நவநீதா பிராப்பர்டி டெவலப்பர்ஸ்

24 ஜனவரி 2024   05:30 AM 12 மார்ச் 2019   10:29 AM


லொகேஷன் தேர்வு முதல் மண் பரிசோதனை, கட்டட வடிவமைப்பு, தரமான கட்டமைப்பு, கொடுத்த வாக்கு உறுதியின் படியான தரமான கட்டடப் பொருட்கள் தேர்வு, தெளிவான ஆவணங்களுடன் வீட்டை வாடிக்கையாளர்களிடம் குறித்த நேரத்தில் ஒப்படைப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் மிகச்சிறந்த செயல்பாடும், வெளிப்படைத் தன்மையும் கொண்டிருக்கும் கட்டுமான நிறுவனங்களுள் திருச்சி நவநீதா புராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் தனித்தன்மையும் புகழையும் கொண்டிருக்கும் நிறுவனமாகும். குறுகிய காலத்திலேயே திருச்சி மக்களிடம் நற்பெயரையும் நம்பகத்தன்மையும் பெற்றிருக்கும் நவநீதா பிராப்பர்டி டெவலபர்ஸ் நிறுவனம் திருச்சி  முன்னனி கட்டுமான நிறுவனங்களின்  வரிசையில்  ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.

திருச்சி மட்டுமல்லாது கோவை, கரூர் ஆகிய இடங்களில் பல அடுக்குமாடி புராஜெக்டுகளை கட்டி முடித்திருக்கும் நவநீதா புராப்பர்டி டெவலபர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்களான திரு.P.சுரேஷ் மற்றும் B.S. ஆனந்த கிருஷ்ணன் ஆகிய இருவருமே கட்டுமானப் பொறியியலில் நிறைந்த அனுபவம் பெற்றவர்கள். 

திரு.P.சுரேஷ் அவர்களிடம் பேசிய போது, ‘‘நாங்கள் அடுக்குமாடி வீடுகள், தனி வீடுகள், வணிக வளாகங்கள் என பலவகை புராஜெக்டுகளை முடித்திருக்கிறோம். அவற்றுள் திருச்சி தில்லை நகர், ஸ்ரீரங்கம், எடமைலைப்
பட்டிப் புத்தூரில்  ‘நவநீதா ஸ்கொயர்’, கிராவ் வோட் பகுதியில் ‘நவநீதா அபூர்வா’, பொன்நகரில் ‘நவநீதா அர்ச்சனா’, உய்யக்கொண்டான் திருமலையில் ‘நவநீதா வேலா’, நம்பர் ஒன் டோல்கேட் அருகே ‘நவநீதா பிரம்ம நிவாஸ் ‘ஆகிய புராஜெக்டுகள் குறிப்பிடத்தக்கவை.  

கரூர் ஜவஹர் பஜாரில் ‘நவநீதா வாசவி ஹோம்ஸ்’ மற்றும் கோவை பீளமேட்டில் ‘நவநீதா பத்மாவதி ‘போன்ற புராஜெக்டுகள் எங்கள் தரத்தையும் அர்ப்பணிப்பையும் எதிரொலிக்கும் புராஜெக்டுகளாகும்.எங்களது ஒவ்வொரு புராஜெக்டுக்கும் கண்கவர் எலிவேன், பலவண்ண முகப்பு கட்டுமானத் தரம் ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள் .

திரு. பி.எஸ். ஆனந்த கிருஷ்ணன் நிறுவனத்தின் தற்போதைய புராஜெக்ட்கள் பற்றிக் கூறும்போது, ‘‘திருச்சியில் நொச்சியம் நம்பர்  ஒன் டோல்கேட் அருகில் ‘குமரன் கார்டன்’ என்கிற வில்லா புராஜெக்ட், திருச்சி பழைய பால்பண்ணை விசுவாஸ் நகரில் 64 வீடுகள் கொண்ட புராஜெக்டுகளை செய்து வருகிறோம். ஸ்ரீரங்கத்தில் 45 வீடுகள் உடைய ‘நவநீதா முத்துநகர்’ மற்றும் 30 வீடுகள் உடைய ‘நவநீதா ராகவேந்திரா’ என்கிற புராஜெக்ட்டையும் செய்து தருகிறோம். 

இது தவிர கரூரில் 32 வீடுகள் கொண்ட ‘நவநீதா அரவிந்தா’ என்கிற புராஜெக்ட்டையும், கோவை சிங்கநல்லூரில் ‘நவநீதா ஓக் கிரவுன்‘ என்கிற புராஜெக்ட்டையும் செய்து வருகிறோம்’’ என்றார். 

 மேலும் விவரங்கட்கு:


நவநீதா புராப்பர்ட்டி டெவலபர்ஸ்


முதல் தளம், செவன் ஹில்ஸ் டவர், 
கரூர் பைபாஸ் ரோடு, 
அண்ணாமலை நகர், 
திருச்சிராப்பள்ளி- 18, 
தொலைபேசி: 0431 4020421 / 9994903252
இமெயில்: navaneetha.home@gmail.com
Web: www. navaneethaproperty.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067853