வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் பேனல்களைப் பொருத்தி சூரிய மின்னாற்றலைப் பெறமுடியும். இந்த முறையை தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் மட்டுமில்லாமல் தனி வீடுகளிலும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
சூரிய மின்னாற்றலை வீடுகளில் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் மேலும்புதுப்புது கண்டுபிடிப்புகள் அறிமுககாகி வருகின்றன.இந்த வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சோலார் ஜன்னல். இந்த சோலார் ஜன்னல்களை ஸ்மார்ட் ஜன்னல் என்றும் அழைக்கிறார்கள்.
வெளிப்புற சுவரில் பொருத்தப்படும் ஸ்மார்ட் ஜன்னல்களில் தடிமனான பிலிம்கள் ஒட்டப்படுகின்றன. இந்த பிலிம்களில் காட்மியம் டெலூரைடுளு போன்ற சூரிய மின்சக்தியை உள்வாங்கும் பூச்சுகள் பூசப்படுகின்றன. இது சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் செல்களைக் காட்டிலும் மிகவும் விலை குறைவானதாகும். ஸ்மார்ட் ஜன்னல்களைப் பயன்படுத்தி ஆண்டொன்றுக்கு 90 மெகாவாட் வரையில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.
ஸ்மார்ட் ஜன்னல்களில் இருந்து கிடைக்கிற மின்சக்தியைபகல், இரவு என நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பகல் நேரத்தில் சூரிய மின் சக்தியை பயன்படுத்தி அறையைக் குளிரூட்ட முடியும். சேமித்து வைக்கிற சூரிய மின் சக்தியை இரவு நேரங்களில் மின்விளக்குகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெரிய கட்டிடங்களில் மட்டுமே இந்த ஸ்மார்ட் ஜன்னல்களைப் பயன்படுத்த முடியும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067812
|