புதுமையான சிந்தனை, செயல் திட்டம் மற்றும் சிறந்த கட்டுமான மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட கட்டுமான நிறுவனமாக வளர்ந்துள்ள நிறுவனங்களுள் கே ஸ்கொயர் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனமும் ஒன்று.
K Square Constructions நிறுவனம் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு சிறிய அளவிலான கட்டிடங்களில் இருந்து பலகோடி மதிப்புள்ள கட்டிடங்களைக் கையாளுகிற பில்டிங் புரமோட்டராக வளர்ந்துள்ளது. குடியிருப்பு திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வில்லாக்கள் வணிக வளாகங்கள் ஆகியன எங்களின் முக்கிய வணிக பிரிவுகளாகும். Joint Venture அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் கட்டி விற்பனை செய்து வருகிறது. மேலும் தனிப்பட்ட காண்ட்ராக்ட் அடிப்படையிலும் புராஜெக்ட்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. கே. குமரன் கூறும்போது, “”வாடிக்கையாளர்களுடனான எங்களின் இணக்கமான உறவு மேலும் பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத் தருகிறது. கட்டிட ஆலோசனையில் தொடங்கி ஜாயின்ட் வெஞ்ச்ர், லேண்ட் டெவலப்பர் களாகவும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுபவர்களாகவும் உயர்ந்து மலைக்கோட்டை மாநகரில் தனித்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது. மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் எங்களின் தனித்துவமான படைப்புகள் உருவாகும். எல்லா வெற்றிகரமான பில்டர்களைப் போலவே, எங்களுடைய தாரக மந்திரமே தரம், நேர்மை, கடும் உழைப்பு ஆகியவற்றை எவ்வித சமரசமின்றி கடைபிடிக்கிறோம்.
இவற்றோடு கட்டிடம் கட்டும்பொழுது, ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படை தேவை மற்றும் கனவுகளை மனதில் வைத்து பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம். கட்டுமான தரத்தில் புதிதாக உள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரத்தை மேம்படுத்துகிறோம்.
உதாரணமாக காலம் லாப்பிங் பதிலாக ரீ பார் கப்ளர் பயன்படுத்துகிறோம். PT பீம் அண்ட் ஸ்லாப் முறையிலும் செய்து தருகிறோம்.கட்டுமானம் செய்யும் இடத்தை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறோம் அரசாங்க விதிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இடத்தை,மனையை தேர்வு செய்கிறோம். நல்ல காற்றோட்டமாகவும் இயற்கை யான வெளிச்சம் கிடைக்கும் வகையிலும் தண்ணீர் செலவை குறைக்கும் வகையிலும் Green பில்டிங் கான்செப்ட்- ஐ மனதில் கொண்டு கட்டிடங்களை வடி வமைக்கிறோம்’’ என நம்மிடம் பேசியவர் தனது லேட்டஸ்ட் புராஜெக்டைக் குறிப்பிடும்போது,
“K Square Constructions நிறுவனம் தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் பால் பண்ணையில் 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளையும் திருவளர்ச் சாலையில் தனிவீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகளையும் கட்டி வருகிறோம்’ என்றார்.
K Square Constructions நிறுவனம் ஜாயின்ட் வெஞ்சர் முறையிலும், காண்ட்ராக்ட் முறையிலும் தரமிக்க கண்கவர் கட்டுமானங்களை கட்டித் தருவதை முதன்மையாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்கட்கு:
K Square Constructions
96/G 5, பெரிய கம்மாளர் தெரு,
காசி ஆர்கேட், திருச்சி - 620008
போன்: 9043933393, 0431- 4060589
E: erkumaran_k@yahoo.co.in
W :ksquare.co.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067865
|