உயர் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டிக் குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக வட்டிக் குறைப்பைச் செய்துள்ளதால், வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி வேறு வங்கிக்கு மாறுவது லாபமா?
பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஏராளமான பணம் வங்கிகள் வசம் வந்ததால், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டன. இதனால், பொதுத் துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. சில வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வங்கிகளிலோ குறைந்த அளவிலேயே வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி விகிதம் குறைந்திருப்பது புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே குறைந்த வீட்டுக் கடன் வட்டியில் கடன் பெற புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு பொருந்தும் என்றாலும், சில அடிப்படை விஷயங்களைச் செய்தால்தான் அதற்கான பலனை அனுபவிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதாவது ‘கன்வர்ஷன்’ செய்ய வேண்டும். இந்த நடைமுறை எல்லா வங்கிகளிலும் அமலில் உள்ளது. புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதப் பலனை அடைய ‘கன்வர்ஷன்’ செய்துகொண்டால்தான் முடியும். இதற்கு சிறிது செலவாகும். ‘கன்வர்ஷன்’ செய்துகொள்வதாக வங்கியில் தெரிவித்து, பணத்தை செலுத்திய பிறகு வட்டிக் குறைப்பு பலனை அனுபவிக்க முடியும்.
வழக்கமாக வீட்டுக் கடன் வட்டி குறைந்தால், செலுத்தும் தவணைத் தொகை (இ.எம்.ஐ.) குறை?
யாது. செலுத்தப்படும் தவணைக் காலம் மட்டும்தான் குறையும். ‘கன்வர்ஷன்’ செய்தாலும் தவணைக் காலம் மட்டுமே குறையும். இதுவும் சாதகமான விஷயம்தான். ஒருவர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வீட்டுக் கடன் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு 20 தவணைக் காலம் குறைந்தால் 3 லட்சம் ரூபாய் குறைந்துவிடும். ‘கன்வர்ஷன்’ செய்துகொள்ளும் வசதி மாறுபடும் வட்டியின் கீழ் கடன் வாங்கியவர்களுக்கே பொருந்தும். குறிப்பிட்ட காலம் வரை ஒரே வட்டி விகிதமே வசூலிக்கப்படும் என்பதால் நிலை
யான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்காது.
எப்போதும் வட்டி விகிதம் குறைவதையும், அதன் மூலம் தவணைத் தொகை குறைவதையும் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் அதிக வட்டிக் குறைப்பு செய்யப்படும் வங்கியின் மீது பார்வை திரும்புவதும் வாடிக் கையாளர்களுக்கு வாடிக்கை. அதிக வட்டிக் குறைப்பு வழங்கும் வங்கிக்கு செல்வது சரியா? அதிக வட்டிக் குறைப்பு வழங்கும் வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்வது சரியானதுதான்.
ஆனால், சில சாதக, பாதக விஷயங்களை இதில் பார்க்க வேண்டும். முதலில் வட்டி விகிதம் குறைப்பு வித்தியாசம் எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டும். சுமார் 1 சதவீதம் அளவுக்கு வித்தியாசம் இருந்தால் தாரளமாக வேறு வங்கிக்கு மாறுவது பற்றி சிந்திக்கலாம். இதுவே 0.50 சதவீதம் அளவுக்கு இருக்குமானால் அதே வங்கியில் தொடர்வது நல்லது. ஏனென்றால், புதிதாக ஒரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், அந்த வங்கி கடனுக்கான பிராசஸிங் கட்டணம் வசூலிக்கும்.
மேலும் கடன் வாங்கினால், வங்கி பெயரில் வீடு அடமானத்தை பத்திரவுப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து தர வேண்டும். அதற்கெனத் தனியாகச் செலவாகும். இந்தச் செலவுகளைப் பார்க்கும்போது குறைந்தபட்சம் 1 சதவீதம் அளவுக்கு வட்டி வித்தியாசம் இருந்தால் மட்டுமே லாபமாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் பழைய வங்கியிலேயே செயல்படுவது நல்லது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 6வது நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 6.25 சதவீதமாகவே நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள ரிசர்வ் வங்கி, 2017-18 நிதியாண்டில் இந்த வளர்ச்சி 7.4 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. சிஆர்ஆர் எனப்படும் மொத்த ரொக்க கையிருப்பு 4 சதவீதமாகவே நீடிக்கிறது. வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் முடிவால் தொழில்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி சீராய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்த ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன் வட்டியை கால் சதவீதம் குறைத்திருந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் ஏராளமாக குவிந்துள்ளது. இந்த தருணத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்தினாலும் அது பலன்தரப்போவதில்லை என்று கருதப்பட்டதும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் வட்டி விகிதம் குறைக்கப்படாததற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம் பரிலும் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.
எம்சிஎல்ஆர் முறைப்படி கணக்கிடு வதால், ஒருவர் 50 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியிருந்து, எம்சிஎல்ஆர் முறைப்படி 0.7 சதவீதம் வட்டி குறைந்திருந்தால் அவருக்கு மாதம் 2,496 சேமிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி - மார்ச் காலாண்டில் சில்லரை விலை பண வீக்கம் 5 சதவீதத்துக்கு கீழ் இருக்கும். பண வீக்கம் 2017-18 நிதியாண்டின் முதல் பாதியில் 4மூ முதல் 4.5மூ எனவும், பிற்பாதியில் 4.5மூ முதல் 5மூ எனவும் இருக்கும். கச்சா எண்ணெய் விலையால் பண வீக்கம் உயரும் அபாயம் உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஸ்டீல் நுகர்வு, கப்பல், சரக்கு விமான போக்குவரத்து, வெளிநாட்டு பயணிகள் வருகை போன்றவை பாதிக்கப்பட்டன. வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 6.25 சதவீதமாகவே நீடிக்கிறது.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7.4 சதவீதமாக உயரும்.ரிசர்வ் வங்கி 1935ல் தொடங்கப்பட்டது. 1949ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. முதலில் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட இவ்வங்கி, 1937 முதல் மும்பையில் இயங்கி வருகிறது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067933
|