தற்போது பல சமயங்களில் தண்ணீருக்கு அடியில் கான்கிரீட் போட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கான்கிரீட்டை நல்ல முறையில் அமைக்க கீழ்கண்ட இரண்டு வித முன்னேற்பாடுகள் தேவை.
1. கான்கிரீட்டில் சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் அமைக்கும் தன்மை (Mix Proportion). தண்ணீருக்கு அடியில் கான்கிரீட் அமைக்கும் விதம் (Construction Method). முதலில் கான்கிரீட் அமைக்கும் விதத்தை பார்ப்போம். இவற்றை கவனிக்க கீழ்கண்டவை தேவை.
a. துகள் (Particle) இருக்கும் அமைக்கும் (Packing) குணாதிசையம். இதன் தன்மை மணல், அதன் கிரேடேrன், அளவு மற்றும் வடிவம் (Shape) இதை பொருத்தது.
b. தண்ணீர்/பவுடர் விகிதம், சன்னமான துகள் 0.85 - 1.0 (கன பருமன்) இருப்பது அவசியம்.
c. சிமிடி போன்ற துகள்கள், எரி சாம்பல் மற்றும் மணல் துகள் ஆவி (Silica Fume).. -. அவை கலக்கும் தன்மை (Dispersion Characteristic) இதற்கு ரசாயன கலவை (Chemical Admixture) மீதவை - இதை HRWR என கூறுவார்கள்.
2. கான்கிரீட் அமைக்கும் விதம், இதை டிரெம்மி (Tremie Concrete) கான்கிரீட் என கூறுவார்கள்.
a. இது 25cm or 30cm குழாய் (Pipe) வழியாக அமைக்கப்படும்.
b. பைப்புகளை போல்டு செய்து தயார் செய்ய வேண்டும்.
c. இணைப்புகளில் கசிவு ஏற்பட கூடாது. இதற்கு ரப்பர் காஸ்கட் உபயோகப்படுத்தலாம்.
d. டிரெம்மி குழாய் சரியான பருமன் உடையதாக இருக்க வேண்டும்.
e. அடியில் ஒரு இரும்பு தட்டினால் குழாய் மூடப்படும்.
f. கான்கிரீட்டை நிரப்பி பிறகு அதை திறந்து விட்டால் நீருக்கு அடியில் கான்கிரீட் அமையும். ஒவ்வொறு முறையும் 15cm அளவுக்கு கான்கிரீட்டை அமைக்கலாம்.
g. அடியில் இருக்கும் குழாயை கான்கிரீட்டுக்கு உள்ளே இருக்கும்படி அமைக்க வேண்டும்.
h. இவ்வாறு கான்கிரீட்டை டிரெம்மி முறை மூலம்தண்ணீருக்கு அடியில் அமைக்கலாம்.
3. தண்ணீருக்கு அடியில் அமைக்கும் கான்கிரீட்டுக்கு இருக்க வேண்டிய தன்மைகள்.
a. ஓடும் தன்மை (Flmability)
b. தானாகவே இருகும் தன்மை (Self Compaction)
c. தனிதனியே பிரியாத தன்மை (Anti segregation)
நீர்க்காத தன்மை (Shred not bleed)
e. வெப்பத்தை வெளிபடுத்தாத தன்மை (Non heat of hydration)
f. சரியான இருகும் தன்மை (Proper fitting)
g. உறுதியான பலம் (Proper comp. strength)
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067953
|