திருச்சி அடுக்கு மாடிச்சந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மிக முக்கிய காரணிகளுள் திருச்சி கிரடாய் சங்கமும் (Confederation of real Estate Developers Association of India) ஒன்று. இவ்வமைப்பில் 12 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த் தற்போதைய கிரடாய் தலைவராக இருக்கிறார்.
திருச்சி கிரடாய் சங்கத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் திரு.ஆனந்த் கூறியபோது ‘‘இந்திய அளவில், 23 மாநிலங்களில் 12,000 உறுப்பினர்களையும், 189 சிட்டி சேப்டர்களையும் கொண்ட கிரடாய் சங்கம் 1995 இல் துவங்கப் பட்ட பாரம்பரியம் மிக்க சங்கமாகும். கிரடாய் இந்த அமைப்பிற்கென்று சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் திருப்தி, தரமான கட்டுமானப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டுவது, கட்டப்பட்ட கட்டிடங் களுக்கு பல ஆண்டுகள் ஆனாலும், விற்பனைக்கு பிந்தைய சேவையை செய்வது போன்ற கட்டுப் பாடுகளை பின்பற்றக் கூடியவர்கள் மட்டுமே இந்த அமைப்பில் மெம்பர்களாக ஏற்றுக் கொள்ளப் படுவார்கள். அதோடு மட்டுமின்றி கட்டுமானத் தொழில் செய்த அனுபவமும் மிகமிக அவசியம். மெம்பர் ஆகக் கூடிய ஒவ்வொருவரும் எந்தவித குற்றச் சாட்டுகளுக்கும் உட்பட்டவராக இருத்தல் கூடாது. இந்த அமைப்பு மக்களிடம் உறுப்பினர்களை பரிந்துரை செய்கிறது.
இவர்களிடம் கட்டுமானப் பணியினை எந்தவித அச்சமும் இன்றி கொடுக்கலாம் என்று வலியுறுத்துகிறது. இதிலுள்ள மெம்பர்கள் எந்தவிதமான தவறுகள் செய்தாலும், குறிப்பாக சொன்ன நேரத்தில் கட்டிடங்கள் கட்டித் தராமல் ஏமாற்றுவது, தரமற்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது போன்ற குற்றங்களை கூறி நீதி பெற வேண்டுமெனில் நீதிமன்றம் செல்லவோ, பணத்தினை செலவு செய்யவோ தேவையில்லை.
கிரடாய் அமைப்பில் ஒரு புகார் கொடுத்தாலே போதுமானது. மூன்று நபர்களைக் கொண்ட கமிட்டி மெம்பர்கள் மூலமாக இரு தரப்பினரையும் அழைத்து உண்மையான புகார்களுக்கான தீர்வுகளை ஒரே நாளில் கூறி அவர்களது குறைகளை தீர்க்கச் செய்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட நபருக்கு நிச்சயமாக நல்லதொரு தீர்வு கிடைக்கும். கிரடாய் இருக்க பயமில்லை.
ஆகவே, கிரடாய் மெம்பர்களிடம் கட்டுமானப் பணி யினைக் கொடுங்கள், அவர்கள் மூலமாக வீடுகள் வாங்குங்கள் என்று கூறுகிறோம். கிரடாய் மெம்பர்களைப் பொறுத்தவரை அனைவருமே மிகவும் நேர்த்தியாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் கிடையாது. அரசின் நேரடி அங்கீகாரம் இருப்பதனால் வாடிக்கையாளர்கள் பயப்படத் தேவையில்லை’’ என்றார். இதன் துணைத் தலைவராக திரு.ஐ.ஷாஜகான், செயலாளர் திரு.சரவணன், பொருளாளர் திரு. எஸ். மோகன் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067910
|