ஹாலந்து நாட்டில் முழுக்க முழுக்க கான்கிரீட் வார்ப்பினால் தயாரிக்கப்படுகின்ற வீடுகளுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. அது என்ன கான்கிரீட் வார்ப்பு வீடு?
பொதுவாக ஒரு வீட்டிற்கு அஸ்திவாரங்கள், செங்குத்து பில்லர்கள், கிடைமட்ட பில்லர்கள், உத்திரங்கள், கூரைகள் போன்றவை கான்கிரீட்டினால் அமையும். சுவர்கள், அறை பிரிப்புச் சுவர்கள் போன்றவை கட்டுமானக் கற்களினால் அமையும். தரைதளத்துடன் கூடிய வீடுகளுக்கு ஓடுகள் கொண்டும் கூரைகள் அமைக்கப்படும். ஆனால், ஒரு வீட்டில் கூரை ஓடுகள், சுவர்கள் பதிலாக அனைத்துமே முழுக்க முழுக்க கான்கிரீட் கொண்டு வார்க்கப்பட்டால் எப்படி இருக்கும். அதை தான் செய்து காட்டிருக்கிறார் ஹாலந்து பொறியாளர் ஜிக்.
இதில் சுவர்களுக்கு பதிலாக, சென்ட்ரிங் கம்பி கட்டப்பட்டு, இரு பக்கமும் தாங்கு பலகைகள் நிலை நிறுத்தப்பட்டு , படம் 2ல் காட்டப்பட்டுள்ளது போல, முழுவதும் கான்கிரீட் வார்க்கப்பட்டு கான்கிரீட் சுவர்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு பிறகு சாய்வு கூரைகளுடன் தாங்கு பலகைகள் அமைக்கப்பட்டு 4 அங்குல தடிமனில் கான்கிரீட் ஊற்றப்படுகிறது. தாங்கு பலகைகள் பிரிக்கப்பட்ட பிறகு, இணைப்புகள் இல்லாத ஒரே வீடாக இந்த கான்கிரீட் வீடு உருவாகிவிடுகிறது. வெயில்,
மழை, நிலநடுக்கம் எதற்குமே அசைந்து கொடுக்காத இந்த வீட்டை இடிப்பது கூட கடினம். 300 ஆண்டுகளுக்கு இந்த வீடு கொஞ்சம் கூட சிதைவுறாது என்கிறார் ஜிக். மேற்பூச்சு வேலை தேவைப்படாத இந்த உறுதியான வீட்டைக் கட்ட வழக்கதை விட அதிகமான காசு செலவாகும் என்பது மட்டும் உண்மை.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067892
|