திருச்சி ரியல் எஸ்டேட் சிட்டியா?அவிட்டர் சிட்டியா? எது ஹாட்?

24 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2019   11:07 AM


தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள நகரம் திருச்சி. தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் 6 மணி நேரத்துக்குள் திருச்சிக்கு வந்துவிடலாம் என்பது இந்நகருக்கு உள்ள இன்னொரு சிறப்பு. புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த ஊர். சிறப்பான பள்ளி, கல்லூரிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

துப்பாக்கித் தொழிற்சாலை, பெல் நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களும் நிறைந்த ஊர் என நிறையபெருமைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நகராட்சியாக இருந்த திருச்சி நகரம், 1994-ம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக உயர்ந்தாலும் சென்னை, மதுரை, கோவை போன்ற பிற மாநகராட்சிகள் அளவுக்கு திருச்சி, ரியல் எஸ்டேட் துறையில்  எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை என்றே சொல்லலாம்.

ஆனால்,சமீபத்தில் வெளியான, வாழ்வாதாரம் மிக்க நகரங்கள் (டiஎiபெ iனெநஒ) குறித்தான ஆய்வில்  திருச்சி இந்திய அளவில் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. தண்ணீர் மேலாண்மை, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு, பூங்காக்கள நடத்தப்பட்ட  இந்த ஆய்வானது ,இந்திய அளவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்கள் குறித்து நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலையில் திருச்சி ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது?
பத்திரப் பதிவு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், பில்டர்கள், பொறியாளர்கள் என பல தரப்பினரிடம்  வீடு, மனைகளின் விலை நிலவரங்களை விசாரித்தோம். 


திருச்சியில் ஒட்டுமொத்தமாக மனை விற்பனை பெரிதும் (ரியல் எஸ்டேட்) குறைந்திருக்கிறது. இதற்கு அரசின் கொள்கைகள், திடீர் அறிவிப்புகள் மிக முக்கிய காரணமாகும். அதுவும் இல்லாமல் தேர்தலை ஒட்டி, இன்னும் ரியல் எஸ்டேட் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதாலும், வீடு வாங்கும் மக்களுக்கு ஏதுவாக அறிவிப்புகள் வெளிவரலாம் என்பதாலும் மக்கள் மனை முதலீட்டில் சற்று தயக்கம் காட்டுவதை உணர முடிகிறது.

ஆனால் வீடு, அடுக்கு மாடி விற்பனை அப்படி இல்லை. இந்த ஜனவரி முதல் கோவையைப் போன்றே திருச்சியிலும் அபார்ட்மெண்ட் டைப் வீடுகள் விற்பனை மெல்ல உயர்ந்து வருகிறது. வீடுகளை வாங்கும் மக்களின் ரசனையும், வாழ்க்கை முறையும் மாறி இருப்பதால், திருச்சியில் சீராக அடுக்குமாடிக்  கலாச்சாரம் பரவி வருகிறது. இது திருச்சி முழுக்க இன்னும் பரவவில்லை என்றாலும் முக்கியமான பகுதிகளில் அடுக்குமாடிக் கலாச்சாரம் வேறூன்றத் தொடங்கிவிட்டது.

கோவைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் மக்களுக்கான அதி உயர குடியிருப்புகள் வந்து விட்டன. 2019 கால கட்டத்தில் சென்னையை மையமாக கொண்ட நிறைய பில்டர்கள் திருச்சியிலும் தங்கள் புராஜெக்டுகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

காரணம், இன்றைய தேதியில் யாருக்கும் பொறுமையாக நிலத்தை வாங்கி மேலும் செலவழித்து வீடுகளைக் கட்ட நேரமில்லை. பொறுமையும் இல்லை. அதோடு அபார்ட் மென்ட் என்றால் குடிநீர், இதர பயன்பாட்டுக்கான தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் வசதி, வாகன பார்க்கிங் வசதி என்று சகலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டு வீடுகளைக் கட்டித்தருகிறார்கள் என்பதால் திருச்சியில் வீடு வாங்க விரும்பும் மக்கள் அடுக்குமாடியைத் தேர்வு செய்கிறார்கள்.

தற்போது திருச்சி நகரப் பகுதிகளில் பெரும்பாலான பத்திரப் பதிவுகள் அடுக்கு மாடிகளாகவே  இருக்கின்றன. அதேபோல், திருச்சியின் மையப் பகுதிகளில் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் அந்தப் பகுதிகளில் நடுத்தர மக்கள் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. 

மாறாக, திருச்சியின் புறநகர்களான டோல்கேட், துவாக்குடி, உத்தமர்கோவில், மணச்சநல்லூர், கைலா~; நகர் போன்ற பகுதிகளில் வீடுகளை வாங்கிக் கொள்கிறார்கள். அதாவது, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் காணப்படுவது போலவே, நகரங்;களில் அடுக்குமாடி சந்தையும், புற நகரங்களில் தனி வீட்டிற்கான தேவையும் பெருகி வருகிறது. இங்குள்ள  300 க்கும் மேற்பட்ட  பில்டர்கள் திருச்சி மக்களின் நாடி பார்த்து தேவைக்கேற்ப  தனி வீடு அல்லது ஃப்ளாட்டுகளைக் கட்டி விற்கின்றனர்.

திருச்சியில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பது ஒரு பெரிய சாதகம்தான். எனவே, திருச்சி புறநகர் பகுதிகளில் அதிக பத்திரப் பதிவுகள் நடக்கத் தொடங்கி இருக்கிறது. திருச்சி விலை நிலவரம் இடத்தின் வசதி களுக்கேற்ப மாறுபடும். மெயின் ஏரியாக்களில் ரோடு வசதி மற்றும் பிற வசதிகளுக்கேற்ப ஒரு சதுர அடி குறைந்தபட்சம் ரூ.3,500 -லிருந்து  தொடங்கும். தில்லை நகர் போன்ற நகர்ப்பகுதிகளில் அடுக்குமாடிக்கான விலை ரூ 8,500- ஆக தொடங்கும்.  

இதுவே ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை ரூ.3,500 என்ற ரீதியில் ஆரம்பிக்கும். திருச்சி ரியல் எஸ்டேட்டின் திடீர் தொய்வுக்கு அரசின் மனை வழிகாட்டி மதிப்பையே இவர்களும் காரணம் சொல்கிறார்கள். ( மனை மற்றும் அடுக்கு மாடி வீடுகளின் தற்போதைய மதிப்பை தனிச்செயிதில் பார்க்க..)அரசு வழிகாட்டுதல் விலை நிலவரத்தை லோக்கல் ரிஜிஸ்ட்ரர்களிடம் கலந்தாலோசிக்காமல் விலை ஏற்றியதால், இந்தத் துறையில் பெரிய சரிவு வந்தது என்கிறார்கள் 
சரி ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிவிப்பு திருச்சிக்கு பாதிப்பா? எனக் கேட்டால், துவக்கத்தில் சில முக்கிய இடங்களின் விலை மதிப்பு ஜரூராக ஏறியது. 

ஆனால், அந்த திட்டங்கள் கிடப்பி;லேயே இருப்பதால்  சொல்லிக்கொள்ளும் படி விற்பனை இல்லை என்கிறார்கள் திருச்சி ரியல் எஸ்டேட் காரர்கள்.ஆனாலும், மாநிலத்தின் முக்கியமான இதயப்பகுதி யில் அமைந்திருக்கும் நகரம், சுற்றுலாத்தலங்;கள் நிறைந்திருக்கும் நகரம்., சுகாதாரமான நகரம் என்பதால் திருச்சியின் ரியல் எஸ்டேட் சந்தை படிப்படியாக வேகம் எடுத்து பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் விறுவிறுப்பாக இருக்கும் என்பது திருச்சி ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கருத்து.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067915