பொதுவாக கூரை கான்கிரீட் உயரமான நிலையில் கற்காரை போடும் போதும், தாங்கமைப்புகள் (Form work, centering & shuttering supporting props) சரிந்து விழாமல் இருந்தால் தான் கூரை கான்கிரீட் தரமானதாக இருக்கும். சரிந்து விழாமல் இருக்க செய்ய வேண்டிய பணிகளை சற்று நோக்குவோம். 10 அடி அல்லது 12 அடி உயரத்தில் உள்ள கான்கிரீட் ஓரடுக்கு சாரம் (Single Stage) அமைத்தாலே போதுமானது. ஆனால் இரண்டு அடுக்கு / மூன்றடுக்கு (20 அடிக்கு மேலே உயரம் கொண்டவை) சாரம் அமைந்திடும் போது சரியாக வடிவமைத்து செயற்படாமல் கட்டட மேஸ்திரி சொல்வதை கேட்டுக் கொண்டு கான்கிரீட் போடுவதால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு சாரத்திற்கு இரண்டு-மூன்று சவுக்கு கொம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக கயிற்றால் கட்டியோ ஆணி அறைந்தோ நிறுத்துவது. நிறுத்தும் போதும் அடியில் பலகை கொடுத்து சம மட்டத் தரையில் நிறுத்தாது, செங்கல் கற்களை அடுக்கி அதன்மீது சவுக்கு கொம்புகளை நிறுத்துவது. மேலும் சவுக்கு கொம்புகள் 3” மிலி 4” விட்டமுடையதாகவே இருக்கும். (75மீமீ - 100மீமீ விட்டம்) 20 அடி 30 அடி உயரத்திற்கு இவை போதுமானது அல்ல. மேலும் இவை நெட்டையாக / ஒல்லியாக (போதுமான விட்டம் இல்லாமை) இருப்பதால் கான்கிரீட் சுமை வேகத்தோடு தாக்கும்போது, சவுக்கு கொம்புகள் வளைகின்றன / அல்லது முறிகின்றன. எனவே இணைத்துக் கட்டிய கயிறும் அறுந்து போகின்றன / எளிதாக கழட்டிக் கொள்கின்றன.
இத்தகைய உயரமான இடத்தில் இருந்து ஆட்கள் நடந்து நடந்து கான்கிரீட்டை விசையோடு போடுவதால் அதிர்வும், தாக்கமும் தாங்கு சாரத்தில் ஏற்படுத்துகின்றன.இதனாலும் சாரம் சரியாக சுமை கணக்கிடப்பட்டு வடிவமைக்கப் படாமையால் முறிந்து விடுகின்றது. சரிந்து சாய்கின்றன.
பல கட்டிட மேற்பார்வையாளர் கட்கும், கட்டுநர்கட்கும் தாங்கமைப்பு சாரம் போடுவதற்கென்ற தனியான சிறப்பான வடிவமைப்பு (Structural design
for centering & shuttering and props) உள்ளது என்பதே தெரியவில்லை தெரிந்தாலும் உயரமான இடங்களில் இரண்டடுக்கு / மூன்றடுக்கு சாரம் அமைக்கும் வடிவமைப்பினைச் செய்யும் திறமையும் பழக்கமுமில்லை. கட்டுமான மேஸ்திரி சொல்வதையே வேதவாக்காகக் கொண்டு திரும்ப திரும்ப விபத்துக்களை ஏர்படுத்துகின்றனர். இதற்கு கட்டடப் பொஷீயாளர்களும், கட்டட கலை வல்லுநர்கள் கூட பொறுப்பேற்க வேண்டும்.
கட்டட வரைபடங்கள் கொடுக்கும்போதோ வடிவமைப்பு கொடுக்கும்போதோ சாரம் எவ்வாறு அமைப்பது போன்ற வரைபடங்களையும் துல்லியமான மிகச் சரியான அளவுகளுடன் தரப்பட வேண்டும். இப்படி உயரமான இடங்களில் இரண்டடுக்கு /மூன்றடுக்கு சாரம் அமைக்கும்போது, சவுக்குக் கொம்புகள் / மரக் கம்புகள் கொண்டு முட்டுகள் கொடுப்பதை முழுமையும் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். அதற்கு பதிலாக எஃகுக் குழாய்கள் கொண்டு (Steel pipes 75mm to 100mm dia) 75 செ.மீ முதல் 100 செ.மீ இடைவெளியில் முட்டுகள், சமமான தளமுடைய பலகை (1 அடி x 1 அடி அளவுள்ளது) மீதோ அல்லது எஃகு தகடுகள் மீதோ நிறுத்திட வேண்டும்.
மேலும், 8 அடி உயரத்திற்கு ஒன்றாக இடையாக நான்கு திசைகளிலும் எஃகுக் குழாய்கள் 50மீமீ முதல் 75மீமீ விட்டம் கொண்ட முட்டுக்களை இறுக்கி கட்டி இணைக்க வேண்டும். இப்படி செய்வதால் இந்த முட்டுகள் சரியவோ / வளையவோ வாய்ப்பில்லாமல் போகும். மேலும் கான்கிரீட் தாங்கும் எஃகுத் தகடுகளும் வலிமை வாய்ந்தவையாக, மிகச் சரியாக கணக்கிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு அதன்படி அமைக்கப்படவேண்டும். அதற்கு கட்டடப் பொஷீ யாளர்களும் தனியே (working drawing) செயல்படுத்தும் வரைபடங்கள் கொடுக்க வேண்டும். எனவே, இனி உயரமான இடங்களில் இரண்டடுக்கு / மூன்றடுக்கு சாரம் அமைத்தல் கான்கிரீட் போடுவதற்கு முன்பாக கீழ்கண்டவைகளை சரி பார்க்க வேண்டும்.முதலில் இதற்காக வரைபடங்கள் சாரம் மற்றும் முட்டு அமைப்புகட்டு தனியாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
அவ்வாறு தயார் செய்யப்பட்டிருந்தால் வரைபடத்தின்படி முட்டுக்கள் கட்டப்பட்டுள்ளதா? என்பதனை சரிபார்த்து சான்றிதழ்கள் பொறியாளர்களால் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால் கான்கிரீட் போட அனுமதிக்க கூடாது. சாரம் அமைப்பது முட்டுக் கொடுப்பது அதற்குரிய வடிவமைப்புகளை பெற்றுக் கொண்டால்தான் கான்கிரீட் போடுவதற்கு அனுமதிக்க வேண்டும். சென்டரிங் மற்றும் கட்டுமானங்கள் கட்டப்படும் போது அதன் மீது செலுத்தப்படும் அனைத்து சுமைகளையும் (தன் சுமை + இயங்கு சுமை + பிறசுமைகள்) தாங்கும் வண்ணம் உறுதி உடையதாக அனுமதிக்கப்பட வேண்டும். சுமைகள் தாங்கமைப்புகளின் மீது ஏற்றப் படும்போது அவை வளையாமலும், ஒதுங்காமலும், திருகாமலும், ஒடிந்து விழாமலும், சரியாமலும் இருத்தல் வேண்டும்.
தாங்கமைப்புகளின் மீது தரப்படும் முட்டுக்கள் கீழே சம மட்டத்திலிருந்து உயரே மிக இருக்கமாய் (Fitting) இருக்க வேண்டும். எல்லா முட்டுக்களும், சாரக் கொம்புகலும் ஒரே நேர்க்கோட்டில் அமைத்து இரு குறுக்கு கொம்புகளுடன் இணைத்துக் கெட்டியாக கட்டப்பட வேண்டும். வேலைகள் முடித்தவுடன் தாங்கமைப்புகள் முட்டுகளும் மிக எளிதாக பிரித்தெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை சேதமில்லாமல் திரும்பத் திரும்ப பயன்படுத்த முடியும். பண்டைய காலங்களில் மரங்கள் தாங்கமைப்பாக பயன்படுத்தப்பட்டன. தற்போது எஃகு தட்டுக்களும், எஃகு குழாய்களும் மிகுதியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (Bureau of Indian Stand) இதற்கென தனியாக தரக் கையேடுகளை வழிகாட்டி முறைகளையும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதனை சட்டப்படி கட்டாயமயமாக்க வேண்டும்.
ஆர்.சி.சி கூரை தள அமைப்பின் வழி முறைகள்
சாதரணமாக ஆர்.சி.சி கூரை பீம் அமைத்து கூரை போடுவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் பீம் இல்லாமல் பெரிய ஹால், கல்யாண மஹால், பெரிய டைனிங் ஹால், பெரிய பெட் ரூம், ஹாஸ்டல், மினி ஆடிடோரியம், பெரிய ஆடிடோரியம் அமைக்க ஆசைப்படுவார்கள், பீம் அமைத்தால் அதை மறைக்க பொய் கூரை (False Ceiling)போட வேண்டும். அதற்கு சிறிது செலவாகும். எனவே பீம் இல்லாமல் ஆர்.சி.சி கூரை அமைக்க என்ன செய்ய வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067930
|