நடைவழிகளின் விட்டம் போட வேண்டுமா?

24 ஜனவரி 2024   05:30 AM 12 மார்ச் 2019   01:23 PM


நடைவழிகளின் (Passage/Corridor) விட்டம் (Cross Beams) போட வேண்டுமா? நம்முடைய  தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாகக் கட்டப்படும் பெரும்பாலான கட்டடங்களில் ( பள்ளிகள்,கல்லுரிகள், மருத்துவமனைகள், ஏன் குடியிருப்பு வீடுகளிலும்) - நடைவழிகளின் குறுக்கே விட்டங்கள் போட்டுக் கட்டுவது வழக்கமாக இருக்கிறது.

இப்படி குறுக்கு விட்டங்கள் போட்டுக் கட்டினால் தான்-எல்லாத் தூண்களையும் இணைத்துப் பிணைத்து விட்டங்கள் போட்ட கட்டுமானங்களே பாதுகாப்பானவை-உறுதியாவை என்ற எண்ணப்போக்கு பெரும்பாலான கட்டுநர்களிடமும் கட்டடக் கலைஞர்களிடமும் - ஏன் பல பொறியாளர்களிடமும் இருப்பதை நாம் 40 ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம்.

ஆங்கிலேயேப் பொறியாளர்கள் பல கட்டடங்களில் ( பெரும் பாலும் சென்னைக் கூரைவகை (Madras Terraced  Buildings) நடைவழிகளில் குறுக்கு விட்டம் போடாமலேயே தான் வடிவமைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பேயே தமிழ்நாட்டு மன்னர்களால் கட்டப்பட்ட மாபெரும் கோயில் கட்டுமானங்கள், எல்லா உட்பிரகாரங்களும் (Inner Corridor) - (100 அடி முதல் 1000 அடி நீளம் வரை) - கற்பலகங்களால் (Stone Slabs) பாவப்பட்டு இடையிடையே குறுக்கு விட்டங்கள் இல்லாமலே-போடாமலே பெருந்தச்சர்களால்  (Engineer-cum-Architect) கட்டப்பட்டுள்ளன. 

1000 ஆண்டுகளுக்கு மேலாக அவையாவும் உறுதியாக இன்றளவும் நிலைத்துப் பயன்பாட்டில் உள்ளன.
கட்டட வடிவமைப்பாளரின் முறையான-மிகச்சரியான வடிவமைப்பால் நடைவழிகளில் குறுக்கு விட்டங்கள் போடாளுமலே நிலைத்த. உறுதியான கட்டங்களைக் கட்டலாம் கட்டுமானச் செலவைக் குறைப்போம்.     

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067850