ஆற்றுப் பாலங்கள், கடல் பாலங்கள்

24 ஜனவரி 2024   05:30 AM 26 மார்ச் 2019   11:09 AM


ஆற்றுப் பாலங்கள், கடல் பாலங்கள் பொறுத்தவரை உலகளவில் புதுமைக்குப் பஞ்சமில்லை. சுழலும் பாலம், நகரும் பாலம், இரண்டாக பிரிந்து பின்பு இணையும் பாலம் என உலகில் அற்புதமான பாலங்கள் பல உள்ளன. அந்த வரிசையில் திறக்கப்பட்ட ஃப்ரான்ஸ் போன்ட் ஜாக்கஸ் சாபன் டெல்மாஸ் (Pont Jacques Chaban-Delmas) என்கிற பாலம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

ஏன் முதலிடம்?

இது ஒரு நீண்ட நெடிய பாலம் தான். ஃப்ரான்ஸின் ஹவாஸ் என்கிற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இது. 120 மீட்டர் நீளத்தில் ஆற்றில் இரு கரைகளையும் இணைக்கும் இப்பாலம் 40 அடி அகலமுடையது. ஒரே சமயத்தில் இரு வாகனங்கள் செல்வதற்கும், இரு வாகனங்கள் வருவதற்கும் தேவையான அகலமுடையது. ஆனால், ஆற்றில் அடிக்கடிச் செல்லும் படகுகளுக்கு இந்த குறுக்கு பாலம் இடையூறாக இருக்கும் என்பதால் பாலத்தை குறிப்பிட்ட அளவு வரை உயர்த்த திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

அதாவது, படகு போக்குவரத்தின் போது சுமார் 80 அடி நீளம் வரை பாலம் பிரிந்து, ஹைட்ராலிக் லிஃப்டின் உதவியுடன் சுமார் 60 அடி உயரத்தில் அந்தரத்தில் நிறுத்தப்படும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இது உயர்த்தப் பட்டு படகு போக்குவரத்து அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட இணைப்பு பாலத்தில் செல்லும் போது, வாகனங்கள் 10கிமீ வேகத்தில் மட்டும் தான் செல்கின்றன.

இணைப்புப் பாலத்தில் பயணிக்கும் போது பாலம் உயர்த்தப்பட்டால் சிறிது நேரம் வாகனங்கள் உயரத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067810