சீனாவில் ஷியான் மாகாணத்தில் 100மீ உயரமுடைய ஒரு சூப்பர் சுற்றுப்புற சூழல் கட்டுப்பாட்டு டவர் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார்கள்.அது என்ன சுற்றுப்புற சூழல் கட்டுப்பாட்டு டவர்? சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை உறிஞ்சி மறுபக்கம் அதை சுத்திகரித்து கசடு, தூசு, நச்சு நீக்கி சுத்தமான காற்றாக வெளியிடுகிற அற்புதமான ஏர் ஃபில்டர் கட்டுமானம் தான் சுற்றுப்புற சூழல் கட்டுப்பாட்டு டவர். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நிறுவியுள்ளது ஷியான் மாகாண நிர்வாகம். 100 மீ உயரமுடைய இந்த கான்கிரீட் டவர் 3 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு சமீபத்தில் அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இது ஏறத்தாழ 10கி.மீ சுற்றளவுள்ள காற்றினை உறிஞ்சி சுத்தப்படுத்தக் கூடியதாகும். இதை கிரீன் ஹவுஸ் என்றும் அழைக்கிறார்கள். இதை வடிவமைத்து நிறுவிய காஜிஞ்சி நிறுவனம் இது பற்றி கூறும் போது. ‘‘100மீ உயரமுடைய ஏர்ஃபில்டர் டவர் நன்றாக வேலை செய்கிறது. விரைவில் 300மீ உயரமுடைய டவரை உருவாக்க இருக்கிறோம். இதனால் 30ச.கி.மீ சுற்றளவில் உள்ள காற்று மாசு சுத்தமாகும். சிறு நகருக்கு இது போதுமானது. பெரு நகரங்களுக்கு வெவ்வேறு இடங்களில் 3 அல்லது 4 பொருத்திக் கொள்ளலாம்‘‘ என தெரிவித்திருக்கிறது.
இந்நிறுவனம் தான் இரு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டி ட்ரீ என்கிற பெயரில் ஹாப்பிங் மால், வணிக வளாகங்கள் மக்கள் கூடுமிடங்களில் 4 மீ உயரமுடைய ஏர்ஃபில்டரை சோதனை முயற்சியாக நிறுவி வெற்றி கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷியான் மாகாணத்திற்குப் பிறகு, சீனாவில் உள்ள முக்கிய மாகாணங்களில் காற்று மாசடைந்த நகரங்களில் இது போன்ற பிரம்மாண்ட காற்று வடிகட்டி டவரை வரிசையாக உருவாக்கப்போகிறார்களாம். இந்த ஐடியா நல்ல ரிசல்டைத் தந்து விட்டால், உலகெங்கும் உள்ள பெரு நகரஙகளில் குறிப்பாக ஆசிய நகரங்களில் தலா ஒரு காற்று வடிகட்டி டவர் கட்டப்படலாம். இந்தியாவை எடுத்துக் கொண்டால், டில்லிக்கு இது நிச்சயம் தேவைப்படும்..
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067822
|