வாசலை அலங்கரிக்கும் பர்னிச்சர்கள்

24 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2019   12:42 PM


வீடுகளுக்கு உள்ளே இருக்கும் பர்னிச்சர் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை நமது மகிழ்ச்சிக்காகவும் வசதிக்காகவும் அமைத்துக்கொள்வது பொதுவான விஷயம். ஆனால் வீட்டுக்கு வெளியேயும் பர்னிச்சர் பொருட்களை அமைத்துக்கொண்டு வாழ்வின் மகிழ்ச்சியை பெருக்கி கொள்வது என்பது இப்போதைய நகர நாகரிகமாக மாறிவருகிறது.

வேலையை அல்லது தொழிலை கவனிக்கும் நேரம் தவிர மீதியுள்ள நேரத்தின் பெரும்பகுதி வீட்டுக்குள்தான் கழிகிறது. நகர வாழ்க்கையின் அன்றாட பரபரப்புகளுக்கு இடையில் வரக்கூடிய வீக் எண்ட் எனப்படும் வாரக்கடைசி நாட்கள் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கழிக்கும் மகிழ்ச்சியான பொழுது போக்காக மாற்றம் பெற்றிருக்கிறது.

வீட்டு வாசலில் மகிழ்ச்சி

வீட்டு வாசல், மேல்மாடி ஆகிய இடங்களில் நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மாலை தேனீர் அருந்துவது அல்லது இரவு விருந்து உண்பது இப்போதைய நாகரிகங்களில் ஒன்று.

அதற்கு வசதியாக வீட்டு வாசலில் அல்லது மேல்மாடியில் பர்னிச்சர் பொருட்களையும் சிறிய அளவிலான மேற்கூரையையும் அமைத்து கொள்வது வழக்கம். தேனீர் விருந்து மற்றும் இரவு உணவு அருந்துவதற்கேற்ப என்னென்ன வசதிகள் செய்யலாம் என்பது பற்றி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் தரும் குறிப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

காபி சேர் மற்றும் டேபிள்

வெளி வாசலில் இருக்கும் காலியிடத்தில் மாலை நேர காபி அருந்துவதற்காக சிறிய அளவில் ஒரு டேபிள் மற்றும் இரண்டு அல்லது நான்கு சேர்கள் போட்டு வைக்கலாம். வாசலில் மரங்கள் அல்லது 
செடிகொடிகள் இருந்தால் அவற்றின் அருகில் நண்பர் அல்லது குடும்பத்தாரோடு அமர்ந்து பேசியபடியே தேனீர் அருந்தலாம். இரவின் இருட்டை விலக்க 'பேட்டரி" மூலம் வெளிச்சம் தரும் விளக்குகளை டேபிள் மேல் வைத்துக்கொள்வது எளிமையான வழி. அலுமினியம் மற்றும் மரத்தாலான சிறிய அளவு காபி டேபிள்கள் இப்போது கிடைக்கின்றன.

மர பெஞ்சுகள்

எப்போதும் தமது முக்கியத்துவத்தை இழந்துவிடாத பொருட்களில் மரத்தால் செய்யப்பட்டவை முக்கியமானதாக இருக்கின்றன. மரத்தில் செய்த பர்னிச்சர் பொருட்களுக்கு உள்ள மவுசு என்றும் குறைவதில்லை. வீட்டு வாசலில் பல்வேறு பயன்பாடுகள் கொண்ட மரத்தாலான பெஞ்சுகள் அமைத்து விட்டால் பெரிய அளவிலான பராமரிப்புகள் தேவைப்படாமல் நமக்கு பலவிதங்களில் உபயோகமாக இருக்கும்.

வாசல்களில் போட்டு வைப்பதற்காக சற்றே பெரிய அளவுகளில் மரம் மற்றும் அலுமினிய பெஞ்சுகள் இருக்கின்றன. பிளாஸ்டிக் டீபாய் அல்லது மேஜையை அருகில் போட்டு அமர்ந்து தேனீர் அருந்தலாம். சிற்றுண்டிகளை சுவைத்தபடி செல்போனில் பேசலாம் அல்லது கம்ப்யூட்டர் மூலம் இணையத்தில் உலாவி மகிழலாம்.

மனதை லேசாக்கும் ஊஞ்சல்கள்

சிறுவர் முதல் பெரியவர் வரையில் எல்லோருமே ஊஞ்சலில் ஆட விரும்புவார்கள். வீட்டுக்கு உள்ளே இருப்பதை விடவும் வெளிவாசலில் ஊஞ்சல் அமைப்பது பல விதங்களில் வசதியாக இருக்கும். மழை அல்லது வெயிலால் பாதிக்காமல் இருக்க அதற்கு மேலே குடை அல்லது கூரை அமைப்புகளை ஏற்படுத்தலாம்.

அதற்காக 'பைபர்" மற்றும் 'பாலியூரித்தீன் ஷீட்" போன்றவற்றால் செய்யப்பட்டவை தயார் நிலையில் கிடைக்கின்றன. நமது தேவைக்கு ஏற்ப பல அளவுகளில் ஊஞ்சல்கள் இருப்பதால் வாசலுக்கு ஏற்ற அளவில் அழகாக பொருத்திக் கொள்ளலாம். காலை மற்றும் மாலை நேரங்களை மகிழ்ச்சியானதாக மாற்ற ஊஞ்சல் சரியான தேர்வாக இருக்கும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067895