ஒரு கட்டிடத்தை எப்படி பசுமை கட்டிடமாக அமைப்பது?

24 ஜனவரி 2024   05:30 AM 02 மார்ச் 2019   06:00 PM


நமது தமிழ்நாட்டு பருவ நிலைகளுக்குத் தக்கபடி எவ்வாறு பசுமைக் கட்டிடத்தை வடிவமைக்கலாம் என்பதைச் சுருக்கமாய் காணலாம்.

(1) ஒரு குடியிருப்புக் கட்டிடம் என்றால், அதில் வரவேற்பறை, சமையலறை, சாப்பாட்டு அறை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை, சேமிப்பறை, தியான அறை போன்ற பல்வகை அறைகள் அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் ஒவ்வொன்றின் பயன்பாடும் அவை பயன்படும் காலமும் வேறுபடுகின்றன. ஆகவே, அறைகள் அவை பயன்படுத்தப்படும் நேரங்களில், பயனீட்டாளருக்குத் தேவையான அளவில் வெப்பம், காற்று மற்றும் வெளிச்சம் நிலவும் வண்ணம் அவற்றின் இட அமைவு தெரிவு செய்யப்பட வேண்டும். 

உதாரணமாக, பகல் வேçeகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வரவேற்பறை சூரிய வெளிச்சம் மற்றும் வெளிக்காற்று உள்ளே வரும் வகையில் ஜன்னல்களுடன் கூடிய தென் திசையிலுள்ள வெளிப்புறச் சுவரை ஒட்டியும், பெரும்பாலும் காலை மற்றும் முற்பகல் வேளைகளில் அதிகமாய் பயன்படும் சமையலறை கிழக்குப்புற சுவரை ஒட்டியும், மாலை அல்லது இரவு வேளைகளில் பயன்படும் படுக்கை அறைகள் சூரிய வெளிச்சம் தேவையில்லாத, ஆனால் காற்று உள்ளே வரக்கூடிய கிழக்கு, தெற்கு அல்லது வடக்குப் பகுதியிலும் அமைக்கப்படலாம். 

சமையலறை மற்றும் கழிப்பறைகள் புகை மற்றும் நாற்றம் எளிதில் வெளியே செல்லும் வகையில் வெளிப்புறச் சுவர்களை ஒட்டி அமைக்கப்பட வேண்டும். மாலை நேர வெயிலால் ஏற்படும் வெப்ப ஊடுருவல் காரணமாய் மேற்குப்புற வெளிச்சுவரை ஒட்டிய அறைகள் இரவு நேரங்களில் வெப்பம் மிகுந்து காணப்படு
மாகையால் அவை இரவில் பயன்படும் படுக்கையறைக்கு உகந்ததல்ல.

இவ்வாறு கட்டிடம் கட்டப்படும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப அறைகளின் இட அமைவு தேர்வு செய்யப்படும் பட்சத்தில், இலவசமாய் கிடைக்கும் இயற்கை சக்திகளின் பயன்பாடு அதிகரிக்கவும், செயற்கைச் சக்தியான மின்சாரப் பயன்பாடு குறைக்கவும் படலாம். ஆகவே, பசுமைக் கட்டிட வடிவமைப்பில் அறைகளின் இருப்பிட அமைவு முக்கியத்துவம் பெறுகிறது.

(2) கட்டிடத்தின் திசையமைவு (லிrஷ்eஐமிழிமிஷ்லிஐ), அதன் தெற்கு மற்றும் வடக்கு புறங்கள் நீளமானவையாகவும், கிழக்கு மற்றும் மேற்கு புறங்கள் கட்டையானவையாகவும் கொண்ட செவ்வக வடிவில் அமைவது நல்லது.  சூரியன் கிழக்கிலிருந்து மேற்காகப் பயணிக்கையில், தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமையும் அறைகள் நாள் முழுவதும் இயற்கை வெளிச்சத்தையும், வெப்பத்தையும் பெறுபவையாக அமையும். 

மேலும், பெரும்பாலும் தெற்கு மற்றும் வடக்கு திசைகளிலிருந்து பருவக் காற்றுகள் வீசுவதால், இத்திசைகளில் நீளமும், திறப்புகளும் அதிகம் கொண்ட கட்டிடங்கள் காற்றோட்டமிக்கதாய் காணப்படுகின்றன. சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் பிற்பகல் வேளைகளில் கிழக்கிலிருந்து வீசும் குளிர்ந்த கடற்காற்று அதிகமாகக் கட்டிடத்தினுள் நுழையும் வண்ணம் கட்டிடத்தின் திசையமைவு மற்றும் திறப்புகள் அமைக்கப்படலாம்.

(3) கட்டிடத்தின் வெளிப்புற தட்பநிலை குடியிருப்போருக்கு உகந்ததாயில்லாமல் மித மிஞ்சிய அளவு வெப்பமாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்குமாயின், அந்த வெப்பம்/குளிர் கட்டிடத்திற்குள் நுழையா வண்ணம் தடுக்கப்பட வேண்டும். இதற்காக கட்டிடத்தைச் சுற்ஷீ மரங்கள் மற்றும் தாவரங்கள் வeர்க்கப்படலாம். 

கூரைத் தோட்டம் அமைக்கப்படலாம். தாவர வளர்ப்பு மேற்கொள்கையில் குறைந்த அளவு நீரை உறிஞ்சி, அதே வேளையில் அதிக அeவு பசுமையாக வளரக்கூடிய தாவரங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மேலும், இவற்றின் வேர்கள் கட்டிட அடித்தளத்திற்கு சேதம் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். இது தவிர, கூரை மற்றும் வெளிச் சுவர்களுக்கு வெப்பத் தடுப்பான் ஓடுகள் ஒட்டப்படலாம். இரசாயன மேல்பூச்சு பூசப்படலாம். கான்கிரீட், கல்நார், உலோகம் ஆகிய வெப்பக் கடத்திப் பொருட்களாலான கூரைகளின் அடியில் சற்று இடைவெளி விட்டு, வெப்பங்கடத்தாப் பொருட்களாலான பொய்க்கூரை அமைப்புகள் நிறுவப்படலாம். 

வெளிச்சத்தை அனுமதித்து,அதே வேளையில் வெப்ப ஊடுருவலைத் தடுக்கும் கண்ணாடிகள் ஜன்னல்களுக்குப் பயன்படுத்தப்படலாம். மித மிஞ்சிய வெப்பம் நிலவும் இடங்களில் கட்டிடங்களின் வெளிப்புறச் சுவர்கள், சூரிய வெப்பத்தை அதிக அளவில் கிரகித்து உட்புறம்  கடத்தக்கூடிய கான்கிரீட் மற்றும் சிமிட்டி அடிப்படையிலான பிளாக்குகளைக் கொண்டு கட்டப்படாமல், மண் அடிப்படையிலான செங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்படலாம். சிமிட்டிக் கலவைப் பூச்சுக்குப் பதில் சுண்ணாம்பு கலவைப் பூச்சு பூசப்படலாம். வெப்பத்தை கிரகிக்காமல், பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் தீட்டப்படலாம். 

கான்கிரீட் கூரைகளுக்கு மேல் செங்கல் சல்லி, செங்கல் பொடி, சுண்ணாம்பு கலவை அதற்கு தேவையான தடிமனுக்கு அளிக்கப்பட்டு அதன்மேல் நீர் புகாத, அழுத்தப்பட்ட மண் ஓடுகள் பதிக்கப்பட வேண்டும்.

(4) வீட்டினுள் தேவைப்படும் வரவேற்பறை போன்ற அறைகளுக்கு பெரிய அளவிலான ஜன்னல்களும், படுக்கையறை போன்ற அறைகளுக்கு சிறிய அeவிலான ஜன்னல்களும் அமைக்கப்படலாம். இரவு நேரங்களில் படுக்கையறைகளுக்கு இயற்கையான காற்றோட்டம் அமையும் வகையில் ஜன்னல் திறப்புகள் அமைக்கப்பட்டால், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளின் தேவை குறைந்து மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், உடலுக்கு ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.

கட்டிடப் பயன் பாட்டின்போது உற்பத்தியாகும் புகை, வெப்பக்காற்று, அசுத்தக் காற்று ஆகியவை சுத்தமான காற்றை விட எடை குறைவாக இருக்குமாதலால், இவை அறைகளின் மேல் மட்டத்தில் தங்கக் கூடியவை. இவை கீழ் மட்டத்திலுள்ள  ஜன்னல்கள் மற்றும் காற்றுப் போக்கிகள் மூலம் வெளியே செல்வதில்லை. 

இத்தகைய காற்றை வெளியேற்ற, கூரைகளிலோ, சுவரின் மேல் மட்டத்திலோ புகை போக்கிகள் மற்றும் காற்றுப் போக்கிகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைப்பதால் கூரைத் தகடுகளிலிருந்து உள்ளே கடத்தப்படும் வெப்பத்தால் சூடாகும் காற்று, அவ்வெப்பத்தை கீழ்நோக்கி கடத்தாமல், அதன் எடைக்குறைவு நிமித்தம் உடனுக்குடன் வெளியேறி விடும். 

(5) சூரிய ஒளியின் நேரடித் தாக்கம் தடுக்கப்படும் வகையில், வெளிப்புறச் சுவர்கள் மற்றும் கூரைகளில் உள்ள திறப்புகள் அனைத்திற்கும் போதிய அளவில் நீட்டப்பட்டுள்ள சூரிய மறைப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.

(6) கண்ணாடிகளில் பலவகை உள்ளன. கட்டிட இருப்பிடத்திற் கேற்றவாறு, சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு, வெளிச்சம் மற்றும் வெப்பத் தேவைக்கேற்றவாறு உரிய கண்ணாடிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். பகல் வேளைகளில் கூடிய மட்டும் இயற்கை வெளிச்சம் பயன்படுத்தப்பட்டு விளக்குகளுக்கான மின்சாரப் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். 

(7) குறைந்த அeவில் வெப்பத்தை வெளியிடும் கச்சித உமிழ்ஒளி விeக்குகள் (ளீய்ஸி) பயன்படுத்தப்பட்டு மின்பயன்பாடு குறைக்கப்பட வேண்டும்.

(8) இயற்கையாய் கிடைக்கும் சூரியசக்தி மற்றும் காற்றுவிசை மூலம் தேவைக்கேற்ப மின்சாரம் தயாரிக்கும் வகையில், கட்டிட கூரைகளின் மீது சூரிய மின்சக்தித் தகடுகள் மற்றும் காற்றாடி பொருத்தப்பட்டு, இதன்  மூலம் பிற மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

(9) கட்டிடங்களில் நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தாத வகையில் மாற்று சக்திகள் மற்றும் புதுப்பிக்கப்படக் கூடிய சக்திகள் பயன்படுத்தப்பட வேண்டும்.அதே வேளையில் பயன்படுத்த படுத்த காலியாகாத மூலப் பொருட்களான காற்று, சூரிய வெப்பம், பூமியின் உள் வெப்பம், தாவரக் கழிவு வாயுக்ககள், சாண வாயு போன்ற சக்தி ஆதாரங்கள் நிலம், நீர், காற்றை மாசுபடுத்துவதில்லை.

(10) மழைநீர் சேகரிப்பு முறை பின்பற்றப்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம் பேணப்பட வேண்டும். நீர் புக முடியாதவாறு மேற்பரப்பு மூடப்பட்ட அல்லது பூசப்பட்ட நிலப்பகுதிகளிலிருந்தும், கூரைகளிலிருந்தும் மழைநீர் குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு ஆழ்துளைகள் மூலம் நிலத்தினுள் செலுத்தப்பட வேண்டும். 

(11) கழிவுநீர் சுத்திகரிப்பு முறை பின்பற்றப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் 
மற்றும் தொட்டிகளில் சேமிக்கப்படும் மழைநீர், மறுசுழற்சி முறையில் கழிவறைகள், வாகன சுத்திகரிப்பு 
மற்றும் தோட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். 

(12) கட்டிடம் கட்டுவதற்கு குறைந்த சக்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மறுசுழற்சி அடிப்படையில் கிடைக்கக் கூடிய தரமான பொருட்கள், இரும்பு, மரம் போன்ற மறுசுழற்சிக்கேற்ற பொருட்கள், குவாரி கழிவு, எரிசாம்பல், உடைந்த செங்கல் கட்டிகள், கான்கிரீட் துகள்கள் போன்ற மறுபயன்பாட்டுப் பொருட்கள் கூடியவரை அதிக அeவில் பயன்படுத்தப்பட வேண்டும்.

(13) கூடியவரை கட்டிட இருப்பிடத்திற்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் வாகனப் பயன்பாடு குறைந்து எரிபொருள் பயன்பாடு குறையும். காற்று மாசுபடுவது குறையும். புவி வெப்பமாதல் குறையும். 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067949