கட்டப்பட்ட பழைய கட்டடங்களுக்கு மேலே இரண்டாம் தளம் கட்டலாமா? பாதுகாப்பானதா? பல ஊர்களில் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் 40,50 ஆண்டுகளுக்கு முன் பாரந்தாங்கும் சுவர்களைக் கொண்ட பல கட்டடங்கள் உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகை, இட நெருக்கடி காரணமாக, இத்தகைய கட்டடங்களின் மீது மேலும் ஒரு தளம் (Additional Floor Mostly Second Floor) கட்டிட விரும்பி நம்முடைய கருத்துரை கேட்கின்றனர்.
எங்களை அணுகும்போது அத்தகைய நேர்வுகளில், கட்டட அடிமனையின் மண்ணடுக்கு, அமைக்கப்பட்டுள்ள அடித்தளவகை அதன் அகலம், தரைத்தளச் சவரின் கனம், பூச்சுவகை, கட்டம் ஒழுங்காகப் பேணி சிறப்பாகப் பாரமரிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரம், மேலே கட்டப்போகும் இரண்டாம் தளத்தின் கூரை வகை இவற்றையயல்லாம் கேட்டுப் பெற்று தொகுக்கிறோம்.
பின்னர் இந்த விவரங்களின் அடிப்படையில் பாரந்தாங்கும் சுவரின் தாங்கும் வலிமையினை ஒவ்வொரு தளமட்டத்திலும், நிறைவாக அடித்தள மட்டத்திலும் துல்லியமாகக் கணக்கிடுகிறோம். அவை பாதுகாப்பாக (Safe) இருந்தால் இரண்டாம் மாடி கட்டலாம் எனக் கருத்துரைக்கிறோம். பாதுகாப்பாக இல்லாவிட்டால் (If Unsafe), அடித்தளத்தை மேலும் அகலப்படுத்தியும், தரைத்தளச் சுவரை (GF Walls) வலிமைப்படுத்தியும் இரண்டாம் மாடி கட்டச் செய்கிறோம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067858
|