மாநாடு என்றாலும், புதுக்கட்சி என்றாலும் திருச்சியின் எல்லையைத் தொட்டால் தான் தலைவர்களுக்கு திருப்தி. கோவைக்கும், சென்னைக்கும் இடைப்பட்ட மிதமான விலைவாசி, தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரம், வாங்கும்திறன் சிறப்பாக உடைய மக்கள் என்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தமான திருச்சி ரியல் எஸ்டேட் 2019 ல் எப்படி இருக்கும்? திருச்சி கட்டுமானத்துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? தனி வீடுகள், அடுக்கு மாடிகள் இவற்றில் திருச்சி மக்களின் முன்னுரிமை என்ன? என்பது போன்ற கேள்விகளை சில முக்கிய “துறை பிரபலங்களைக்’ கேட்டோம் .
திருச்சி ஜெயம் பில்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சி மண்டல கிரடாய் அமைப்பின் தலைவருமான திரு. ஆனந்த் பேசும்போது, “”சென்ற சில ஆண்டுகளை விட இந்த ஆண்டும் இனி வரும் காலமும் அடுக்குமாடிச் சந்தைக்கு ஏற்றதாக இருக்கும்,.திருச்சி மக்களிடையே தனி வீடுகளை விட அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு மிகையான வரவேற்பு இருக்கின்றது. இதற்குக் காரணம் குடும்ப நபர்களின் பாதுகாப்பு, அருகிலுள்ள மருத்துவ வசதி வாய்ப்புக்கள், போக்குவரத்து வசதிகள், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி வசதி, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான வசதிகள் போன்ற அனைத்தும் தான்‘’ என்றார்.
திருச்சி பிஏஐ தலைவர் திரு.சிவஞானம் கூறும் போது, கடந்த 6-7 ஆண்டுகளாகவே திருச்சி மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே சுணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் 2018 பிற்பாதியில் இருந்து தனி வீடுகளே திருச்சி புறநகர் பகுதிகளில் ஓரளவு விற்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், திருச்சி நகருக்குள் இருக்குகின்ற அடுக்கு மாடிவீடுகள் விற்பனை மந்தமாகவேஇருக்கின்றது. இந்த ஆண்டின் பிற்பாதியில் அடுக்குமாடி வீடுகளின் விற்பனை சூடு பிடிக்கும்’’ என்றவர் திருச்சி கட்டுமானத்துறையின் பெரிய பிரச்சினையாக கூறும் போது, ”மாநிலத்திற்கே ஆற்று மணல் சப்ளை செய்த ஒரு மாவட்டம் திருச்சி ஆகும். ஆனால் இப்போது திருச்சியில் ஆற்று மணல் சப்ளை கிடையாது. எம்சேண்ட் சப்ளை போதுமானதாக இருந்தாலும் தனி வீடு கட்டும் வாடிக்கையாளர்கள் ஆற்று மணலையே விரும்புகிறார்கள். அரசும் துறைக் கட்டுமானச் சங்கங்களும் இணைந்து பொது மக்களுக்கு மாற்று மணல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்தினால் தான் வாடிக்கையாளர்களை நாம் திருப்தி செய்ய முடியும்’’ என்றார்.
திருச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பே´யாட் அமைப்பின் மாநில துணைத் தலைவருமான திரு.முரளிகுமாரிடம் திருச்சி ரியல் எஸ்டேட் பற்றி பேசிய போது, “”திருச்சிரியல் எஸ்டேட் பொறுத்த வரை எவ்வித தேக்க நிலையும் இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் திருச்சியில் கட்டுமானத் துறை படிப்படையாக வேகமடைந்து வருகிறது. முதலில் இருந்த ஆற்றுமணல் பிரச்சினை இப்போது தீர்ந்து விட்டது. எம்.சேண்ட் தாராளமாக கிடைக்கிறது.
திருச்சியில் நகரத்தைப் பொறுத்த வரை அடுக்குமாடி வீடுகளும் புறநகர் பகுதிகளில் தனி வீடுகளும் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. 30 லட்சம் ரூபாய் போன்ற பட்ஜெட் வீடுகளுக்கு திருச்சியில் அதிகமான கிராக்கி இருக்கிறது. திருச்சி புறநகர் பகுதிகளான உடையம்பட்டி, சமயபுரம் போன்ற இடங்களில் வீடு விற்பனை ஜோராக நடந்து வருகிறது படிப்படியாக இது திருச்சியின் சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டுமானத்துறை வேகம் எடுக்கும் என நம்பலாம்’’ என்றார்.
அர்ஜித் ப்ராபர்டி டெவெலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. கொளதமன்,”2019-ம் ஆண்டு திருச்சி ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை மிகவும் நம்பிக் கையளிக்கும் ஆண்டாக அமையும். ரெரா சட்டம் வந்த பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் முறையாகச் செயல்படுபவர்களால் மட்டுமே நீடிக்க முடிகிறது. இதில் கடுமையான சட்ட திட்டங்கள் இருப்பதால், ஏமாற்றி தொழில் செய்வது இயலாமல்போனது. எனவே, மக்களுக்கும் இதன்மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் பல திருச்சிக்கு வர உள்ளதால் இந்த 2019 ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பாக அமையும்.
2019 ல் திருச்சி ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பலரது சொந்தவீட்டுக் கனவு நிறைவேறும் ஆண்டாக 2019-ம் ஆண்டு இருக்கும் என்றவரிடம், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் இவற்றுள் திருச்சி மக்கள் எதை விரும்புகிறார்கள்? எனக் கேட்டபோது,””திருச்சியில் நகரின் உள்பகுதியில் வசிக்க விருப்பப்படும் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளையும், தனிவீடுகள் விருப்பப்படுவோர் நகரின் அருகாமையிலும் இருக்க விரும்புகின்றனர்’’ என்றார்.
ஆதித்யா கன்ஸ்ட்ரக்rன் நிறுவன இயக்குநர் ஆர்.எஸ்.ரவி கூறுகையில், “”நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன் பொருளாதாரம் வளர்வது ஒரு காரணம். மூன்று ஆண்டுகளாக இருந்த தேக்கநிலை மாறிவருவதை உணார்கிறோம். எனவே, இந்த 2019ல் மேலும் ரியல் எஸ்டேட் வேகமெடுக்கும் என நம்பலாம்’’ என்றார்.
கே ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்rன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. கே. குமரன் கூறும்போது, “”2019 ஆண்டில் திருச்சி ரியல் எஸ்டேட் நல்ல முன்னேற்றம் வாய்ந்த ஆண்டாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில், கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த தேக்கநிலை மாறியுள்ளதாலும் அரசாங்க விதிகள் மாறியுள்ளதாலும் நல்ல முன்னேற்றப் பாதையில் செல்லும். இத்தோடு அரசாங்கமும் சிமெண்ட் மற்றும் கட்டுமானப்பொருள்கள் விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்திருந்தால் தரமான வீடு குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. மக்களின் வீடு கட்டும் கனவும் நிறைவேற வாய்ப்பு உள்ளது’’ என உறுதி படக் கூறினார்.
பாரத் கன்ஸ்ட்ரக்rன்ஸ் நிறுவனர் திரு. நூர்முகம்மது கூறுகையில்,”” திருச்சி எப்போதுமே நிதானமான வளர்ச்சியை உள்ளடக்கிய மாவட்டம் புதியதாக வந்துள்ள கட்டிட விதிகள் சிறிய அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். திருச்சியின் உறுதியான சந்தை எப்போதும் கட்டுனர்களுக்கு கை கொடுக்கும்.
மற்றபடி திருச்சி மக்களின் சாய்ஸ் எதுவென்றால், தனிவீடுதான்.நகரங்களில் அடுக்குமாடி வீடுகளே மத்தியதர மக்களுக்குச் சாத்தியம். புறநகர்களில் தனிவீடுகள் ரூ. 30 லட்சம் முதல் கிடைக்கின்றன. எனினும் மக்கள் மனதில் தனி வீட்டிற்கு தனி மதிப்பு’’ என குறிப்பிட்டார்.அப்படியயனில் தேர்தலுக்குப் பின் திருச்சியில் தினம் தினம் ரியல் எஸ்டேட் திருவிழா தானோ?
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067896
|