திருச்சியில் கடந்த 35 ஆண்டுகளாக தனக்கென ஒரு நிலைத்த நற்பெயரை கொண்டிருக்கும் மிக முக்கியமான கட்டுமான நிறுவனம் அர்ஜித் பிராப்பர்டி டெவெலப்பர்ஸ். இதன் என்ஜினீயர் & பிரோமோட்டர் திரு. கெளதமன். திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அர்ஜித் ப்ராபர்டி டெவெலப்பர்ஸ் இதுவரை பல அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் சிவில் பொறியியல் பட்டம் பயின்ற கட்டட வடிவமைப்பு வல்லுநரான திரு கௌதம் 1999 ல் அர்ஜித் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தைத் துவங்கி இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை உருவாக்கியுள்ளார். அர்ஜித் நிறுவனம் தனி வீடு, அடுக்கு மாடி, வணிக வளாகம் என அனைத்து வகை கட்டுமானங்களையும் சேர்த்து ஏறத்தாழ 3 லட்சம் ச.அடி கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது.
கட்டிடத்தின் தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரும் அர்ஜித் ப்ராப்பர்டி டெவெலப்பர்ஸ் மக்களின் இன்றைய நவீன காலத்திற்கு தேவையான வசதிகள் போன்றவற்றிற்கும் அதிக கவனம் செலுத்துகிறது.
தங்களின் ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டின் தரம், லொகேஷன், கட்டட வடிவமைப்பு இந்த மூன்றிற்கும் முக்கியத்துவம் தரும் அர்ஜித் ப்ராபர்டி டெவெலப்பர்ஸ் தற்போது ஸ்ரீரங்கத்தில் “அர்ஜித் அக் ஷயம்’ என்ற புராஜெக்டையும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே “அர்ஜித் அபெக்ஸ்’ என்ற புராஜெக் டையும், திருச்சி உறையூரில் “அர்ஜித் அமேஸ்’ என்கிற புராஜெக்டையும், திருச்சி நாச்சிக்குறிச்சியில் “அர்ஜித் அனுகிரஹா’என்கிற புராஜெக்டையும் செய்து வருகிறது.
திருச்சியில் அர்ஜித் பிராப்பர்டி டெவெலப்பர்ஸ் உருவாக்கியுள்ள “அர்ஜித் வில்லா’, “ஐஸ்வர்யம்’, “அர்ஜித் எலைடா’, “அர்ஜித் ஆம்பியன்ஸ்’, “அர்ஜித் அரிஸ்ட்ரோகிராட்’ போன்ற அடுக்கு மாடி புராஜெக்ட்கள் ஒவ்வொன்றும் லேண்ட் மார்க்குகளாக உள்ளன.
“”திருச்சியில் நகரின் உள்பகுதியில் வசிக்க விருப்பப்படும் மக்கள் அடுக்குமாடி குடியிருப்பு களையும், தனி வீடுகள் விருப்பப்படுவோர் நகரின் அருகாமையிலும் இருக்க விரும்புகின்றனர். எனவே தான் நாங்கள் இரு விதமான புராஜெக்ட்களையும் செய்து வருகிறோம்’’ என்கிறார் திரு. கெளதமன்.
மேலும் விவரங்கட்கு.,
அர்ஜித் ப்ராப்பர்டி டெவலப்பர்ஸ்
E-38, 7th குறுக்கு தெரு, அர்ஜித் வில்லா, தில்லை நகர்
திருச்சி- 620018
செல்: 9842476510 / 0431-2741771
E: arjithproperty@gmail.com W: www.arjithdeveloprs.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067855
|