கான்கிரீட் ஊற்றும் போது?

24 ஜனவரி 2024   05:30 AM 12 மார்ச் 2019   12:54 PM


சிவா, சிவாவின்  மாமா, ராகவன் ஆகியோருக்கு மதியம் ஓட்டலிலிருந்து சாப்பாடு வந்தது. சிவாவிற்கு கான்கிரிட் ஊற்றும் போது மேற்கொள்ள வேண்டிய பல பணிகள் பற்றி தெரிந்து கொள்ள படும் ஆர்வம் இருந்தது... ”சார்.. மிஷின்ல கலக்குறது.. கைல கலக்குறது ரெண்டு கான்கிரீட்டுக்கும் என்ன சார் வித்தியாசம்?’’ எனக் கேட்டான் சிவா.‘“ இப்ப எங்க மாப்பிள்ளை.., மேனுவலா கலக்குறாங்க..? எல்லாம் மி´ன் தானே..” சொன்னார் சிவாவின் மாமா.“”ஆமா. சார்..ஆனா ரெண்டுத்துக்கும் மிக்ஸ் டிசைன் என்பது அடிப்படையில வேறானது.  கலவை இயந்திரம் கொண்டு கலக்கப்படும் கான்கிரீட்கலவை ஒரே சீராக இருக்கும் என்பதால், அதுதான் இப்ப எல்லா இடத்துலயும் இருக்கு.

“ கான்கிரீட் கலவை என்பது வேலை ஆரம்பிப்பதற்கு எத்தனை மணி நேரம் முன்னே ரெடி செய்யனும்..?
“”கான்கிரீட் கலவை கலந்த உடனேயே உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு வார்ப்பது கலவை கலந்த 30 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும். வார்க்கும் போது கான்கிரீட் சிதைவுறா வண்ணம் இருக்கவும் வேண்டும்.

கான்கிரீட்டை வார்ப்பதற்கு முன்னர், “ஃபார்ம் வொர்க்” கின் மீதுள்ள தூசி தும்புகளையும் மற்ற சிராய்,துண்டுகள் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து சிமெண்ட் பால் தெளித்தூற்ற வேண்டும்.’’
“”அப்படீன்னா கான்கிரீட் ஊத்த ஆரம்பிச்ச உடனே அது எவ்வளவு பெரிய இடமா இருந்தாலும்,  ஏக் தம் ஊத்தி முடிச்சிடனுமா..?’’

“” அப்படி அர்த்தமில்லை. ஒவ்வொரு மாடியிலும் தளங்கள் மற்றும் உத்தரங்கள் ஆகியவனவற்றில் வார்ப்பது தொடர்ந்து இருக்க வேண்டும். இருப்பினும் பெரிய பணிகளில் 8  அல்லது 10 மணி நேரம் வார்ப்புப் பணிகள் அமையும் போது நிறுத்தாமல் இயலாது. 

எனவே,  இம்மாதிரியான நேரங்களில் வார்ப்பதை நிறுத்தி முடித்து அடுத்த நாள் பணியினை தொடர வேண்டும். மீண்டும் அடுத்தநாள் பணியை தொடரும்போது முன் தின கான்கிரீட்டும் இன்று வார்க்கும் கான்கிரீட்டும் இணையும் இடங்களில் நான்கு பக்கங்களிலும் தாங்கப்பட்டுள்ள தளங்களில் மூல கம்பி வேலை களுக்கு இணையாக கான்கிரீட் வார்க்க வேண்டும்.

உத்தரங்களின் முழு நீளத்திற்கும் ஒரே சமயத்தில் கான்கிரீட் வார்ப்பதுதான் உசிதமானது. இவ்வாறு இயலாத நிலையில் நடு இடைவெளியில் இணைப்புக் கொடுக்கலாம். ஆனால், உத்தரமும் தூணும் இணையும் இடங்களில் தூணுக்கான கான்கிரீட் வார்த்து இரண்டு மணி தாமதித்தே உத்தரத்திற்கு வார்க்க வேண்டும்’’.
“”ஓ இவ்வளவு இருக்கா?’’

“”இன்னும் இருக்கு. கான்கிரீட் இடும் வேலையின் போது அதிக எண்ணிக்கை யிலான ஆட்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். ஆண்களும், பெண்களும் கான்கிரீட் இடப்படும் தளத்தின் மேல் நின்று கொண்டுதான் கலவையை இடும் வேலையைச் செய்ய முடியும். கம்பிகளின் மேல் ஏறி நிற்பதால் கம்பிப் படல் தனது இயல்பான நிலையை விட்டுச் சற்றுத் தாழ்த்தப்பட வாய்ப்பு ஏற்படும். கம்பிகளின் மேல் கனம் ஏறுவதால் இப்படி ஆகிறது. இதனால் கம்பிச் சட்டம் தாழ்ந்து போய் கான்கிரீட் வலுக்குறைந்து சரிந்து விட நேரலாம். எனவே, கான்கிரீட்டை இடும்போது மேலே நின்று கொண்டு இருக்கக் கூடியவர்களின் உடல் எடையால் கம்பிகளின் அமைவு நகராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

இதற்கு மாற்றாகச் சரியான இடைவெளியில் தாங்கு கம்பிகளை  நுழைத்து வலுக்கூட்ட வேண்டும். கம்பிப்படலின் மேல் நடக்கும் தொழிலாளர்கள் கவனமாக நடக்க வேண்டும். இயந்திரங்களை நகர்த்திக்கொண்டு போகும் போது இடைஞ்சல் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      
“”ஓஓ நாம மோல்டிங் போடும்போது கவனமா இதெல்லாம் பாத்துக்கனும்..’’ “கான்கிரீட் கலவை கெட்டியாக இருந்தால் காம்பாக்ட் ஆவதற்கு சற்று கூடுதல் நேரம் எடுக்கும். ரீ-இன்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீல் போன்றவற்றை வைப்ரேட்டிங் நீடிலால் தொடக்கூடாது. அது நீடிலை சேதப்படுத்திவிடும். கான்கிரீட் கலவையை அதிகமாக வைப்ரேட் செய்யக் கூடாது. இது கான்கிரீட்டின் நீர்ப்புத் தன்மையை அதிகமாக்கி கான்கிரீட்டை ஒழுக வைத்து விடும். “‘

“” என் ரெண்டாவது பொண்ணு வீட்டுக்கு தளம் போடும்போது, வைப்ரேட்டர் நீடில் ரிப்பேர் ஆகி வேலை நின்னு போச்சி சார் ‘’ ” அதுக்குத்தான் கான்கிரீட் தeங்களை அமைக்கும்போது உபயோகிக்கும் வைப்ரேட்டர் நீடில்களை அடிக்கடி மாற்ற வேண்டியது இருக்கும்.  எனவே, அவற்றை கூடுதலாக ஸ்டாக் வைத்துக் கொண்டால் வேலை நிற்காது. கான்கிரீட் ஸ்லாபுகளை அமைக்கும் போது புதிய நீடில்களை
மாற்றுவதற்கான நேரம் மிகக் குறைவாகவே இருக்கும் இந்த நேரத்தில் நீடில்கள் ஸ்டாக் இருந்தால் வேலை நிற்காது. 

தeத்தை ஃபினி´ங் செய்யும் போது ஓரத்தில் இருந்து ஃபினிஷ் செய்ய ஆரம்பிக்க வேண்டும். 
மட்டப்பலகையை வைத்து சமன் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்ட்ரா சிமெண்டை சேர்க்கக் கூடாது. 

தளத்தின் மேல் பரப்பு வழவழப்பாக இருக்கக் கூடாது. இதனால் மயிரிழை விரிசல்கள் விழ நேரும். ஒரு துடப்பத்தினால் தேய்த்து விட்டோமானால் பரப்பு சீராகிவிடும். வேலை முடிந்த பின்  பிளாஸ்டி ஷீட்டினால் மூடிட வேண்டும்’’.

“” சார் டவுட்.. நாம கான்கிரீட் போடும் போது திடீர்னு மழை வந்தா  என்ன பண்றது..?’’ “”சிவா நம்ம ஊரைப் பொறுத்த வரை , நவம்பர் டூ ஜனவரி தான் பயம்.. அதுக்கு மேல மழை பயம் கிடையாது....அப்படியே வந்தால்.. கான்கிரீட் போட்ட பிறகு 4 மணி நேரம் கழிச்சு வந்தா பயமில்லை.. அதுவே மோல்டிங் போட்ட மறுநாள் வந்தால் உங்களுக்கு லக்குதான்..’’

“”ஆமா, நமக்கு ஓசியில கியூரிங் கிடைச்சிடும்.’ “”ஆமா. கான்கிரீட் தeத்தை போட்ட பிறகு, தளத்தை ஈரப்படுத்துவது மிக முக்கியமான வேலை யாகும். இது கான்கிரீட்டின் பலத்தைக் குறைந்த செலவில் அதிகப்படுத்தும். விரிசல்கள் தோன்றாமலும் தடுக்கும். 

 “”சரிங்க சார். வர்ற சன்டே மோல்டிங் போடறோம். எப்போ..முட்டுப்பலகைகள் டீ- ­­ஷட்டரிங்  செய்யனும் சார்.?’’பீம்கள், காலம்கள் போன்றவற்றை 36 முதல் 48 மணி நேரத்திற்கு ஷட்டர் போட்டு வைத்திருக்க வேண்டும். இது தான் சேஃப்டி. ஆனால், கான்கிரீட் காயாமல் இருக்கும் பட்சத்தில்,ஷட்டரிங் எடுக்கும் போது சேதமாகாமல் எடுக்க வேண்டும். ஷட்டரிங்கை எடுக்கும் போது அதனுடன் கான்கிரீட் ஒட்டிக்கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய ­rட்டர்களை மழைக்காலத்தில் அதிக நேரமும் கோடையில் குறைவான நேரத்திலும் எடுக்கலாம்.  என்னைக்கேட்டால் ஒரு வாரம் கழித்து முட்டுப்பலகைகள்  எடுக்க வேண்டும்.

அவ்வாறு, மரச்சட்டங்களை எடுக்கும் போது தளத்தின் மூலைகளும், முனைகளும் சேதமாகாமல் எடுக்க வேண்டும். ஸ்கஃப்போல்டிங் பைப்களை அகற்றும் போது தளத்தின் நடுவில் இருந்து துவக்க வேண்டும். பின்னர்தான் ஓரங்களுக்குச் செல்ல வேண்டும்’’.  

“”சரிங்க சார்..கூரை அமைக்கும் போது, சில இடங்களில் முட்டுப்பலகைகள் சரிந்து விபத்து ஏற்படுகிறதே ..,அது எப்படி..?’’
“”அதற்கு முட்டுப்பலகைகள் சரிவர நிறுவப்படாததே காரணம். விளக்கமாக சொல்ல வேன்டுமென்றால், சாப்பிட்டு வாருங்கள். நம்ம சைட்டை வைத்து உங்களுக்கு விளக்குகிறேன்.. (வீடு கட்டப்படும்).

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067862