குளியல் அறையில் பதிகற்கள் அமைப்பது

24 ஜனவரி 2024   05:30 AM 19 மார்ச் 2019   02:32 PM


பொதுவாக, வீட்டில் ஒவ் வொரு அறைக்கும் அதன் பயன்பாடு அடிப்படையில், சில வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை புரிந்து, அதற்கு ஏற்ற வகையிலேயே அந்தந்த அறைகளை பயன்படுத்தும் நடைமுறைகள் வகுக்கப்படும். 

வீட்டில் வேறு எந்த அறையை காட்டிலும், குளியல் அறையில் அதிக தண்ணீர் பயன் =பாடு இருக்கும். இதனால், அந்த அறை பெரும்பாலான நேரங்களில் ஈரமாகவே இருக்கும்.சமீப காலமாக, பலரும், குளியல் அறையில் பதிகற்கள் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு, பதிகற்கள் அமைக்கும் பழக்கம் அதிகரித்த நிலையில், குளியல் அறையில் வழுக்கி விழுந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மூத்தகுடிமக்கள், அதிலும், தனியாக வசிக்கும் மூத்த குடி மக்கள் இதுபோன்ற சம்பவங்களில் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் கூட இதில் பாதிக்கப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, சிலர், வழுக்காத தரை வேண்டும் என்பதற்காக, கரடுமுரடான  பதிகற்கள், கிரானைட் கற்களை பயன்படுத்து கின்றனர். வழுக்கி விழும் ஆபத்தை இது குறைத்தாலும், இவ்வகை தரைகளை சுத்தம் செய்வதில், மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் தவறினால், கரடு முரடு பகுதிகளில் சேரும் ஈரமான அழுக்குகள், அந்த அறை மட்டுமல்லாது, வீட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. என்வே, இதுபோன்ற விபரீதமான தீர்வுக்கு செல்லாமல், வழுக்காத தன்மை கொண்ட பதிகற்களை பயன்படுத்துவது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.

டைல்ஸ்களை பதிக்கும்போது டைல்ஸ் உடைந்துபோக வாய்ப்பு உள்ளது. டைல்ஸ் களில் ஏதாவது கறைகள் ஏற்பட்டால் அதை எளிதாக துடைக்கும்வகையில் இருக்கவேண்டும்.ஒரே மாதிரியான டைல்ஸ்களை பதிக்காமல் இடையிடையே டிசைன் செய்யப் பட்ட டைல்ஸ்களை பதிப்பது அழகான தோற்றத்தை அளிக்கும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067811