தரை அலங்காரத்தில் கவனிக்க வேண்டியவை

24 ஜனவரி 2024   05:30 AM 26 மார்ச் 2019   05:41 PM


தரை என்றாலே சிமெண்ட் தளம்தான் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. மார்பிள், கிரனைட் போன்று விதவிதமான கற்களை கொண்டு தரையை அலங்கரிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கற்களுக்கு பதிலாக குறைந்த விலையில் டைல்ஸ்களை வாங்கி பயன் படுத்தும் வழக்கமும் உள்ளது. அடிக்கடி நடந்து செல்லவேண்டிய பகுதி என்பதால் தரையில் பதிக்கக் கூடிய கற்களும் டைல்ஸ்களும் உறுதியானதாக இருக்க வேண்டியது அவசியம். 

வீட்டின் எல்லா இடங்களிலும் வழுக்கும் தன்மை கொண்ட கற்களை பதிக்கக்கூடாது. குறிப்பாக தண்ணீரை பயன்படுத்தக்கூடிய அறைகளில் கூடவே கூடாது. 

சமையலறையிலும் குளியலறையிலும் சற்று சொரசொரப்பான கற்களையும் டைல்ஸ்களையும் மட்டும்தான் பய்ன்படுத்த  வேண்டும். வயதானவர்கள் வசிக்கும் அறைகளில் கண்டிப்பாக வழுக்கும் தன்மை கொண்ட கற்களை பயன்படுத்தக்கூடாது.

சிக்கனமான டைல்ஸ்கள்

வீட்டின் எல்லா அறைகளிலும் ஒரே விதமான கற்களை பதிக்க வேண்டும் என்பதில்லை. வரவேற்பறையில் விலை உயர்ந்த கற்களை பதித்துவிட்டு மற்ற அறைகளில் அதைப்போன்ற நிறமும் வடிவமும் கொண்ட டைல்ஸ்களை பதிக்கலாம்.

தரை விரிப்புகள்

கார்பெட் என்கிற தரை விரிப்புகளை பயன்படுத்துபவர்கள் சிவப்பு, பழுப்பு போன்ற அடர்த்தியான நிறம் கொண்ட விர்ப்புகளளை பயன்படுத்தலாம். இவை அறையில் உள்ள பர்னிச்சர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும் அடிக்கடி வீடு மாறி செல்லக் கூடியவர்கள் கூடவே தரைவிரிப்புகளையும் கொண்டு செல்வது நல்லது.

தரைவிரிப்புகளுக்கு பதிலாக பி.வி.சி அல்லது லினோலியம் ப்ளோரிக் போன்ற வற்றையும் பயன்படுத்தலாம். இவற்றை தரையோடு ஒட்டிவிட்டால் கற்கள் அல்லது டைல்ஸ் பதிக்கப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கும். சிக்கனமாகவும்.இருக்கும். 

கிரானைட், மார்பிள், மொசைக் என எல்லா வடிவங்களிலும் பி.வி.சி தரைவிரிப்புகள் கிடைக் கின்றன. இதை எப்போதும் தரையிலே விரித்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
தேவைப்பட்டபோது பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்படாத நேரங்களில் மடித்துவைத்துக் கொள்ளலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067803