ஆதித்யா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்

24 ஜனவரி 2024   05:30 AM 12 மார்ச் 2019   10:35 AM


ஒரு சாதாரண காண்ட் ராக்டராக தனது தொழிலைத் தொடங்கியவர்   ஆதித்யா கன்ஸ்ட்ரக்rன் உரிமையாளர் திரு. ஆர்.எஸ். ரவி. குறுகிய காலத்திலேயே தனது தரமான கட்டுமானங்கள், தெளிவான ஆவண ஒப்படைப்பு,  குறித்த காலத்தில் வீடுகளை வாடிக்கை யாளர்களிடம் ஒப்படைத்தல், வெளிப்படைத் தன்மை மற்றும்விற்பனக்குப் பிந்தைய சேவை போன்ற ஒரு  முன்னணி கட்டுநருக்கான குணாதிசயங்க ளோடு திகழும் திரு. ஆர்.எஸ். ரவி தற்போது திருச்சியின் முக்கியமானபில்டர் பட்டியலில் இணைந்திருக்கிறார். இந்திய அளவில் பிரபலமான கட்டுனர்கள் சங்கமான கிரடாய் அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார்.

“19 வயதில் தொடங்கிய என் தொழில் வாழ்க்கை இன்று 26 வது ஆண்டில் அடியயடுத்து வைத்திருக்கிறது. எனக்கு முதன் முதலாக என் மீது நம்பிக்கை வைத்தும் என்னை ஊக்கப்படுத்தும் வகையிலும் தனது வீட்டைக் கட்டும் வாய்ப்பை என் நண்பர்கள் அருண் மற்றும் அசோக் அவர்களின் தந்தையார் திரு. கண்ணப்பன் அவர்கள் வழங்கினார்கள்’’ என தன் கட்டுமானத் தொழிலின் ஆரம்பத்தை நினைவு கூர்கிறார் ரவி. “தரம் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு என் தொழிலை அமைத்துகொண்டேன். 

ஒப்புக்கொண்ட வேலைகளை அதன் தரம் குறையாமல், வார்த்தை மாறாமல் செய்து கொடுப்பது என் கொள்கை. இதுவரை தரத்திலோ, Commitment - லோ சமரசம் செய்து கொண்டதில்லை’ என தன் தொழிலின் வெற்றிக்கான காரணிகளை அடுக்குகிறார்.

“எத்தனை சிரமப்பட்டாலும்,அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவேன்.தேவைகள் மனிதருக்கு மனிதர் மாறும். எனவே, அவர்கள் கேட்கும் சிலசில தேவைகளை கண்டிப்பாக செய்து தருகிறோம். செய்யமுடியாது என கண்டிப்பு காட்டுவதில்லை. அது அவர்களின் கனவு இல்லம் என்பதை என் மனதில் வைத்திருப்பேன். மேலும், எனக்கென்று ஒரு தரநிர்ணயம் வைத்துள்ளேன்.அதை ஒருநாளும் சமரசம் செய்து கொள்வதில்லை” என்று கூறும் ரவி, இது வரை சுமார் 120 வீடுகள் கட்டி முடித்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்..

“ஆன் கோயிங் புராஜெக்ட்’ பற்றிக் குறிப்பிடும் போது, “தற்போது ஆதித்யா ஐஸ்வர்யம்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிவருகிறோம். இது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் கோவிலில் இருந்து 1Km தூரத்தில் மேலூர் சாலையில் அமைந்துள்ளது. 2  BHK மற்றும் 3 BHK வீடுகள்  கொண்ட 84 வீடுகள் கொண்ட குடியிருப்பு A,B மற்றும் C என 3 பிளாக்குகளாக கட்டப்பட்டுள்ளன. அதில் இன்று சில வீடுகளே விற்பனைக்கு உள்ளன. கார் பார்க்கிங், சிறுவர்கள் பூங்கா, பார்க், கோவில், தானியங்கி லிப்ட்,CCTV Camera,Inter Com போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. எல்லா வீடுகளுக்கும் இன்வெர்ட்டர் பேட்டரிகள்  பொருத்தப்பட்டுள்ளன. Solar Water Heaters  மூலம் 24 மணி நேரமும் வெந்நீர் வழங்கப்படுகிறது.  காவிரி தண்ணீர் மற்றும் போர்வெல் மூலமும் தடையற்ற தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாட்டுக்கு சோலார் மின்வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டிபார்மெண்டல் ஸ்டோர்ஸ் போன்ற கடைகளும் இந்த வளாகத்திலேயே உள்ளது என்பதும் சிறப்பான அம்சமாகும்’’ எனக் குறிப்பிடுகிறார் திரு.ஆர்.எஸ். ரவி. 

முகவரி:
ஆதித்யா கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம், 
92- ஆதித்யா ஸ்ரீநித்தி கார்டன்,
அம்மா மண்டபம் ரோடு, 
ஸ்ரீரங்கம், 
திருச்சி- 620006 ,
செல்: 9842404555
E: adhithyaaconstructions@gmail.com | www.adhithyaaconstructions.com 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067852