதால், லேட்ரைட் கற்களை மறந்துவிட்டனர்.  தொடர்ந்து பயன்பாடு குறைந்ததால், இந்தக் கற்களைத் தயாரிப்பது குறைந்துபோனதும் துரதிர்ஷ்டமான விrயம் தான்.


பட்டனைத் தட்டினால் எங்கு வேண்டுமானாலும் கட்டுமானத்தை உருவாக்கும் ஒரு அதி நவீன தானியங்கித் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் டென் ஃபோல்ட் இஞ்சினீயரிங் (Ten Fold Engineering) என்ற இந்த நிறுவனம்,  இந்த ஆண்டின் இறுதியில் இந்த டென் ஃபோல்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை விநியோகிக்க இருக்கிறது.

2011-ம் ஆண்டு, டேவிட் மார்டின் என்ற கட்டிடக் கலைஞரால்  ஒரு டிரக்கில் எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் அமைக்கப்படும் நகரும் கட்டுமானமாக இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  பத்து மடிப்புகளாக லிவர் (Lever) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிரக்கில் எடுத்துச்செல்லும்படி இந்தக் கட்டுமானங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  

பட்டனை அழுத்திய சில நிமிடங்களில், நிலத்தில் தானாகவே ஒரு கட்டுமானத்தை உருவாக்குகிறது இந்தத் தொழில்நுட்பம். இந்த டென் ஃபோல்ட் தொழில்நுட்பத்தின் தயாரிப்புகள் பலவகையான கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப் படுகின்றன.  இந்தத் தயாரிப்புகளை வைத்து நகரும் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும், அகதிகள் முகாம்களையும், தற்காலிக தங்குமிடங்களையும், பிரம்மாண்ட அரங்கங்களையும் வடிவமைக்க முடியும். 
இந்த டென் ஃபோல்ட் கட்டமைப்புகள் ஸ்மார்ட் கணினித் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தாமல், எளிமையான இயற்பியலில் மட்டுமே இயங்குவதாகத் தெரிவிக்கிறார் மார்ட்டின்.  

இந்நிறுவனம் வெளியிட்ட காணொளி, சென்ற ஆண்டு சமூக ஊடகங்களில் வைரலானது.  ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளில் இந்தக் குடியிருப்புப் பகுதிகள் இந்த ஆண்டின் இறுதியில் விநியோகிக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் குடியிருப்புப் பகுதியின் ஆரம்ப விலை 1,30,000 அமெரிக்க டாலர்கள் (ரூ. 81,90,000) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067797