'தனி நபர்கள் பெயரில் உள்ள மனைகளுக்கான வழிமுறைகளை, 'லே - அவுட்'களில் விற்பனையாகாத மனைகளுக்கு பயன்படுத்த கூடாது' என, நகர் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., அறிவித்துள்ளது.தமிழகத்தில், அங்கீகார மில்லா மனைகள் வரன்முறை திட்டம் அமலில் உள்ளது.
இதில், தனி நபர்கள் பெயரில், பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு தனியாகவும், லே - அவுட் மேம்பாட்டாளர்கள் வைத்திருக்கும் மனைகளுக்கு தனியாகவும், விதிகள் குக்கப்பட்டுள்ளன.இருப்பினும், லே - அவுட்களில் விற்காத மனைகளை வரன்முறைப்படுத்த, சில விதிகளை சுட்டிக்காட்டி, தனி மனைகளை வரன்முறைப்படுத்தாமல், அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து, டி.டி.சி.பி., பிறப்பித்துள்ள உத்தரவு:தனி நபர்கள் விலைக்கு வாங்கிய மனைகளை வரன்முறைப்படுத்த, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அணுகு சாலைகள், உரிமை விபரம் ஆகியவற்றை சரி பார்த்து, உள்ளாட்சிக்கு அனுப்ப வேண்டும்.உள்ளாட்சி அமைப்பினர், நிலத்தை நேரில் ஆய்வு செய்து, அணுகு சாலைகளை சரி பார்க்க வேண்டும். தனி மனைகளுக்கு திறந்தவெளி ஒதுக்கீடு கட்டுப்பாடு இல்லை.
ஆனால், சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை, முறையாக ஒப்படைப்பு செய்திருக்க வேண்டும்தனி நபர்கள் பெயரில் உள்ள மனைகளுக்கான இந்த நடைமுறையை, லே - அவுட்களில் விற்பனையாகாமல் உள்ள மனைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. லே - அவுட்களில் விற்காமல் உள்ள மனைகளுக்கு, திறந்தவெளி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை பார்க்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067815
|