திருச்சிராப்பள்ளியின் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக எங்களுடைய பாரத் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் கட்டுமான நிறுவனம் 31 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.1987 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை சுமார் 32 அபார்ட்மென்ட்கள் மற்றும் தனி வீடுகள் உள்ளிட்ட 1600 வீடுகளுக்கும் மேலாக கட்டிமுடித்துள்ளோம்.
பாரத் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. நூர்முகம்மது தங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கூறும்போது, ‘‘ஆரம்பத்தில் சிறு கட்டிடங்கள் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தோம். 1989 ல் ஸ்ரீரங்கத்தில் எங்களுடைய முதல் அபார்ட்மெண்ட்டைத் துவக்கினோம். அன்று முதல் இன்று வரை வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு அபார்ட்மெண்ட் என்று கட்டி வருகிறோம். இத்தொழிலில் நானும் எனது குடும்பத்தாரும் ஈடுபாடு இருந்தாலும் இது ஒரு கூட்டு முயற்சியாகத் தான் கருதுகிறேன். எங்களுடன் பணியாற்றும் பொறியாளர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மட்டுமே இந்த வெற்றி எங்களுக்குச் சாத்தியம்’’ என்கிறார்.
பாரத் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்தின் தனித்தன்மை பற்றிக் கேட்டபோது, ‘‘எல்லோருமே வீடு கட்டு கிறார்கள் நீங்கள் ஏதேனும் புதுமையாகச் செய்ய வேண்டும் அதே நேரம் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இது தான் எங்கள் தனித்தன்மை. உதாரணத்திற்கு ஒரு புராஜெக்டில் கடைசி தளத்தில் மாடியில் உள்ளவர்களுக்கு என்னதான் நீங்கள் வெதரிங் கோர்ஸ் டைல் போட்டுக் கொடுத்தாலும் வெயில் காலத்தில் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த தளத்தில் உள்ள வீடு வெக்கையாக இருக்கும். ஏசி கட்டணம் அதிகமாக இழுக்கும். அதனால் அந்த வீடு மட்டும் லேசில் புக்கிங் ஆகாது.
அதற்கு தீர்வுகாணும் பொருட்டு மொட்டை மாடியில் 8 அடி உயரத்தில்அவர்களுக்கு அலுமினியம் கலந்த GI தகட்டு கூரை அமைத்துக் கொடுத்தோம். அந்த தளத்தில் வீடு, ஃப்ளாட் வாங்கத் தயங்கியவர்கள் உடனே கடைசி மாடியிலும் புக்கிங் செய்து கொண்டு விட்டார்கள். இது போல் அந்தந்த சந்தப்பர்த்திற்கு தகுந்தாற்போல் நாம் சிந்திக்க வேண்டும்’’ என்கிறார் நூர்முகம்மது.
மேலும் அவரிடம், தற்போதைய புராஜக்ட் விவரங்களைக் கேட்டபோது, ‘‘ தற்போது திருவரங்கத்தின் பிரதான சாலையில் Bharath Tulip Gardenia என்ற தனிவீடுகளின் தொகுப்பைக் கட்டி வருகிறோம். சுமார் 12 வீடுகள் கொண்ட வளாகம் விலை ரூ. 65 லட்சம் முதல் 75 லட்சம் வரை விற்று வருகிறோம். அவற்றில் 70 சதவீத விற்பனை முடிந்து விட்டது.
மேலும் புறநகர்பகுதியான அரிய மங்களம் கோட்டத்தில் Bharath Green City Avenue என்ற பெயரில் சுமார் 26 வீடுகளைக் கட்டி வருகிறோம். 25 லட்சம் முதல் 36 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்து விற்று வருகிறோம்.
மேலும் ஒரு புதிய திட்டத்தை,திருச்சியில் முதல் தனியார் தகவல் தொழில் நுட்பப்பூங்கா (IT Park) கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறோம்’’ என நம்மிடம் உற்சாகமாகத் தெரிவித்தார்.
முகவரி:
பாரத் கன்ஸ்ட்ரக் ஷன் பாரத் பிஎஸ்டி கேஸ்டல்
ரங்கநாதபுரம்,ஸ்ரீரங்கம்,
திருச்சி- 620006
தொலைபேசி: 9842455969
இபெயில் : info@bharathconstructions.com
Web: www.bharathconstructions.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067866
|